惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
WordPress大学
WordPress大学
D
DataBreaches.Net
腾讯CDC
小众软件
小众软件
B
Blog RSS Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Y
Y Combinator Blog
V
V2EX
I
InfoQ
D
Docker
量子位
N
Netflix TechBlog - Medium
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கும்பகோணம் அருகே சேமிப்பு கிடங்கில் ஆயிரக்கணக்கான நெல் மூ...
சி.எஸ். ஆறுமுகம் · 2026-06-20 · via hindutamil

Updated on: 

கும்பகோணம்: பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் பெய்த கனமழையில் நனைந்து 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமாகின.

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 வட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க பட்டீஸ்வரத்தில் 15 ஏக்கரில் 1 அட்டிகைக்கு 3150 நெல் மூட்டைகள் வீதம் 480 அட்டிகைகளுடன் கூடிய திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு கடந்த பிப். 2-ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

இந்த நிலையில், அண்மைக் காலமாக கும்பகோணம் பகுதியில் மழை பெய்து வருகிறது, நேற்று 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சேமிப்பு கிடங்கு அட்டிகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சரிந்து மழை நீரில் நனைந்து, ஏராளமான நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துள்ளன.

இதனையடுத்து, பட்டீஸ்வரத்தில் உள்ள திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பணியாளர்கள் கூறியது: “கடந்த சம்பா, தாளடி விளைச்சல் அதிகமானதால், பட்டீஸ்வரத்தில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு, தினந்தோறும் தார்ப்பாய் மூலம் மாலையில் மூடப்பட்டு, காலையில் அகற்றப்படும். இதற்காக அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நெல் வரத்து அதிகமானதால் நெல் அடுக்கப்பட்டிருக்கும் அட்டிகையை மூட தார்ப்பாய் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மயில்கள் இரைக்காக, மூடி உள்ள நெல் மூட்டைகளை கொத்தும் போது, பெரும்பாலான தார்ப்பாய்கள் முழுவதும் சேதமடைந்து விட்டன. இதில் நெல் மூட்டைகளும் சேதமாகி விட்டன.

தார்ப்பாய் தட்டுப்பாடு, மயிலினால் தார்ப்பாய் மற்றும் நெல் மூட்டைகள் சேதமானதால், அண்மைக் காலமாக பெய்த மழையில் ஆங்காங்கே சில நெல் மூட்டைகள் நனைந்தன. இந்நிலையில் நேற்று பலத்த மழை பெய்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முழுவதும் சரிந்து மழை நீரில் நனைந்தன. இதே போல் பெரும்பாலான நெல் மூட்டைகள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்ததால், நாற்றுகள் முளைத்து விட்டன. அட்டிகையை சூழ்ந்து மழை நீர் தேங்கி இருப்பதால்,தொடர்ந்து மழை பெய்தால், அங்குள்ள நெல் மூட்டைகள் இன்னும் அதிகளவில் பாதிக்கப்படும்.

தற்போது அங்கு 215 அட்டிகையில் 6,77,250 நெல் மூட்டைகள் உள்ளதில், இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுவதும் சேதமாகி உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் தரமான தார்ப்பாய் வழங்க வேண்டும். மேலும், மயில்கள் சேதமாக்காத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கு ஏற்படும் இழப்பீட்டை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் மெய்கண்டமூர்த்தி கூறியது: ”பட்டீஸ்வரம் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையினால் 150 நெல் மூட்டைகள் மட்டும் சேதமாயின. அந்தபகுதியை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கோட்டாட்சியர் திருமலை உள்ளிட்டோர் பார்வையிட்டோம். சேதமடைந்த நெல் மூட்டைகள் உடனே திருநாகேஸ்வரம் நவீன நெல் அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.