
























தென்காசி: குற்றாலம் காப்புக்காடு அருகில், மலையடிவார பகுதியில் ஆண் குட்டி யானை தாயை பிரிந்த நிலையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் அப்பகுதிக்குச் சென்றனர். சோர்வுடன் காணப்பட்ட யானைக்குட்டிக்கு சிகிச்சை அளித்து, உடல்நிலையை ஆய்வு செய்தனர்.
குட்டி யானையை, அதன் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குட்டியை பிரிந்த யானைக் கூட்டம் அப்பகுதியில் சுற்றித் திரிவதால் வனப்பகுதிக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வனத்துறை சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அதனை, தாய் யானையுடன் சேர்க்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。