惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
F
Fortinet All Blogs
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
C
Check Point Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
美团技术团队
D
Docker
博客园 - Franky
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 【当耐特】
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய்க்கு ஆதரவு இல்லை: அதிமுக திட்டவட்ட அறிவிப்பு
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘‘எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவு தர பழனிசாமி மறுத்தால் என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

தவெகவுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அப்படி செய்தால் அதிமுக அழிவுப் பாதைக்கு சென்று விடும். மக்களின் பேராதரவு தவெகவுக்கு உள்ளதால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.

அதனால் 3-ல் 2 பங்கு அதாவது சுமார் 32 எம்எல்ஏ.க்களைப் பிரித்து தனி அணியாக தவெகவுக்கு ஆதரவு தரலாம். அதற்கு நிதியுதவி அளிக்க லீமா ரோஸ் உதவுவார் எனவும் அந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

அதில், ‘‘தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்றால், அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும். வெளியில் இருந்து ஆதரவு அளித்தால், தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டியது தானே என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும். அதனால், தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை’’ என்று முடிவெடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ‘‘தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் தவறான செய்தி. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்தார்.

புதுச்சேரி பயணம்: அதிமுக வசம் 47 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். தவெக ஆட்சி அமைக்க எம்எல்ஏ.க்கள் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது. தவெக.வில் உள்ள செங்கோட்டையனுக்கு சவால் விட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க, 32 எம்எல்ஏ.க்களை தவெக பக்கம் இழுக்கலாம். இல்லாவிட்டால், 10 எம்எல்ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, சட்டப்பேரவையில் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, அதிமுக எம்எல்ஏ.க்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. அதனால் அதிமுக எம்எல்ஏ.க்களை பழனிசாமி நேற்று இரவு புதுச்சேரி அழைத்து சென்றுள்ளார். அங்கு ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக அன்புமணி ஆலோசனை: பாமகவிடம் தவெக தரப்பு ஆதரவு கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவெக விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்குப் பின்னர் அன்புமணியிடம், ‘தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘வணக்கம். நன்றி’ என்று பதில் அளித்தார்.