




























Updated on
:
1 min read
சென்னை: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது.
இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் இதில் நடித்துள்ளார்.
2.45 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் இப்போது தொடங்கியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - நீதிக்காக போராடுபவர்களுக்கு உதவும் கருப்புசாமியாக சூர்யா வருகிறார். சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி என இருவரும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். ‘மனுஷனுக்கு மனுஷன் உதவி பண்ணதான கடவுள் நம்ம படச்சு இருக்கார்’ என்ற வசனம் வருகிறது. அதன் வெளிப்பாடாகவே ட்ரெய்லரில் வரும் சில ஷாட்கள் உள்ளன. இதில் கருப்பாக நடித்துள்ள சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். பேபி கண்ணன் என்ற பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。