





















Updated on:
சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகை கவுதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள்,பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கவுதமி அதிமுகவுக்கு வருவதற்கு முன்னதாக பாஜகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。