惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
V
V2EX
博客园 - Franky
博客园 - 司徒正美
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
Visual Studio Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிலிப்பைன்ஸ் சுற்றுலா: புகையும் எரிமலையும் புக்கா பீச்சும்!
2026-04-20 · via hindutamil

Updated on

4 min read

அழகைக் கண்ணுக்குள் அள்ளி வந்து சேர்க்கும் வெண்மணற் கடற்கரைகள், நீர்வாழ் உயிரின காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், இரவு விடுதிகள், ஷாப்பிங் என லிஸ்ட் பெரிதாகவே நீள்கிறது.

சரி, முதலில் தலைநகர் மணிலாவைப் பார்ப்போம், வான் உயர்ந்த கட்டிடங்கள், சிறந்த சாலைகளில் நேர்த்தி, அழகு என இவற்றில் குழைத்தெடுத்த மணிலா, ஸ்பானிஷ் கலாச்சாரத்தின் நிலைத்து நிற்கும் அடையாளம் என சொல்லலாம். சாண்டியாகோ கோட்டை, சான் அகஸ்டின் தேவாலயம் என பெரும்புகழ்ப் பெற்ற தேவாலயங்கள் இங்கு அதிகம் உள்ளன.

தலைநகர் மணிலாவில் உள்ள மால் ஆஃப் ஏசியாவின் தோற்றம் மிரள வைக்கிறது. ஷாப்பிங் பிடிக்காதவர்கள் கூட இங்கு நுழைந்தால் கனத்த பைகளோடு தான் வெளியே வருவார்கள். இங்கே ஷாப்பிங் அப்படி ஒன்றும் காஸ்ட்லி இல்லை.

இதையும் தாண்டி மணிலாவில் மற்ற கடைகளும் உங்களை வசீகரிக்கும் ஷாப்பிங்கோடு வரவேற்கிறது. அதேபோல் தெரு ஓரங்களில் ஆரம்பித்து அனைத்து கடைகளிலும், விதவிதமான சாப்பாடு வகைகளுக்கும் பஞ்சமே இல்லை.

ஆனாலும் பெரும்பாலான உணவகங்களில் ஸ்பானிஷ் உணவகங்களின் கலவைத் தெரிகிறது. சீன உணவு பிரியரா நீங்கள்?அப்படியானால் சைனா டவுன் உங்களுக்குப் பொருத்தமான இடம். உலகின் மிகப் பழமையான சைனா டவுன் என்றும் இந்த இடம் அழைக்கப்படுகிறது.

இரவு வாழ்க்கை

ஓகே, மணிலாவின் இரவு வாழ்க்கையைச் சுற்றுவோம். எங்கும் நிரம்பிக் கிடக்கும் மதுபானக் கூடங்கள், நடனங்களுடன் கூடிய நைட் கிளப்புகள், ‘சார், மசாஜ் ’ என்று அழைக்கும், வரிசை கட்டி நிற்கும் பெண்கள் என நிறைவே கலகலப்பாக, கலர் கலராக மிளிருகிறது மணிலா.

ஆனால், என் சொந்த அனுபவத்தில் மணிலாவின் நைட் கிளப்புகள் சொல்வோர் நிறையவே கவனத்துடன் இருக்க வேண்டும். மணிலாவின் டாக்ஸி டிரைவர்கள் நாகரீகமானவர்கள், தேவையில்லாமல் பணம் பிடுங்குவது குறைவு என்பது மகிழ்ச்சி. ஒரு டாக்ஸி டிரைவரை நண்பர் ஆக்கிக் கொண்டால் உங்கள் பயணம் சுகமாகும்.

ஒருநாள் சுற்றுலா

பிலிப்பைன்ஸில் சுற்றுலா பட்டியல் ரொம்ப பெரிது எனும் அளவுக்கு இயற்கை தன் அனைத்து வண்ணங்களையும் இங்கே பூசி வைத்திருக்கிறது. எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் சற்றே திணறிப் போவீர்கள். சரி, ஒருநாள் சுற்றுலா ஒன்றைப் பார்க்கலாம். தலைநகர் மணிலாவில் இருந்து சில மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது தகெய்தாய்.

பல இடங்களில் எரிமலை சுற்றுலா என்பது பெரும்பாலும் ஒரு த்ரில் அனுபவமாகவே இருக்கும். ஆனால், இந்த எரிமலை சுற்றுலா த்ரில் மற்றும் அழகு செறிந்த இயற்கையின் கலவை எனச் சொல்லலாம்.

