惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
N
Netflix TechBlog - Medium
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
2026-05-24 · via hindutamil

Updated on

2 min read

பாரிஸ்: ஆண்​டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் தொட​ரான பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் பாரிஸ் நகரில் இன்று தொடங்​கு​கிறது. களிமண் தரை​யில் விளை​யாடப்​படும் இந்த தொடர் வரும் ஜூன் 7-ம் தேதி வரை நடை​பெறுகிறது. மதிப்​புமிக்க இந்​தத் தொடரில் ஆடவர், மகளிர் ஒற்​றையர் பிரி​வில் உலகின் முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோத உள்​ளனர்.

உலகின் முதல் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், இந்த சீசனில் தொடர்ந்து 29 போட்​டிகளில் வென்று அசுர ஃபார்​மில் உள்​ளார். அவருக்கு கடும் சவால் அளிக்​கக்​கூடிய ஸ்பெ​யின் நட்​சத்​திரம் கார்​லோஸ் அல்​காரஸ் காயம் காரண​மாக பிரெஞ்சு ஓபனில் விலகி உள்​ளார். இதனால் ஜன்​னிக் சின்​னர் இந்த முறை சாம்​பியன் பட்​டம் வென்று தனது ‘கேரியர் கிராண்ட் ஸ்லாம்’ கனவை நனவாக்க முயற்​சிக்​கக்​கூடும்.

செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச் தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்​டத்தை வெல்​லும் முனைப்​பில் களமிறங்​கு​கிறார். 39 வயதாகும் ஜோகோ​விச்​சுக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்​கக்​கூடும் என்​ப​தால் ரசிகர்​கள் மத்​தி​யில் பெரும் எதிர்​பார்ப்பு நில​வு​கிறது. போட்​டித் தரவரிசை​யில் 2-வது இடத்​தில் உள்ள ஜெர்​மனி​யின் அலெச்​ஸாண்​டர் ஜிவேரேவ், ஜோகோ​விச் இடம் பெற்​றுள்ள டிரா​வில் உள்​ளார். இவர்​கள் இரு​வரும் அரை இறு​தி​யில் நேருக்கு நேர் மோத வாய்ப்பு உள்​ளது.

சுவிட்​சர்​லாந்​தின் ஸ்டான் வாவ்​ரிங்​கா, பிரான்​ஸின் கேல் மான்ஃபில்ஸ் ஆகியோர் இந்த சீசனோடு ஓய்வு பெறவுள்​ள​தால், அவர்​களுக்​கும் இது கடைசி பிரெஞ்சு ஓபன் தொட​ராக அமைந்​துள்​ளது.

மகளிர் பிரி​வில் உலகின் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்​கா, ஆஸ்​திரேலிய ஓபன் வெற்​றியைத் தொடர்ந்து ஆண்​டின் 2-வது கிராண்ட் ஸ்லாமை​யும் வெல்​லக் காத்​திருக்​கிறார். இவரும் நடப்பு சாம்​பிய​னான அமெரிக்​கா​வின் கோகோ காஃபும் ஒரே பிரி​வில் உள்​ள​தால், இவர்​கள் அரை​யிறு​தி​யில் நேருக்கு நேர் மோதக்​கூடும். 4 முறை பிரெஞ்சு ஓபன் வென்று களிமண் மைதானங்​களின் ராணி​யாகத் திகழும் ஸ்வி​யாடெக், புதிய பயிற்​சி​யாளரின் கீழ் தனது உத்​தி​களை மாற்றி அமைத்து 5-வது பட்​டத்​தைக் குறி​வைத்​துப் போட்​டி​யிடு​கிறார்.

நடப்பு சாம்​பிய​னான கோ கோ காஃப், இந்த சீசனின் களிமண் தரை ஆடுகள போட்​டிகளில் சற்று தடு​மாறி உள்​ளார். எனினும் அவர், தனது பட்​டத்​தைத் தக்​க​வைத்​துக் கொள்​ளப் போராடு​வார்.

முதல் போட்​டிகள்: தொடக்க நாளான இன்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெறும் முக்​கிய ஆட்​டங்​களில் ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 98-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் பெஞ்​சமின் போன்​சி​யுடன் மோதுகிறார். 3-ம் நிலை வீர​ரான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், 80-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஜியோ​வானி எம்​பெட்சி பெரி​கார்ட்​டுடன் மோதுகிறார்.

13-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்​சனோவ், வைல்டு கார்டு வீர​ரான பிரான்​ஸின் ஆர்​தர் ஜியா​வுட​னும், 7-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் பிரிட்​ஸ், வைல்டு கார்டு வீர​ரான சக நாட்​டைச் சேர்ந்த நிஷேஷ் பசவ ரெட்​டி​யுட​னும் மோதுகின்றனர்.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெறும் முக்​கிய​மான ஆட்​டங்​களில் 8-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் மிர்ரா ஆண்ட்​ரீ​வா, வைல்டு கார்டு வீராங்​க​னை​யான பிரான்​ஸின் பியோனா ஃபெரோவுடன் மோதுகிறார். 11-ம் நிலை வீராங்​க​னை​யான சுவிட்​சர்​லாந்​தின் பெலின்டா பென்​சிக், தகுதி நிலை வீராங்​க​னை​யான ஆஸ்​திரி​யா​வின் சின்ஜா க்ராஸுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

பரிசுத் தொகை: பிரெஞ்சு ஓபன் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.550 கோடி​யாகும். ஆடவர், மகளிர் ஒற்​றையர் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வெல்​பவருக்கு தலா ரூ.25 கோடி வழங்​கப்​படும். 2-வது இடத்தை பெறு​பவர்​கள், ரூ.12.06 கோடியை பரி​சாக பெறு​வார்​கள்.