惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
N
Netflix TechBlog - Medium
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
J
Java Code Geeks
V
Visual Studio Blog
H
Help Net Security
Engineering at Meta
Engineering at Meta
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
博客园 - 【当耐特】
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
GbyAI
GbyAI
博客园 - 司徒正美
博客园 - 叶小钗
Y
Y Combinator Blog
MyScale Blog
MyScale Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உடனடி நடவ...
மு.சக்தி · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, அரசு கலைக் கல்லூரிகளின் கல்வித் தரத்தையும், மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 43% இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தவமாய் தவம் கிடந்த நிலையில், மீண்டும், மீண்டும் அழைத்தாலும் மாணவர்கள் சேர மறுக்கும் நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது.

தமிழக அரசின் உயர்க் கல்வித் துறையின் கீழ் 181 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 26,959 இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு கடந்த மே 6-ம் தேதி வெளியிடப்பட்டு, மே 7-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மே 29-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசுக் கல்லூரிகளில் சேர 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில் வெறும் 71,502 இடங்கள், அதாவது 56.32 % இடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 43.68 %, அதாவது 55,457 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட அதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரலாற்றில் இதுவரை இவ்வளவு இடங்கள் காலியாக இருந்தது இல்லை. கடந்த ஆண்டில் அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மொத்தமுள்ள 1.26 லட்சம் இடங்களில் 96 ஆயிரம் இடங்கள், அதாவது 76.20 % இடங்கள் நிரப்பப்பட்டிருந்தன. 25 % இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது தான் மாணவர் சேர்க்கையில் மிக மோசமான வீழ்ச்சியாகப் பார்க்கப் பட்டது. ஆனால், இப்போது அதையும் தாண்டி கிட்டத்தட்ட பாதிக்கு பாதி இடங்கள் நிரப்பப்படவில்லை.

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடுமையான போட்டி நிலவியது. கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பிறகும் கூட, ஆயிரக் கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் தவித்ததால் 25 % இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, அந்த இடங்களும் முழுமையாக நிரப்பப்படும் நிலை இருந்தது. ஆனால், அண்மைக் காலமாக நிலைமை மாறி வருகிறது.

தமிழக அரசே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2022- 23ம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். 2023- 24ம் ஆண்டில் 171 கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5,258 ஆகக் குறைந்தது. அதற்கு அடுத்த ஆண்டில், 172 அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 98,885 மாணவர்கள் மட்டும் தான். 2025- 26ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 96,000 ஆக வீழ்ச்சியடைந்தது. ஆனால், அதையும் தாண்டி நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதல பாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.70,000 வரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அரசு கல்லூரிகளை புறக்கணித்து விட்டு, தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு முதன்மைக் காரணம் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித் தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமடைந்து வருவது தான்.

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகக் கிடக்கும் முதல்வர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதேபோல், மொத்தமுள்ள சுமார் 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 9,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரிகளில் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களே இல்லாத நிலையில், கல்வித் தரம் மோசமடைந்து வருகிறது. அதனால் தான் அண்மைக் காலமாக மாணவர்கள் அரசு கல்லூரிகளை புறக்கணித்து தனியார் கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் தான், அரசு கல்லூரிகள் மீதான மாணவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2,708 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட போதிலும் அவர்களில் 5 பேர் மட்டுமே இதுவரை நியமிக்கப்படுள்ளனர். இதே நிலை நீடித்தால் அரசு கல்லூரிகளின் கல்வித் தரம் மேகும் வீழ்ச்சியடைந்து விடும்.

அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அதன் மூலம் அரசு கலைக் கல்லூரிகளின் கல்வித் தரத்தையும், மாணவர் சேர்க்கையையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.