惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
G
Google Developers Blog
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
IT之家
IT之家
N
Netflix TechBlog - Medium
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் - இன்று லக்னோ சூப்பர் ஜெயண...
2026-05-19 · via hindutamil

Updated on

2 min read

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ரியான் பராக் தலை​மையி​லான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 12 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது ராஜஸ்​தான் அணி.

அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யின் பின்​வரிசை பேட்​டர்​களின் சரிவு மற்​றும் மோச​மான ஃபீல்​டிங், எந்தவித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாத பந்​து​வீச்சு ஆகிய​வற்​றால் ராஜஸ்​தான் அணி தோல்வி அடைய நேரிட்​டது. ராஜஸ்​தான் அணி அதிரடி​யான தொடக்​கத்​தைப் பெற 15 வயதான வைபவ் சூர்யவன்​ஷியையே பெரிதும் நம்​பி​யிருக்​கிறது.

ஆனால் மற்​றொரு தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலிடம் இருந்து தொடர்ச்​சி​யான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. நடு​வரிசை​யில் துருவ் ஜூரல் சிறந்த சில இன்​னிங்​ஸ்​களை விளையாடி​யுள்​ளார். ஆனால் நேற்று முன்​தினம் டெல்லி அணிக்கு எதி​ராக அவர் விளை​யாடிய இன்​னிங்ஸ் சற்று மந்​த​மான​தாகவே இருந்​தது. ஏனெனில் மறு​முனை​யில் விக்​கெட்​டு​கள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருந்​தன.

ரியான் பராக் கடந்த சில போட்​டிகளில் தனது ரன் குவிக்​கும் வேகத்தை அதி​கரித்​துள்​ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும். இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி வெற்றி பெற வேண்​டு​மா​னால் பேட்​டிங், பந்​து​வீச்​சு, பீல்​டிங் என அனைத்து துறை​யிலும் மேம்​பட்ட திறனை வெளிப்​படுத்த வேண்​டும். ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​களுடன் பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்​து​விட்​டது.

எனினும் எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் ஆறு​தல் வெற்றி பெற்று தொடரை கவுர​வ​மான முறை​யில் நிறைவு செய்ய முயற்சிக்கக்கூடும். லக்னோ அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணியை 7 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 188 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி 20 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.

மிட்​செல் மார்ஷ் 38 பந்​துகளில் 90 ரன்​கள் விளாசி மிரட்டியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். இன்​றைய போட்டி நடை​பெறும் சவாய் மான் சிங் மைதானத்​தில் நடப்பு சீசனில் ராஜஸ்​தான் அணி 3 ஆட்டங்களில் விளை​யாடி ஒன்​றில் கூட வெற்றி பெற​வில்​லை. இந்த 3 ஆட்​டங்​களி​லும் 220 ரன்​களுக்​கு மேல்​ குவிக்கப்பட்டிருந்தது. இத​னால்​ இன்​றைய ஆட்​டத்​தி​லும்​ முதலில் பேட்​ செய்​யும்​ அணி பெரிய அளவில்​ ரன்​ வேட்​டை நிகழ்​த்​த முயற்சி செய்​யக்​கூடும்​.