惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
WordPress大学
WordPress大学
爱范儿
爱范儿
小众软件
小众软件
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
罗磊的独立博客
博客园_首页
V
V2EX
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
IT之家
IT之家
H
Help Net Security
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை பின்பற்றி நதி நீர் பிரச...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: கென்​-பெட்வா நதி இணைப்பு திட்​டத்தை பின்​பற்​றி, மாநிலங்​களுக்கு இடையே​யான நதிநீர் பிரச்​சினை​களுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்​கள் என மாநிலங்​களை பிரதமர் மோடி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

மத்​திய மற்​றும் மாநில அரசுகளின் முயற்​சிகளை தடை​யின்றி ஒருங்​கிணைப்​ப​தன் மூலம், திட்​டங்​களை சரி​யான நேரத்​தில் செயல்​படுத்​து​வதை நோக்​க​மாகக் கொண்ட ஒரு தகவல் மற்​றும் தகவல் தொடர்பு தொழில்​நுட்​பம் சார்ந்த பன்​முக தளம் பிரக​தி. இதன் 51-வது கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இதில் 9 மாநிலங்​களை உள்​ளடக்​கிய ரயில்​வே, மின்​சா​ரம் மற்​றும் சாலைத் துறை​களைச் சேர்ந்த சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்​பிலான 7 முக்​கிய​மான உள்கட்டமைப்பு திட்​டங்​களை பிரதமர் மோடி ஆய்வு செய்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பொதுத் திட்​டங்​களை செயல்படுத்து​வ​தில் ஏற்​படும் தாமதம், திட்​டச் செலவை அதிகரிப்ப​தோடு, அத்​தி​யா​வசிய வசதி​கள்மக்​களுக்கு சரி​யான நேரத்​தில் கிடைப்​பதும் தடுக்​கப்​படு​கிறது. எனவே, திட்​டங்​களை விரை​வில் முடிக்க வேண்​டும். நகரங்​கள், குடி​யிருப்பு பகு​தி​கள் மற்​றும் பொது நிறு​வனங்​கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மின் செலவை குறைக்க, எரிசக்தி பாது​காப்பை மேம்படுத்த நகர்ப்​புறங்​களில் வீடு​களின் மேற்​கூரை​யில் சூரிய மின்​சக்தி தகடு​கள் அமைக்​கும் திட்​டத்தை துரிதப்​படுத்த வேண்டும்.

‘தூய்மை இந்​தியா இயக்​கம் 2.0' திட்​டம் மூலம் வெறும் உள்கட்டமைப்பை உரு​வாக்​கு​வதோடு நின்​று​வி​டா​மல், வழக்கமான கண்​காணிப்​பு, பொது​மக்​களின் பங்​களிப்பு மற்​றும் பல்​வேறு தரப்​பினரின் ஒருங்​கிணைப்பை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்​கள் தங்​களுக்கு இடையே​யான நதிநீர் பிரச்சினை​களை ஒத்​துழைப்​பு, சரி​யான நேரத்​தில் வழங்​கப்​படும் அனு​ம​தி​கள் மற்​றும் தொழில்​நுட்​பம் சார்ந்த கண்​காணிப்பு ஆகிய​வற்​றின் மூலம் தீர்க்க வேண்​டும்.

இதற்கு மத்​தி​யப் பிரதேசத்​தின் கென் ஆற்​றில் வரும் கூடு​தல் நீரை, உத்​தரப்​பிரதேசத்​தின் பெட்வா நதி​யில் இணைக்​கும் கென்​-பெட்வா திட்​டத்தை ஒரு முன்​மா​திரி​யாக பின்​பற்ற வேண்​டும். நதி​கள் இணைப்​பு, நீர் பாது​காப்​பு, நிலத்​தடி நீர் செறிவூட்​டல் மற்றும் திறமை​யான பாசனம் ஆகிய​வற்றை ஒருங்​கிணைந்த முறை​யில் மேற்​கொண்​டு, நீண்டகால நீர் பாது​காப்பை மாநிலங்கள் உறுதி செய்​ய வேண்​டும்​. இவ்​வாறு அவர் கூறி​னார்​.