惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
小众软件
小众软件
博客园 - 叶小钗
宝玉的分享
宝玉的分享
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
Google DeepMind News
Google DeepMind News
U
Unit 42
F
Fortinet All Blogs
IT之家
IT之家
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
T
The Blog of Author Tim Ferriss
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
300 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: மாநகரப் பேருந்தில்...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொதுப் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ரூ.127 கோடியில் 164 டீசல் பேருந்துகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகள் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் 300 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் நேற்று கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், போக்குவரத்து துறை செயலர் மா.வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொத்தம் உள்ள பேருந்துகளில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு 65 பேருந்துகள், கோட்டம் வாரியாக விழுப்புரம்-36, சேலம்-39, கோவை-25, கும்பகோணம்-49, மதுரை-42, திருநெல்வேலி-44 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த பிறகு, சென்னை அண்ணா சதுக்கம் - பெரம்பூர் வழித்தடத்தில் செல்லும் 29ஏ புதிய மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணம் செய்தார்.

அந்த பேருந்து தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு கலங்கரை விளக்கம் வரை சென்றது. அதில் பயணித்த முதல்வர் விஜய், நடத்துநரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டார். நடத்துநரை தனது அருகில் அமரச் சொல்லி அவர்களது பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்கு சென்று அமர்ந்த முதல்வர், சாலையோரம் நிற்கும் பயணிகள், போக்குவரத்து ஊழியர்களைப் பார்த்து கையசைத்தபடியே, பேருந்து பயணத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். கலங்கரை விளக்கம் வரை சென்று, மீண்டும் அதே பேருந்தில், முதல்வர் தலைமைச் செயலகம் திரும்பினார்.