惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
人人都是产品经理
人人都是产品经理
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
小众软件
小众软件
IT之家
IT之家
腾讯CDC
月光博客
月光博客
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்​டப்​பேர​வை​யில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்​டும்: த...
2026-05-13 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்​பான்​மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு சட்​டப்​பேர​வை​யில் இன்று (மே 13) நடை​பெறுகிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழகம்​(தவெக) 108 தொகு​தி​களில் வெற்​றி பெற்​றது. தனிப் பெரும்​பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக, ஐயூஎம்​எல் ஆகிய திமுக கூட்​டணி கட்​சிகளிடம் விஜய் ஆதரவு கோரி​னார். அதில் 5 எம்​எல்​ஏக்​களை கொண்ட காங்​கிரஸ், திமுக கூட்​ட​ணியை முறித்து கொண்டு தவெக​வுக்கு ஆதரவு அளித்​தது.

மேலும் தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிப்​ப​தாக தலா 2 எம்​எல்​ஏக்​களை கொண்ட இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் ஆகிய கட்​சிகள் அறி​வித்​தன. இதன்​மூலம் தவெக​வின் பலம் 120-ஆக உயர்ந்​தது. ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை எண்​ணிக்கை கிடைத்​த​தால் கடந்த 10-ம் தேதி தமிழக முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்றார். 9 அமைச்​சர்​களும் பதவி ஏற்​றனர். அதைத் தொடர்ந்து சட்​டப்​பேரவை தற்​காலிக தலை​வ​ராக கருப்​பையா நியமிக்​கப்​பட்​டார். பின்​னர் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில் முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் உட்பட 233 எம்​எல்​ஏக்​கள் பதவி​யேற்​றுக் கொண்​டனர்.

2-வது நாளான நேற்று சட்​டப்​பேர​வை​யின் நிரந்தர தலை​வர் மற்​றும் துணைத் தலை​வரை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. தவெக சார்​பில் பேர​வைத் தலை​வர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி எம்​எல்​ஏ​வான ஜேசிடி பிர​பாகரும், துணைத்​தலை​வர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்​எல்​ஏ​வான ரவிசங்​கரும் போட்​டி​யின்றி தேர்​வாகி பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

இந்​நிலை​யில் புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு தனது பெரும்​பான்​மையை சட்​டப்​பேர​வை​யில் மே 13-ம் தேதிக்​குள் (இன்​று) நிரூபிக்க வேண்​டும் என்று ஆளுநர் அர்​லேகர் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளார். அதன்​படி தவெக அரசு பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் தீர்​மானம் சட்​டப்​பேர​வை​யில் இன்று கொண்டு வரப்​பட்டு வாக்​கெடுப்பு நடை​பெற உள்​ளது.

இதற்​கிடையே, இரு தொகு​தி​களில் வெற்றி பெற்​ற​தால் திருச்சி கிழக்​கில் முதல்​வர் விஜய், ராஜி​னாமா செய்​து​விட்​டார். மேலும், திருப்​பத்​தூரில் ஒரு ஓட்​டில் வென்ற தவெக எம்​எல்ஏ சீனி​வாச சேதுபதி வாக்​கெடுப்​பில் பங்​கேற்க உயர்​நீ​தி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதனால் தவெக வெற்​றி​பெற்ற 108 தொகு​தி​களில் கையில் 106 எம்​எல்​ஏக்​கள் தான் இருக்​கின்​றனர். தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்​துள்ள காங்​கிரசிடம் 5, விசிக, இந்​திய கம்​யூ. மார்க்​சிஸ்ட், ஐயூஎம்​எல் ஆகிய கட்​சிகளிடம் தலா 2 வீத​மாக 8 இடங்​கள் என மொத்​தம் 119 இடங்​கள் உள்​ளன. இதன்​மூலமே தவெக​வுக்கு பெரும்​பான்​மைக்கு தேவை​யான இடங்கள் கிடைத்து​ விட்​டன.

இதுத​விர தவெக​வுடன் கூட்​டணி அமைத்​து, பெரும்​பான்​மையை நிருபிப்​ப​தில் விஜய்க்​கு, அதி​முக​வில் சி.​வி.சண்​முகம், எஸ்.பி.வேலுமணி தலை​மையி​லான ஒருதரப்பு எம்​எல்​ஏக்​கள் ஆதர​வளிப்​ப​தாக அறி​வித்​துள்​ளனர். அந்த அணி​யில் சுமார் 30 எம்​எல்​ஏக்​கள் வரை உள்​ள​தாக கூறப்​படு​கிறது. அதே​போல், அமமுக​வின் எம்​எல்ஏ காம​ராஜ், தவெகவை ஆதரிப்​ப​தாக சட்​டப்​பேர​வை​யில் வெளிப்​படை​யாக அறி​வித்​து​விட்​டார். தவெக​வுக்கு ஆதரவு பலம் 150 வரை இருப்​ப​தால் பெரும்​பான்​மையை நிரூபித்து ஆட்​சியை தக்​கவைப்​ப​தில் விஜய்க்கு சிக்​கல் இருக்​காது என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

திமுக புறக்​கணிப்​பு? - ஆட்​சியை தக்க வைப்​ப​தற்கு தேவை​யான பெரும்​பான்மை பலம் தவெக​வுக்கு இருப்​ப​தால் வாக்​கெடுப்பை புறக்​கணிக்க திமுக, அதி​முக​வில் இபிஎஸ் தரப்​பு, பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்துள்ளன.