惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
V
Visual Studio Blog
罗磊的独立博客
有赞技术团队
有赞技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Jina AI
Jina AI
量子位
云风的 BLOG
云风的 BLOG
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
P
Proofpoint News Feed
N
Netflix TechBlog - Medium
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வில்லிவாக்கம் ஏரியில் 8.5 ஏக்கரில் கூடுதல் குளம்: பணிகளை ...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: ​வில்லிவாக்கம் ஏரி​யில் 8.5 ஏக்​கரில் கூடு​தல் குளம் அமைக்​கும் பணி​களை விரைந்து முடிக்க, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​. சமீரன் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை குடிநீர் வாரி​யம் வசம் இருந்த வில்​லி​வாக்​கம் ஏரி​யில் ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​தின் கீழ் சீரமைக்க, 27.5 ஏக்​கர் கொண்ட ஏரிப் பகு​தி, மாநகராட்சியிடம் வழங்​கப்​பட்​டது.

இதில் முதற்​கட்​ட​மாக, ஏரி​யின் கொள்​ளளவு 20 ஆயிரம் கனமீட்​டரிலிருந்​து, 2.90 லட்​சம் கனமீட்​ட​ராக அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதனைத் தொடர்ந்​து, ஏரிக் கரைகள் அமைத்​தல், இருக்​கைகள் அமைத்​தல், குடிநீர் வசதி​கள் ஏற்​படுத்​துதல், நடை​பாதை அமைத்​தல், ஏரிக்கு மழைநீர் செல்ல மழைநீர் வடி​கால் பணி உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

மேலும், ஏரி​யின் குறுக்கே கண்​ணாடி தொங்​கும் பாலம் உள்​ளிட்ட பணி​கள் ரூ.7.44 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. அத்​துடன், ரூ.45 கோடி​யில் ஸ்மார்ட் சிட்டி திட்​டத்​தின் கீழ், ஏரியை சுற்றி வேலி அமைத்​தல், ஏரி மற்​றும் தொங்​கும் பாலத்​துக்கு எல்​இடி விளக்​கு​கள் பொருத்​துதல் ஆகிய பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இதில் 2-ம் கட்​ட​மாக, தனி​யார் கூட்டு பங்​களிப்பு திட்​டத்​தின் கீழ், வண்ண இசை நீரூற்​று, படகு குழாம், புல்​வெளி பாதை, சிறு​வர் ரயில், நீர்​நிலை​யில் சறுக்கு விளை​யாட்​டு, பறவை​கள் பூங்கா உள்​ளிட்ட பொழுது​போக்கு பூங்​கா​வாக அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இப்​பணி​களை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேற்று நேரில் ஆய்வு செய்​து, பணி​களை விரைந்து முடிக்க அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார். இந்த தனி​யார் கூட்டு பங்​களிப்பு மூலம் மாநக​ராட்​சிக்கு ஆண்​டுக்கு சுமார் ரூ.1 கோடி வரு​வாய் கிடைக்​கும்.

மேலும், இப்​பகு​தி​யில் தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் அறி​வுறுத்​தல்​படி, 8.50 ஏக்​கர் பரப்​பள​வில் சுமார் 60 ஆயிரம் கனமீட்​டர் நீர் கொள்​ளளவு தேக்கி வைக்​கும் வகை​யில், கூடு​தலாக ஒரு குளம் 8.5 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.7.90 கோடி​யில் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கிறது.

இதை​யும் ஆணை​யர் சமீரன் பார்​வை​யிட்​டு, பணி​களை விரைந்து முடிக்க உத்​தர​விட்​டார். இந்த ஆய்​வின் போது, மேற்​பார்​வைப் பொறி​யாளர் (சிறப்பு திட்​டங்​கள்) சுந்​தர​ராஜன், மண்டல அலு​வலர் இனியன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.