惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
C
Check Point Blog
G
Google Developers Blog
博客园 - 司徒正美
量子位
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
Google DeepMind News
Google DeepMind News
F
Fortinet All Blogs
A
About on SuperTechFans
美团技术团队
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The Cloudflare Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை - நீட் மறுதேர்வை முன...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நீட் மறு​தேர்வை முன்​னிட்டு ஜூன் 22-ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்டு உள்ளது.

மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடை​பெற்​றது. வினாத்​தாள் கசிவு காரண​மாக இந்த தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது. வரும் 21-ம் தேதி நீட் மறு​தேர்வு நடைபெற உள்​ளது. இதில் வினாத்​தாள் கசிவை தடுக்க பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு உள்​ளன. நீட் மறு​தேர்வு வினாத் ​தாளை தயாரித்த பேராசிரியர்​கள் ரகசிய இடத்​தில் தங்க வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

அவர்​கள் மொபைல்​போன் பயன்​படுத்த தடை விதிக்​கப்​பட்டு உள்ளது. கடந்த மே 3-ம் தேதி தேர்​வின்​ போது அஞ்​சல் துறை வாகனங்​கள் மூலம் பல்​வேறு நகரங்​களுக்கு வினாத் ​தாள்​கள் கொண்டு செல்​லப்​பட்​டன. இந்த முறை விமானப் படை ஹெலிகாப்​டர்​கள் மூலம் நீட் மறு​தேர்வு வினாத்​ தாள்​களை கொண்டு செல்ல ஏற்​பாடு செய்​யப்​பட்டு இருக்​கிறது.

கடந்த மாத நீட் தேர்​வின்​போது டெலிகி​ராம் செயலி மூலம் வினாத் ​தாள் விற்​பனை செய்​யப்​பட்​டது சிபிஐ விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. இதை கருத்​தில் கொண்டு ஜூன் 22ம் தேதி வரை இந்​தி​யா​வில் டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்கப்​பட்டு உள்​ளது. மேலும் நீட் மறு​தேர்​வுக்​குப் பிறகு வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஜூன் 30-ம் தேதி வரை டெலி கிராம் செயலி​யில் எடிட்​டிங் வசதி முடக்​கப்​பட்டு உள்​ளது. இதற்கான உத்​தரவை மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்பதுறை பிறப்​பித்​திருக்​கிறது.

இதுகுறித்து நீட் தேர்வை நடத்​தும் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதும் மாணவ, மாண​வியரின் நலனை கருத்​தில் கொண்டு டெலிகி​ராம் செயலிக்கு தற்​காலிக தடை விதித்த மத்​திய மின்​னணு, தகவல் தொழில்​நுட்ப அமைச்சகத்​துக்கு என்​டிஏ நன்றி தெரிவிக்​கிறது.

கடந்த சில வாரங்​களாக பேப்​பர் லீக்டு நீட், ரீ- நீட் 2026, பிரைவேட் மாஃபி​யா, ரீ- நீட் மாபியா மற்​றும் அது​போன்ற பெயர்​களில் டெலி கி​ராம் செயலி​யில் பல்​வேறு மோசடி கும்​பல்​கள் செயல்​பட்​டன. இந்த கும்​பல்​கள் நீட் மறு​தேர்வு எழுதும் மாணவர்​கள், குடும்பத்தினரை டெலிகி​ராம் வாயி​லாக அணுகி சில ஆயிரம் முதல் பல லட்​சம் வரை கோரின.

இது தொடர்​பாக அகம​தா​பாத் சைபர் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 8 டெலி கி​ராம் சேனல்​களை முடக்​கினர். இந்த சேனல்​களை இயக்கிய மோசடிக் கும்​பலின் உறுப்​பினர்​கள் கைது செய்யப்பட்டு உள்​ளனர். ஒரு மாதத்​தில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோரை தொடர்பு கொண்ட மோசடி கும்​பல் சுமார் ரூ.1.5 கோடி வரை பணம் பறித்​திருக்​கிறது. இவற்றை கருத்​தில் கொண்டு ஜூன் 22ம் தேதி வரை டெலி கி​ராம் செயலிக்கு தற்​காலிக​மாக தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

நேர்​மை​யாக, நம்​பக​மான முறை​யில் நீட் மறு ​தேர்வு நடத்​தப்​படும் என்று என்​டிஏ உறுதி அளிக்​கிறது. மாணவர்​கள் சமூக வலை​ தளங்​களில் வெளி​யாகும் வதந்​தி​கள், தவறான தகவல்​களை நம்​பக்​கூ​டாது. மொபைல்​போன், சமூக வலை ​தளம் வாயி​லாக மோசடி கும்​பல்​கள் தொடர்பு கொண்​டால் 1930 எண், http://cybercrime.gov.in இணை​யத்​தில் புகார் செய்​ய​லாம். மேலும் என்​டிஏ​வின் உதவி எண்​கள் 011- 4075 9000 / 011- 6922 7700 மற்​றும் neetug@nta.ac.in மின்​னஞ்​சலிலும் புகார்​களை பதிவு செய்​ய​லாம். இவ்​வாறு என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.

கைதானவர் தேர்வு எழுத அனு​மதி: நீட் வினாத் ​தாளை ரூ.10 கோடிக்கு விற்ற குற்​றச்​சாட்​டின் பேரில் ஹரி​யா​னா​வின் குர்கானை சேர்ந்த மாணவர் யஷ் யாதவ் கைது செய்​யப்​பட்​டு, திகார் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். இதனிடையே அவருடைய மனுவை வி​சா​ரித்த டெல்லி நீதி​மன்​றம், நீட் மறுதேர்வு எழுத அனு​மதி வழங்​கியது. சிறை அதி​காரி​கள்​ அவரை அழைத்​துச்​ செல்​ல​வும்​ உத்​தரவிட்​டது.