惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
B
Blog RSS Feed
A
About on SuperTechFans
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 司徒正美
D
Docker
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
人人都是产品经理
人人都是产品经理
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை ...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று பேசிய முதல்வர் விஜய்.

Updated on: 

சென்னை: ‘‘நமக்கு எப்​போதும் தமிழகத்​தின் வளர்ச்​சி​தான் முக்​கி​யம். எனவே, மத்​திய அரசுடன் கண்​மூடித்​தன​மான மோதலை விரும்​ப​வில்​லை’’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்​று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது எதிர்க்​கட்​சிகளுக்குப் பதிலளித்து முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: நமது தமிழகம் மின்​மிகை மாநில​மாக இருந்​தா​லும், கடந்த காலங்​களில் ஏற்​பட்ட நிர்​வாக குளறு​படிகள், சிலரின் திட்​ட​மிட்ட நடவடிக்​கைகள் மின்​வெட்​டுக்​குக் காரண​மாக இருக்​கின்​றன.

விரை​வில் இந்த மின்​வெட்டு நிலைமை அறவே நீக்​கப்​படும். சட்​டம் - ஒழுங்கு சரி​யாக இருக்க வேண்​டும் என்​ப​தில் மாற்று கருத்து இல்​லை. அதே போல், பெண்​கள் பாதிக்​கப்​படு​வதை​யும் இங்கு யாராலும் சகித்​துக் கொள்ள முடி​யாது. அதற்​கான கடுமை​யான நடவடிக்​கையை அரசு எடுத்து வரு​கிறது. அதே​போல், போதைப்​பொருள் நடமாட்​டத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் நம் அரசு கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்​போம்.

இவை எல்​லாம் பல ஆண்​டு​களாக இருக்​கும் பிரச்​சினை​கள். கடந்த 10 மாதங்​களாக நமது மாநிலத்​தில் சட்​டம் - ஒழுங்கு டிஜிபி இல்​லை. கடந்த ஆட்​சி​யில் நடந்​ததற்கு எல்​லாம் நமது ஆட்​சி​யில்​தான் விடையே கண்​டு​பிடித்து இருக்​கிறோம். போதைப் பொருள் நடமாட்​டம் தாறு​மாறாக பரவி​யுள்​ளது. இவற்றை எல்​லாம் ஆரம்​பக் கட்​டத்​திலேயே யார் கட்​டுப்​படுத்தி இருக்க வேண்​டும். அப்​போது காவல் துறை யார் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது. காவல் துறையைக் கட்​டுப்​பாட்​டில் வைத்​துக் கொண்டு ஆரம்​பக் கட்​டத்​திலேயே போதைப் பொருள் நடமாட்​டத்தை ஏன் கட்​டுப்​படுத்​த​வில்​லை? நம்​முடன் சேர்த்து மக்​கள் மீதும் அவதூறு பரப்​பு​கிறார்​கள்.

மக்​கள் நமக்கு ஓட்​டுப் போட்​டதும், குடும்​பம் குடும்​ப​மாக மக்​கள் ஆதரவு தெரி​வித்​ததும் தவறு என்​கிறார்​கள். இது இப்​போது இல்​லை. எம்​ஜிஆர் காலத்​தில் இருந்தே இருக்​கிறது. எம்​ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்​போதும் மக்​களைத் தவறாகப் பேசி​யிருக்​கிறார்​கள். கடந்த 50 ஆண்​டு​களாக ஒரே ‘டெக்​னிக்'. தொழில்​நுட்​பம் எல்​லாம் மாறி வேறு எங்​கேயோ சென்று கொண்​டிருக்​கிறது. கொஞ்​சம் டெக்​னிக்​கை​யா​வது மாற்ற வேண்​டும். மக்​களுக்கு பயனுள்ள ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள் இருந்​தால் சொல்​லலாம்.

5 நிமிடம் பேசி​யதற்கே கொளத்​தூர் இந்த ஆட்​டம் ஆடியது. பேசு பேசு என்​றால் அப்​புறம் நான் என்ன செய்​வது? ஆளுநர் உரையன்​று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு. அப்​படி ஒரு நிகழ்வு நடந்​ததே இல்​லை. மரபையே மாற்றி விட்​டீர்​கள் என்று எதிர்க்​கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் கூறினர். கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்​னாள் முதல்​வர் கருணாநிதி படத்​தைத் திறந்து வைக்​கும் நிகழ்ச்சி நடந்​தது. அப்​போது, தேசிய கீதத்​தைத் தொடர்ந்து தமிழ்த்​தாய் வாழ்த்து என்று சொன்​னார்​கள்.

அது ஞாபகம் இருக்​கிற​தா? தேசிய கீதத்தைத் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்​பும், அதே நிகழ்ச்​சி​யில் 2 முறை​யும் பாடப்​பட்​டது நினை​வில் இருக்​கிற​தா? இதை கேட்​டால் அது குடியரசுத் தலை​வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்​வார்​கள். நமது அமைச்​சர்​களுக்​கும், எம்​எல்​ஏக்​களுக்​கும் ஒன்​றும் தெரி​யாது என்று சொல்​கிறார்​கள். எங்​களுக்கு ஒன்​றும் தெரி​யாது​தான். எங்​கள் எம்​எல்​ஏக்​களுக்கு மக்​கள் பணி செய்ய தெரிந்த அளவுக்​கு, மக்​கள் பணத்தை சுருட்ட தெரி​யாது​தான்.

உங்​களைப் போல் முறை​கேடு​கள் செய்​வதை நாங்​கள் தெரிந்து கொள்ள போவ​தில்​லை. நமது அரசு விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​துக்​குப் பக்க பலமாக​வும், உறு​துணை​யாக​வும் நிற்​கும். நாம் மத்​தி​யில் கூட்​டாட்​சி, மாநிலத்​தில் சுயாட்சி என்ற கொள்​கை​யைக் கொண்​ட​வர்​கள்​தான். தற்​போதைய மத்​திய அரசு சார்ந்த கட்​சி​யின் அரசி​யலில் கொள்கை அளவில் நேர் எதி​ராக நிற்​கிறோம். அதே நேரத்​தில் கண்ணை மூடிக்​கொண்டு மத்​திய அரசுடன் மோதல் போக்கை விரும்​புபவர்​கள் அல்ல. நமக்கு எப்​போதும் தமிழக வளர்ச்சி மட்​டும்​தான் முக்​கி​யம்.

அதற்​காக நம்​முடைய அரசி​யல் ரீதி​யான கொள்​கைகளை​யோ, மாநில உரிமை​களையோ கொஞ்​ச​மும் விட்டு தரமாட்​டோம். எனவே, நம் மக்​களுக்​கோ, சிறு​பான்மை சகோ​தர்​களுக்​கோ, ஆதரவு இயக்​கங்​களுக்கோ எவ்​வித சந்​தேக​மும் வேண்​டாம். நாம் யாருடைய அணி​யும் இல்​லை. மாநில உரிமை​யில் எப்​போதும் உறு​தி​யாக இருப்​போம். அரசி​யல் வேறு, மத்​திய - மாநில அரசுகளுக்கு இடையே இருக்​கும்​ நிர்​வாக அணுகு​முறை வேறு. இதில்​ தெளி​வாக இருக்​கிறோம்​. இவ்​வாறு முதல்​வர்​ விஜய்​ பேசி​னார்​.