惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
博客园 - 司徒正美
C
Check Point Blog
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed
IT之家
IT之家
B
Blog
博客园_首页
量子位
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
J
Java Code Geeks
H
Help Net Security
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஊட்டியில் தொடங்கியது 128-வது மலர் கண்காட்சி: 7 லட்சம் மலர...
ஆர்.டி.சிவசங்கர் · 2026-05-18 · via hindutamil

Updated on: 

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளை கவர 7 லட்சம் மலர்களை கொண்டு 21 சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப் பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு தேர்தல் காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை. கடந்த வாரம் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு, இன்று 128-வது மலர் கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் மே 28-ம் தேதி வரை 10 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் போன்ற 275 வகையான விதைகள், செடிகள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் மலர்மாடம் உள்பட பல இடங்களில் 50 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. விழாவின் முக்கிய அம்சமாக பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரம்மாண்ட நுழைவாயில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்னேசன் உட்பட பல்வேறு மலர்களால் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஊட்டி மலை ரயில் இன்ஜின், மகாபலிபுரம் கோயில், திருவாரூர் தேர் உட்பட 26 அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்கும் மலர் அலங்காரங்கள் உட்பட பல்வேறு அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தமாக 7 லட்சம் மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. வழக்கமாக 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி இந்த முறை 11 நாட்கள் நடப்பதால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அரங்கமும், பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (மே 18) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சுமார் 200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சர்க்யூட் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.