






















Updated on
:
1 min read
இந்தியாவில் பணியிடப் பயிற்சி வழங்கும் பிரபல நிறுவனமான ‘இண்டர்ன்ஷாலா’, கல்லூரி மாணவர்களுக்காக 'Intern with Icon’ எனும் புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வணிக மேலாண்மை (Business), சந்தைப்படுத்துதல் (Marketing), செயல்பாடுகள் (Operations), திட்டமிடல் (Strategy), உள்ளடக்க உருவாக்கம் (Content), வியாபார வளர்ச்சி (Growth) போன்ற ஆறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் ஏதாவது ஒரு தொழில்முனைவோருடன் நேரடியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.
இது அலுவலகத்தில் நேரடியாக நடைபெறும் பணியிடப் பயிற்சி என்பதால் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தொடர்புடைய அலுவலகம் உள்ள நகரத்தில் தங்கிப் பணியாற்ற வேண்டும்.
பணியிடப் பயிற்சியில் கலந்துகொள்பவருக்கு மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை ஊதியமும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியப் பொறுப்புகள்:
தேர்வு செய்யப்படுபவர்கள் நிறுவனத்தின் வணிகம், சந்தைப் படுத்துதல், செயல்பாடுகள் தொடர்பான பணிகளில் உதவுதல், சந்தை ஆய்வு, போட்டி நிறுவனங்கள் குறித்து தகவல் சேகரித்தல், சமூக வலைத்தளங்களுக்கான உள்ளடக்கங்களை உருவாக்குதல், பல்வேறு அணிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல், ஆவணப்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
எந்தப் படிப்பைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லது அண்மையில் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 26 வயதுக்குள் இருப்பது அவசியம்.
இண்டர்ன்ஷாலாவின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் ‘Intern with Icon’ பக்கத்தில் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் மே 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடப் பயிற்சி காலம்: மே 27 முதல் ஜூலை 31 வரை
மேலும் விவரங்களுக்கு: https://internshala.com/intern-with-icon/
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。