惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
D
Docker
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
J
Java Code Geeks
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
Engineering at Meta
Engineering at Meta
美团技术团队
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திமுக அல்லது அதிமுக தான் வெற்றி பெறும் என்று வெளியான கருத...
செய்திப்பிரிவு · 2026-05-05 · via hindutamil

Updated on: 

சென்னை: திமுக அல்​லது அதி​முக தான் வெற்றி பெறும் என்று வெளி​யான கருத்​துக்​கணிப்​பு​களை பொய்​யாக்கி தவெக தலை​வர் விஜய் மிகப்​பெரிய சாதனையை படைத்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை மற்​றும் மக்​கள​வைத் தேர்​தல்​களில் கருத்​துக்​ கணிப்​பு​கள் முக்​கிய பங்கு வகித்து வரு​கின்​றன. தேர்​தலுக்கு முந்​தைய மற்​றும் பிந்​தைய கருத்​துக்​ கணிப்​பு​களை தொலைக்​காட்​சிகள் உட்பட பல்​வேறு நிறு​வனங்​கள் வெளி​யிடு​கிறது.

கடந்த காலங்​களில் நடை​பெற்ற தேர்​தல்​களில், முந்​தைய கணிப்​பு​கள் பொய்த்து போனாலும், பிந்​தைய கணிப்​பு​கள் ஓரளவு துல்​லிய​மான முடிவு​களை வழங்​கி​யுள்​ளன.

தமிழகத்​தில், தற்​போது நடந்த 2026 தேர்​தலிலும் கருத்​துக்​ கணிப்​பு​கள் வெளி​யாகின. தேர்​தலுக்கு முந்​தைய, பிந்​தைய கணிப்​பு​களில் பெரும்​பாலான நிறு​வனங்​கள் திமுகவே ஆட்சி அமைக்​கும் எனவும், சில நிறு​வனங்​கள் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்​றும் கணிப்​பு​களை வெளி​யிட்​டன.

அந்த நிறு​வனங்​கள் பெரும்​பாலும் விஜய்​யின் தவெக கட்சி மிகக்​குறைந்த இடங்​களை பெற்று தோல்வி அடை​யும் என தெரி​வித்​திருந்​தன. காமாக்யா நிறு​வனம் தவெக 65 முதல் 80 இடங்​களை பெறும் எனவும், தொங்கு சட்​டப்​பேரவை அமை​யும் என்​றும் கணிப்பை வெளி​யிட்​டது.

இந்​தியா டுடே (ஆக்​சிஸ் மை இந்​தி​யா) மட்​டுமே தவெக 98 முதல் 120 இடங்​களை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்​புள்​ளது என்று தனது கணிப்பை தெரி​வித்​தது.

விஜய் அவ்​வளவு இடங்​களில் வெற்றி பெற வாய்ப்பு இல்​லாத நிலை​யில், தவறான கருத்​துக்​ கணிப்பை வெளி​யிட்​டுள்​ள​தாக அந்த நிறு​வனத்தை பலர் விமர்​சனம் செய்​தனர்.

இதனை தொடர்ந்து ஓய்​வு​பெற்ற காவல்​துறை டிஜிபி ரவி, தமிழகம் முழு​வதும் தொகுதி வாரி​யாக ஓய்​வு​பெற்ற காவல்​துறை அதி​காரி​களை வைத்து நடத்​திய கருத்​துக்​கணிப்பை வெளி​யிட்​டார்.

அதில், தவெக 41 சதவீத வாக்​கு​களை பெறும் எனவும், 121 இடங்​கள் வரை வெற்றி பெற வாய்ப்​புள்​ள​தாக​வும் தெரி​வித்​திருந்​தார். இதனால், தவெக​வினர் உற்​சகமடைந்​தனர்.

அதே​நேரம், இந்த கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் திமுக, அதி​முக உள்​ளிட்ட அனைத்து கட்​சிகளை​யும் அதிர்ச்சி அடைய செய்​தன. இந்​நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யானது.

100-க்கும் மேற்பட்ட இடங்​களில் தவெக வெற்றி பெற்​றது. திமுக அல்​லது அதி​முக தான் வெற்றி பெறும் என பெரும்​பாலான கருத்​துக்​கணிப்​பு​கள் வெளி​யான நிலை​யில், தனித்து களம் கண்ட விஜய், அந்த கருத்​துகணிப்​பு​களை பொய்​யாக்கி மாபெரும் பெற்றி பெற்று சாதனை படைத்​துள்​ளார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.