惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
IT之家
IT之家
博客园 - 聂微东
The Cloudflare Blog
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
H
Help Net Security
博客园 - 叶小钗
V
V2EX
WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
C
Check Point Blog
B
Blog
D
DataBreaches.Net
美团技术团队
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி கோலாகல தொடக்கம்: சிறப...
2026-05-21 · via hindutamil

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர். (அடுத்த படம்) பன்முக திறனை வெளிப்படுத்தும் மலர் மங்கை.

ஆ.நல்லசிவன்

Updated on

1 min read

பழநி: ​கொடைக்​கானல் பிரையன்ட் பூங்​கா​வில் 63-வது மலர் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. இதில், ஒரு லட்​சம் கார்​னேஷன், ரோஜா மலர்​களால் அமைக்​கப்​பட்ட பாம்​பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்​லிக்​கட்டு ஆகியவை சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன.

‘மலைகளின் இளவரசி’ என்​றழைக்​கப்​படும் கொடைக்​கானலில் ஆண்​டு​தோறும் மே மாதம் கோடை விழா மற்​றும் மலர் கண்​காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்​தில் இன்​னும் துறை சார்ந்த அமைச்​சர் நியமிக்​கப்​ப​டாத​தால் இந்​தாண்டு மலர் கண்​காட்சி மற்​றும் கோடை விழாவுக்​கான தேதியை முடிவு செய்​வது, நிகழ்ச்​சிகளை ஏற்​பாடு செய்​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில் திடீரென நேற்று (மே 20) 63-வது மலர் கண்​காட்சி தொடங்​கும் என முதல்​நாள் இரவு அறிவிக்​கப்​பட்​டு, நேற்று காலை கண்​காட்சி தொடங்​கியது. இதனை ஆட்​சி​யர் சரவணன் தொடங்கி வைத்​தார். கொடைக்​கானல் தோட்​டக்​கலைத் துறை துணை இயக்​குநர் சந்​திரக​வி​தா, கோட்​டாட்​சி​யர் கீர்த்​த​னா, மாவட்ட சுற்​றுலாஅலு​வலர் கோவிந்​த​ராஜ், மாவட்ட வன அலு​வலர் அரவிந்த்,நகராட்சி ஆணையர் சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மலர் கண்​காட்​சி​யையொட்டி நடவு செய்​யப்​பட்​டிருந்த ரெனன்​குலஸ், கிளாக்​சினி​யா, ஹைப்​போயெஸ்​டெஸ், கோச்​சியா உள்​ளிட்ட 85 வகை​யான 6 லட்​சம் செடிகளில் மலர்​கள் பல வண்​ணங்​களில் பூத்​துக்​குலுங்​கிய​தால் பூங்கா முழு​வதும் வண்​ணமய​மாக காட்சி அளித்​தது.

பல வண்ண ரோஜாக்​களால் புவி​சார் குறி​யீடு பெற்ற திண்​டுக்​கல் பூட்டு நுழைவு வாயில் அமைக்​கப்​பட்​டிருந்​தது. கண்​காட்​சி​யின் சிறப்பு அம்​ச​மாக பாம்​பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்​லிக்​கட்டு காளையை வீரர் அடக்​கு​வது, பன்​முக திறமை​யின் சின்​னம் ஆகியவை ஒரு லட்​சம் கார்​னேஷன், ரோஜா மலர்​களால் அமைக்​கப்​பட்​டிருந்​தது. பல்​வேறு அரசு துறை​கள் சார்​பில் 20-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

12 நாட்​களுக்கு கண்​காட்சி நடை​பெறுகிறது. பார்​வை​யாளர்​கள் அனு​ம​திக்​கும் நேரம் காலை 8 முதல் இரவு 7 மணி வரை​ நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. நுழைவுக் கட்​ட​ணம் பெரிய​வர்​களுக்கு ரூ. 80, சிறு​வர்​களுக்கு ரூ.50 ஆக அதி​கரிக்​கப்​பட்​டுள்ளது. இது சுற்​றுலா பயணிகளிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சுற்​றுலாத் துறை சார்​பில் நடத்​தப்​படும் கோடை விழாவை நாளை (மே 22) முதல் மே 31-ம்தேதி வரை நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்ற ஆண்டை போல், இந்​தாண்​டும் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள், விளை​யாட்​டுப் போட்​டிகள், படகு அலங்​காரப் போட்​டி, ‘பாரா செயி​லிங்’ எனும் பாராசூட் சாகச நிகழ்ச்​சி, ராட்சத காற்​றாடி திரு​விழா, நாய்​கள் கண்​காட்சி நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதில் அமைச்​சர், அதி​காரி​கள், எம்​.பி. எம்​எல்ஏ மற்​றும் முக்​கியஸ்​தர்​களுக்கு அழைப்பு விடுக்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.