惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
量子位
GbyAI
GbyAI
腾讯CDC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
Jina AI
Jina AI
IT之家
IT之家
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் ...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் இன்று நடை​பெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை பால​வாக்​கத்​தில் முதல்​வர் விஜய் முகாமை தொடங்கி வைக்​கிறார்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக ஆண்​டு​தோறும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. அதனால், தற்​போது ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது.

அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான போலியோ சொட்டு மருந்து வழங்​கும் முகாம் நாடு​முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. சென்னை பால​வாக்​கத்​தில் உள்ள ஆதி திரா​விடர் நல உயர்​நிலைப்​பள்ளி வளாகத்​தில், போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று காலை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்​ளார். தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தி​லுள்ள அரசு மருத்​து​வ​மனை​கள், அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் மற்​றும் முக்​கிய இடங்​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் நடை​பெறும் முகாம்​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட​வுள்​ளது.

நடமாடும் குழுக்​கள் ஏற்பாடு: பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள், விமான நிலை​யங்​கள், சோதனைச்​சாவடிகளி​லும் சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் செல்ல முடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொட்​டுமருந்து வழங்​கும் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​கின்​றனர்.

தேசிய தடுப்​பூசி அட்​ட​வணைப்​படி ஏற்​கெனவே குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டிருந்​தா​லும் முகாம் நாளில் மீண்​டும் சொட்டு மருந்து வழங்​கப்பட வேண்​டும். அண்​மை​யில் பிறந்த குழந்​தைகளுக்​கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்​பது அவசி​ய​மாகும். விடு​பட்ட குழந்​தைகளுக்கு முகாம் முடிந்த பிறகு 29, 30-ம் தேதி​களில் தற்​காலிக மையங்​களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்​னையைப் பொருத்​தவரை 5 வயதுக்கு உட்​பட்ட சுமார் 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்​ப​தற்கு 1,641 மையங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சொட்டு மருந்​து வழங்​கும்​ பணி​யில்​ 6,564 பேர்​ ஈடு​படு​கின்​றனர்​.