惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
H
Help Net Security
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog RSS Feed
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
GbyAI
GbyAI
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
I
InfoQ
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
Stack Overflow Blog
Stack Overflow Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பழனிசாமிக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி: பொதுச்செயலாளர...
செய்திப்பிரிவு · 2026-05-10 · via hindutamil

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள அதிமுக எம்எல்ஏ. சி.வி சண்முகம் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக எம்எல்ஏக்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on: 

சென்னை: அதிமுக தொடர் தோல்வி எதிரொலியாக பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.

ஆளும் திமுக 59 இடங்களில் மட்டுமே வென்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். அதே நேரம் அதிமுகவில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வென்றாலும், அதிமுக சார்பில் 47 பேர் மட்டுமே வென்றனர். பல தொகுதிகளில் அதிமுக 3-ம் இடத்துக்கு சென்று டெபாசிட் தொகையும் இழந்தது.

அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், கட்சி வளர்ச்சிக்கு ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருப்பதையும், எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதையும் அதிமுக தொண்டர்கள் அவமானமாகப் பார்க்கின்றனர். இதற்கு பொறுப்பேற்று பொதுச்செய லாளர் பதவியிலிருந்து பழனிசாமி விலக வேண்டும் என்ற கோஷம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

இதற்கிடையே, தவெகவுக்கு ஆதரவு கொடுத்து, ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்பது என்றயோசனையை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் முன்வைத்தனர். இதற்கு பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதேபோல், தனது தந்தையின் தோல்விக்கு காரணமான தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் உதயநிதி உறுதியாக இருப்பதாகவும், அதனால் திமுக ஆதரவுடன் பழனிசாமியை முதல்வராக்குவது என ஒரு திட்டம் தீட்டப்பட்டதாகவும், அதற்கு பழனிசாமி ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை அதிமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவளிக்க திட்டம்? இதன் தொடர்ச்சியாக, கட்சித்தாவல் தடை சட்டம் பாயாமல், 3-ல் 2 பங்கு அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளிப்பது என, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் 36 எம்எல்ஏக்கள் பங்கேற்றிருந்தனர்.அதன் பிறகு அனைத்து எம்எல்ஏக்களும் புதுச்சேரி அழைத்துச் செல்லப்பட்டு, தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று அனைவரும் சென்னை வந்தனர்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால், தவெக அழைக்காமல் அதிமுக ஆதரவளிப்பது மரியாதையாக இருக்காது. பாஜக கூட்டணியில் இருந்துவெளியேறுவதும் நியாயமாக இருக்காது என பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தனியாக ஆலோசனை நடைபெற்றது. அதில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பழனிசாமியை விலக வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழனிசாமி விரைவில் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், விரைவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.