惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
aimingoo的专栏
aimingoo的专栏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
Blog — PlanetScale
Blog — PlanetScale
大猫的无限游戏
大猫的无限游戏
Vercel News
Vercel News
D
DataBreaches.Net
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
F
Fortinet All Blogs
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
G
Google Developers Blog
腾讯CDC
博客园_首页
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோல் கீப்பர் அலிரேசா பெய்ரான்வந்த் அபாரம்: பெல்ஜியம் - ஈர...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்​தில் ‘ஜி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் பெல்ஜியம் - ஈரான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் கோல்களின்றி டிரா​வில் முடிவடைந்​தது.

பெல்ஜியம் அணி மொத்​தம் 23 முறை கோல் அடிக்க முயற்​சித்​தது. அதில், 7 முயற்​சிகள் இலக்கை நோக்கி பாய்ந்​தன. ஆனால் ஈரானின் கோல்​கீப்​பர் அலிரேசா பெய்​ரான்​வந்த் 7 முறை​யும் பெல்​ஜி​யத்​தின் கோல் அடிக்​கும் கனவைத் தகர்த்​தார்.

குறிப்​பாக 2-வது பாதி​யின் தொடக்​கத்​தில் பெல்​ஜி​யம் வீரர் மாக்​சிம் டி கியூப்​பர் அடித்த பந்தை அவர், பாய்ந்​த​படி ஒற்றை கையால் தடுத்த விதம் அற்​புத​மான​தாக இருந்​தது. 84-வது நிமிடத்​தி​லும் டி கியூப்​பரின் கோல் அடிக்​கும் முயற்​சிக்கு முட்​டுக்​கட்டை போட்​டார் பெய்​ரான்​வந்த்.

முன்னதாக ஆட்​டத்​தின் 24-வது நிமிடத்​தில் ஈரானின் மெஹ்தி தாரெமி ஃப்​ரீ-கிக் வாய்ப்​பைப் பயன்​படுத்தி கோல் அடித்​தார். ஆனால் வீடியோ அசிஸ்​டெண்ட் ரெஃப்ரீ (விஏஆர்) சோதனை​யில் அது ஆஃப்​சைட் என அறிவிக்​கப்​பட்டு கோல் மறுக்​கப்​பட்​டது. 66-வது நிமிடத்​தில் பெல்​ஜி​யம் அணிக்கு பின்​னடைவு ஏற்​பட்​டது.

ஈரானின் மெஹ்தி தாரெமியை பின்​னால் இருந்து இழுத்து கீழே தள்​ளியதற்​காக பெல்​ஜி​யத்​தின் சென்​டர்​-பேக் டிஃபென்​டர் நாதன் கோய் நேரடி​யாக சிவப்பு அட்டை காட்​டப்​பட்டு மைதானத்​திலிருந்து வெளி​யேற்​றப்​பட்​டார்.

இதனால் ஆட்​டத்​தின் கடைசி 25 நிமிடங்​கள் பெல்​ஜி​யம் 10 வீரர்களு​டன் விளை​யாட வேண்​டிய கட்​டா​யத்​துக்கு தள்ளப்பட்டது. எனினும் இந்த பகு​தி​யில் ஈரானிடம் இருந்து கோல் வாங்​காமலும் பெல்​ஜியம் அணி பார்த்​துக் கொண்​டது. ஆட்டத்தின் முதல் 60 நிமிடங்​களில் பெல்​ஜி​யம் அணி பந்தை முழு​மை​யாகத் தன் கட்​டுப்​பாட்​டில் வைத்​திருந்​தா​லும், ஈரான் அணி அதற்கு இணை​யாக எதிர்​-​தாக்​குதல்​களை தொடுத்​தது.

ஈரான் கோல்​கீப்​பர் பெய்​ரான்​வந்த் ஆக்​ரோஷ​மாக​வும் வியத்​தகு முறை​யிலும் பந்​துகளைத் தடுத்​தார் என்​றால், அதற்​குச் சற்​றும் சளைக்​காமல் பெல்​ஜி​யத்​தின் கோல்​கீப்​பர் திபோ கோர்ட்வா அமை​தி​யாக​வும் துல்​லிய​மாக​வும் செயல்​பட்டு ஈரானின் கோல் முயற்​சிகளை முறியடித்​தார். பெய்​ரான்​வந்தின் அசாத்​தி​ய​மான செயல் திறன்​களுக்கு நிக​ராக கோர்ட்​வா​வும் பல ஆபத்​தான பந்துகளைத் தடுத்து பெல்​ஜி​யம் அணிக்கு அரணாக விளங்கினார்.

இரு நாட்டு கோல்​கீப்​பர்​களின் உலகத்​தரம் வாய்ந்த செயல்திறனே போட்டி 0-0 என சமனில் முடிய முக்​கிய காரணமாக அமைந்​தது. நடப்பு தொடரில் பெல்​ஜி​யம் அணிக்கு இது 2-வது டிரா​வாக அமைந்​தது. அந்த அணி எகிப்​துக்கு எதி​ரான ஆட்​டத்தை 1-1 என டிரா​வில் முடித்​திருந்​தது.

2 டிராக்​கள் மூலம் பெல்​ஜி​யம் அணி 2 புள்​ளி​களு​டன் தனது பிரிவில் 3-வது இடத்​தில் உள்​ளது. ஈரான் அணிக்​கும் இது 2-வது டிரா​வாக அமைந்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் நியூஸிலாந்​துக்கு எதி​ராக 2-2 என்ற கணக்​கில் டிரா செய்திருந்தது.

தற்​போதைய டிரா​வின் மூலம் 2 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் 2-வது இடத்​தில் உள்​ளது. ஈரானும், பெல்​ஜிய​மும் ஒரே புள்​ளி​களை பெற்​றிருந்த போதி​லும் கோல்​கள் வித்​தி​யாசத்​தின் அடிப்படையில் ஈரான் அணி 2-வது இடத்​தில் உள்​ளது.

பெல்​ஜி​யம் அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 27-ம் தேதி நியூஸிலாந்​துடன் மோதுகிறது. அன்​றைய தினம் நடை​பெறும் மற்றொரு ஆட்​டத்​தில் ஈரான், எகிப்து அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டங்​களின் வெற்​றியை பொறுத்​தே பெல்ஜியம்​, ஈரான்​ அணி​களின்​ அடுத்​த கட்​ட வாய்​ப்​பு தெரியவரும்.