惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
D
DataBreaches.Net
腾讯CDC
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
B
Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
The Cloudflare Blog
MongoDB | Blog
MongoDB | Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42
博客园 - 司徒正美
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியது...
2026-05-11 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் கே.ஆர். பெரியகருப்​பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் எதிர்த்​துப் போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுப​தி​யிடம் தோல்​வியை சந்​தித்​தார்.

அதையடுத்​து, திருப்​பத்​தூர் தொகு​திக்​கான எம்​எல்​ஏ-​வாக தேர்​வாகி​யுள்ள சீனி​வாச சேதுபதி சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்பு மற்​றும் சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் பங்​கேற்க தடை விதிக்​கக்​கோரி​யும், வேலூர் அரு​கில் உள்ள திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்​பப்​பட்ட ஒரு தபால் வாக்கை மீட்டு திருப்​பத்​தூர் தொகுதி கணக்​கில் சேர்க்க உத்​தர​விடக்​கோரி​யும் ஒரு ஓட்​டில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்​பாளர் கே.ஆர். பெரியகருப்​பன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் எல். விக்​டோரியா கவுரி, என். செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய விடு​முறை கால அமர்​வில் அவசர வழக்​காக ஞாயிற்​றுக்​கிழமை​யான நேற்று விசா​ரிக்​கப்​பட்​டது.

அப்​போது முன்​னாள் அமைச்​சர் பெரியகருப்​பன் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, என்​.ஆர்​.இளங்கோ ஆகியோர், மனு​தா​ரர் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தோல்​வியடைந்​துள்​ள​தாக திருப்​பத்​தூர் தொகுதி தேர்​தல் அதி​காரி அறி​வித்​துள்​ளார்.

ஆனால் மறு​வாக்கு எண்​ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்​லை. சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு வேலூர் அருகே உள்ள திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வாக்கை திருப்​பத்​தூர் தேர்​தல் அதி​காரி நிராகரித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக மனு​தா​ரர் எழுப்​பிய கேள்வி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் முறை​யாக எந்​தவொரு விளக்​க​மும் அளிக்​க​வில்​லை. ஒரு​வேளை செல்​லுபடி​யாகும் அந்த ஒரு தபால் வாக்கை மீண்​டும் சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கே அனுப்​பி​யிருந்​தால் இந்​நேரம் இரு வேட்​பாளர்​களும் சம வாக்​கு​கள் பெற்​றிருப்​பர்.

குலுக்​கல் முறை​யில் வெற்றி வேட்​பாளர் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு இருப்​பார், என வாதிட்​டனர். அப்​போது குறுக்​கிட்ட நீதிப​தி​கள், இது​போன்ற சூழ்​நிலைகளில் என்ன நடை​முறையை பின்​பற்ற வேண்​டும் என தேர்​தல் ஆணை​யம் ஏதேனும் விதி​முறை​களை வகுத்​துள்​ளதா எனக்​கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பெரியகருப்​பன் தரப்பு மூத்த வழக்​கறிஞர்​கள், இது​போன்ற குளறு​படிகளை தவிர்க்க தேர்​தல் ஆணை​யத்​திடம் எந்த நடை​முறை​யும் இல்​லை. இதுசம்​பந்​த​மாக தேர்​தல் ஆணை​யத்​துக்கு பல புகார்​கள் அளித்​தும் எந்த பதி​லும் இல்லை என்​றனர்.

தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுபதி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் மனு சிங்​வி, வி.​ராக​வாச்​சாரி ஆகியோர், தேர்​தல் வெற்​றியை எதிர்த்து தேர்​தல் வழக்கு மட்​டுமே தொடர முடி​யும்.

எம்​எல்ஏ- என சட்​டப்​பூர்​வ​மாக அறி​வி்க்​கப்​பட்​ட​வர் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்​கக்​கூ​டாது என்​றோ, சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் கலந்து கொள்​ளக்​கூ​டாது என்றோ எப்​படி தடை கோர முடி​யும்.

ஒரு வேட்​பாளர் வெற்றி பெற்​றவர் என அறிவிக்​கப்​பட்டு விட்​டால் அவர் தனது கடமையை ஆற்ற அனு​ம​திக்க வேண்​டும். சட்​டப்​பேரவை நடவடிக்​கை​களில் பங்​கேற்க தடை விதித்​தால் அத்​தொகு​தி​யின் மக்​கள் உரிமை தான் பாதிக்​கப்​படும், என்​றனர்.

தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கே.தருண், இதுதொடர்​பாக தேர்​தல் வழக்கு மட்​டுமே தொடர முடி​யும். தபால் வாக்குகள் தபால் துறை மூலம் அனுப்​பப்​படு​வ​தில்​லை. தபால் வாக்குகளைப் பெற தேர்​தல் ஆணை​யம், துணை வட்​டாட்​சி​யர் அந்​தஸ்​தில் ஒரு அதி​காரியை நியமிக்​கும். அந்த அதி​காரி தபால் வாக்​கு​களைப் பெற்​று, சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களின் தேர்​தல் அதி​காரி​களுக்கு அனுப்பி வைப்​பார்.

அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களும் இந்த நடவடிக்​கைகளை கண்​காணிப்​பர் என்​ப​தால் அதில் தவறு நடக்க வாய்ப்பு இருக்​காது. ஒரு​வேளை ஒரு தொகு​தி​யின் தபால் வாக்கு தவறு​தலாக மற்​றொரு தொகு​திக்கு மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டால் அந்த சூழலில் என்ன செய்ய வேண்​டும் என்​பது குறித்து சட்​டத்​தில் எந்த விளக்​க​மும் இல்​லை.

தேர்​தல் வழக்கு முடிவுக்கு வரும் வரை அந்த தேர்​தல் தொடர்​பான ஆவணங்​கள் பத்​திரப்​படுத்தி வைக்​கப்​பட்​டிருக்​கும், என்​றார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், ஒரு தொகு​திக்​கான தபால் வாக்கு வேறு ஒரு தொகு​திக்கு மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டது குறித்து மனு​தா​ரர் எழுப்​பிய கேள்வி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உரிய விளக்​கமளிக்​காதது ஏன்? ஒரு வாக்கு வித்​தி​யாசத்​தில் மனு​தா​ரர் தனது வெற்றி வாய்ப்பை இழந்​துள்​ளார்.

இப்​போது தனக்​கான ஒரு தபால் வாக்கை அதி​காரி​கள் வேறு தொகு​திக்கு மாற்றி அனுப்​பி​யுள்​ள​தாக மனு​தா​ரர் குற்​றம் சாட்​டு​கி்றார். ஒரு வாக்கு என்​றாலும் அதற்கு பதிலளிக்க வேண்​டிய கடமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு உள்​ளது. எனவே இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் நாளைக்​குள்​ (மே 11) விரி​வாக பதிலளிக்​க வேண்​டும்​, என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளிவைத்​துள்​ளனர்​.