惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
Martin Fowler
Martin Fowler
Vercel News
Vercel News
U
Unit 42
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
MyScale Blog
MyScale Blog
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
爱范儿
爱范儿
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
B
Blog RSS Feed
N
Netflix TechBlog - Medium
GbyAI
GbyAI
F
Fortinet All Blogs
MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
D
Docker
IT之家
IT之家
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
யார் இந்த ஜெகதீஷ்? - விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக...
டெக்ஸ்டர் · 2026-05-09 · via hindutamil

Updated on: 

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த அபாரமான வளர்ச்சிக்கு பின்னால் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர்தான் அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி.

சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்தியதில் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் ராஜ்ஜியம் வரை ஜெகதீஷ் மற்றும் அவரது ‘தி ரூட்’ நிறுவனம் ஆற்றிய பங்கு தற்போது மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையை ஒட்டுமொத்தமாக திருப்பியிருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு நிகரான ஒரு பிம்பமாக விஜய்யை இன்று கொண்டு வந்து நிறுத்தி இருப்பதற்கு பின்னால் பல காரணிகள் உள்ளன. அதில் ஜெகதீஷும், அவருடைய சோஷியல் மீடியா குழுவும் மிக முக்கியமான பங்காற்றியதை விவரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது.

விஜய்யின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதற்குப் பின்னால் ஜெகதீஷின் ரூட் நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ஒரு மிகப் பெரிய தரவு பகுப்பாய்வு மையமாகவும் செயல்பட்டது.

சமூக வலைதளங்களில் விஜய்யின் ரசிகர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் எந்த மாதிரியான செய்திகளைப் பகிர்கிறார்கள், எதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை ரூட் நிறுவனம் மிகத் துல்லியமாக கண்காணித்தது. இதற்காக ஆயிரக்கணக்கான டிஜிட்டல் வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களைக் கவர ஒரு தனித்துவமான அல்காரித வியூகம் வகுக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் விஜய்க்கான அல்காரிதம் எவ்வாறு இயங்குகிறது என்பதே ஓர் ஆச்சரியமான விஷயம்.

ஒரு சராசரி இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ஒரு சிறிய வீடியோவையோ அல்லது ஒரு ஹேஷ்டேகையோ பார்த்தால், அடுத்த சில நிமிடங்களில் அவரது பக்கம் முழுவதும் விஜய் தொடர்பான செய்திகளாகவே மாறும் வகையில் அல்காரித நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதைச் சாத்தியமாக்க 0 முதல் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான 'ஷேடோ ஐடிக்கள்' உருவாக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் விஜய்யின் புகழைப் பாடும் வீடியோக்களையும், அவரது அரசியல் கருத்துகளையும் தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டுக் கொண்டே இருந்தன. இதன் மூலம், ஒரு செயற்கையான 'டிஜிட்டல் அலை' உருவாக்கப்பட்டது. இதுவும் இன்று சாதாரண பயனாளர்களின் அல்காரிதத்தை ஆக்கிரமித்து, விஜய்யை ஒரு தவிர்க்க முடியாத தலைவராக உருவாக்கியுள்ளது.

இதன் மையப்புள்ளி 'ரூட் நிறுவனம் நிர்வகிக்கும் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்களில் தான் இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தலின்போது மட்டுமே வாட்ஸ்அப் குழுக்களை தொடங்குகின்றன அல்லது ஏற்கெனவே இருக்கும் குழுக்களை வீரியமாக பயன்படுத்துகின்றன. ஆனால் ஜெகதீஷின் குழு, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழகத்தின் ஒவ்வொரு ரசிகர் மன்றத்தையும் ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழுக்களை வலுப்படுத்தியது.

இந்தச் சங்கிலித் தொடர் அமைப்பில், ஒரு செய்தி கிளம்பினால், அது அடுத்த ஐந்து நிமிடங்களில் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கைபேசிக்குச் சென்றடையும் வகையில் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் விஜய் படங்கள் பற்றியும், சமூக வலைதளங்களுக்கான சினிமா கன்டெண்ட் பற்றியும் மட்டுமே பேசப்படும் இடங்களில் வலம் வந்த இந்த வாட்ஸ்அப் குழுக்களில், போகப் போக விஜய்யை ஒரு குடும்ப உறுப்பினர் போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் பகிரப்பட்டன. பின்னாட்களில் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும் இடங்களாக அவை மாறின.

