














Updated on
:
1 min read
கோவை: “கரூரில் அரை கிராம் தங்கக் காசுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தைரியமாக தங்கக் காசுகளை விநியோகிப்பதை நான் பார்த்தது கிடையாது,” என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கவுண்டம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுடன் அவர் பேசும்போது, “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகக் கடமைக்காக வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.
சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகள் குறைவாக இருந்ததாக புகார்கள் வந்துள்ளன; சிங்காநல்லூரில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் தமிழகத்தில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்பது என் தனிப்பட்ட கருத்து. தேர்தல் ஆணையம் இன்னும் போக்குவரத்து துறைக்கு பல வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கலாம்.
கரூரில் தங்கக் காசுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தைரியமாக தங்ககாசுகளை விநியோகிப்பதை நான் பார்த்தது கிடையாது. பல இடங்களில் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。