இது ஒருபுறமென்றால் இன்ஸ்டாகிராம் என்பது இன்றைய இளைஞர்களின் தனி உலகம். அந்த உலகத்தின் மொழியை ஜெகதீஷ் மிகச் சரியாகப் புரிந்து கொண்டார். விஜய் புகழ் பாட, அவரது படங்களில் வரும் மாஸ் வசனங்கள் கொண்ட ரீல்ஸ்களை பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட லட்சக்கணக்கான இன்ஸ்டா ஐடிக்கள், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு விஜய்யின் ஒவ்வொரு மேடைப் பேச்சையும் துண்டு துண்டாக வெட்டி, அதற்கேற்ற பின்னணி இசை மற்றும் சினிமா எடிட்டிங் நுட்பங்களுடன் வெளியிட்டன.

இது அரசியல் ஒவ்வாத இளைஞர்களிடம் கூட ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் ஒரு ஸ்டைலான விஷயமாகக் காட்டப்பட்டது. இந்த வைரல் அரசியல் முறையும்கூட தவெகவை குறுகிய காலத்தில் ஒரு மாபெரும் சக்தியாக மாற்றியது.

இதன் பின்னணியில் இருந்த ஜெகதீஷின் திட்டமிடல் என்பது, காலம்காலமாக அரசியலில் ஊறிப்போன மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. மற்ற பெரிய அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை வெறும் அறிக்கை வெளியிடும் இடங்களாக மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால் விஜய்க்காக களமாடும் சமூக வலைதள ஐடிக்கள் இதுபோன்ற விஷயங்களை எப்போதும் சீண்டுவதில்லை.

உதாரணமாக, விஜய்க்கு எதிராக ஒரு விமர்சனம் எழுந்தால், அதைத் தர்க்கரீதியாக அணுகாமல், ஒரு மிகப் பெரிய டிஜிட்டல் தாக்குதல் மூலம் அந்த விமர்சனத்தை அமுக்கிவிடும் முறை பல ஆண்டுகளாக கையாளப்பட்டு வருகிறது. விஜய்க்கு போட்டியாக கருதப்படும் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்பே அந்த படத்தின் பெயருடன் ‘டிசாஸ்டர்’ என்று சேர்க்கப்பட்ட ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.

ஆயிரக்கணக்கான ஐடிக்கள் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வதன் மூலம், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் உத்தியை கையாள்கின்றன. இந்த நுட்பமான மேலாண்மை முறைதான் விஜய்யின் பிம்பத்தைச் சேதமில்லாமல் காப்பாற்றி வருகிறது. இத்தனை ஆண்டு காலம் சினிமா பக்கம் கவனம் செலுத்திய இந்த ஐடிக்கள் அனைத்தும் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அக்கட்சி கொடியுடன் அரசியல் பக்கம் வந்தது தற்செயலானதல்ல.

இதனை சாத்தியப்படுத்திய ஜெகதீஷ் பழனிசாமியின் வெற்றிக்குக் காரணம், அவர் விஜய்யின் மேலாளராக மட்டும் இல்லாமல், ஒரு திறமையான பிராண்ட் மேனேஜராக செயல்படுவதுதான். ஓர் அரசியல் கட்சியின் வெற்றி என்பது களப்பணியில் மட்டுமல்ல, மக்களின் மனதில் அந்தத் தலைவர் எவ்வாறு பதிய வைக்கப்படுகிறார் என்பதில்தான் இருக்கிறது. இதைச் சமூக வலைதள அல்காரிதங்கள் மூலம் சாத்தியமாக்க முடியும் என்பதைத் தமிழகத்தில் ஜெகதீஷ் நிரூபித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களின் ஒவ்வொரு நுணுக்கத்தையும், இளைஞர்களின் மனவோட்டத்தையும் மிகச் சரியாகக் கணித்து, அதற்கேற்ப ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியதுதான் விஜய்யின் வெற்றிக்கு அடிப்படை. இன்று தமிழக அரசியலில் மற்ற கட்சிகள் தங்களின் ஐடி விங்குகளை மாற்றியமைக்க முயல்வதே ஜெகதீஷ் ஏற்படுத்திய இந்தத் தாக்கத்துக்கு ஒரு சான்று. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கட்டமைப்பை தாண்டிச் செல்லவேண்டும் என்றால், அதற்கு மிகப்பெரிய ஆள்பலமும், அசுர உழைப்பும் தேவை.

துரதிருஷ்டவசமாக களப் பணியில் கவனம் செலுத்திய பெரிய கட்சிகள், ஆன்லைனில் கவனம் செலுத்த தவறிவிட்டன. இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளும் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்ட ஜெகதீஷின் பெயர் சமீபகாலமாக பொதுவெளியில் அடிபடத் தொடங்கி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் அவரை ஏதேனும் ஒரு விவகாரத்தில் சிக்க வைக்க முடியுமா என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

எப்படி இருப்பினும் தமிழகத்தின் வருங்கால அரசியலில் டிஜிட்டல் மேலாண்மை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதற்கு ஜெகதீஷ் பழனிசாமி தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தியிருக்கிறார்.