தாகெய்தாவுக்குச் சென்றடைந்ததும் தால் ஏரிக்கரையில் நம்மை இறக்கி விட்டு விடுகிறார்கள். அங்கிருந்து சிறு படகு மூலம் தொடங்குகிறது நமது பயணம்.

ஏரியின் படகு பயணத்தில், சுற்றி தெரியும் மலை அழகு, மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. சும்மா, கொஞ்ச நேரம் பயணம்தான், ஏரியின் மறுகரையை அடைந்ததும், நாம் வரிசையில் நிற்க நேரிடுகிறது.

குதிரை பயணம்

நம்ம ஊர் மஞ்சுவிரட்டுகளில் வாடிவாசல் வழியாகக் காளைகள் நுழைந்து வருவதைப் போன்று ஓர் அமைப்பின் வழியாக வரிசையாகக் குதிரைகள் வருகின்றன. பிறகு ஒருவருக்கு ஒரு குதிரை என்ற கணக்கில் ஏரி அமர்ந்ததும் நம் பயணம் தொடர்கிறது.

பயணம் என்றால் உங்க பயணம், எங்க பயணம் இல்லை, அப்படி ஒரு பயணம்! ‘ஆமா, இதான் பர்ஸ்ட் டைம் இன் லைஃப்’ என உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்வீர்கள். புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே நம் குதிரை எக்கச்சக்கமாகச் செங்குத்தான மலைகளின் மீது கரடு முரடான மலை பாதைகளின் வழியாகப் பயணிக்கிறது.

நம் பாதையின் இருபுறமும் நிஜமாகவே புகைந்து கொண்டிருக்கும், சிறு சிறு எரிமலை பகுதிகளைப் பார்க்க முடிகிறது. அதிலும் உடன் வரும் குதிரைக்காரர் நமக்கு முன்னால் செல்லும் குதிரைக்குப் பின்புறம் மிக நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும்போது கடவுளே, இந்த குதிரைக்கு ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் எதுவும் வந்து விடக்கூடாது என்று மனம் வேண்டிக் கொள்கிறது.

ஒரு வழியாக, மலை உச்சிக்கு வந்த உடன் அங்கே தெரியும், வெடித்துச் சிதறிய எரிமலையால் உருவான ஏரியும், அதை சூழ்ந்துள்ள பள்ளத்தாக்கும் நம் கண்களை நிலை குத்தி நிற்கச் செய்கின்றன. மலையை விட்டு கீழே இறங்க மனசு மறுக்கிறது. 360 டிகிரியில் ஒரு சுற்று சுற்றி அப்படியே டைட்டானிக் படத்தில் வருவதைப் போல் கைகளை விரித்துக் கொண்டு நிற்கலாம் போல தோன்றுகிறது.

படகுப்பயணம்

சரி, இப்போது கீழே இறங்கும் நேரம். போகும்போதும் சரி, வரும்போதும் சரி, பல இடங்களில் புகை கக்கும் சிறு சிறு எரிமலை பகுதிகளைப் பார்க்கலாம். என் அனுபவத்தில் இது வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

மீண்டும் தால் ஏரியில் நம் படகுப்பயணம். கரையில் வந்து இறங்கியதும் அங்கே ஏரியைப் பார்த்தபடி அமைந்திருக்கும் மூங்கில் வீடுகள் போன்ற உணவகங்களில் அப்படி ஒரு சுவையான உணவைத் தயாரித்துத் தருகிறார்கள். மீண்டும் காரில் ஏறும்போது நிறைவான ஒரு நாள் டூர் என்று மனம் சொல்லும்.

பொராக்காய் தீவு

சுமார் 7000 தீவுகள் கொண்ட பிலிப்பைன்ஸில் ஒரு நாள் சுற்றுலாவில் தொடங்கி ஒரு மாத சுற்றுலா வரை நீங்கள் தேர்ந்தெடுக்க நிறையவே உள்ளது. அவற்றில் தால் ஏரிப் பகுதி சுற்றுலாவைப் போல மற்றொரு மகிழ்ச்சி தரும் இடம் பொராக்காய் தீவு டூர்.

பொராக்காயின் வெண்மணல் கடற்கரை நம்மை இங்கே சில இரவுகளாவது தங்க வைத்து விடுகிறது. இங்கு சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காண சுற்றுலா பயணிகள் குவிக்கின்றனர். சுமார் 2 மணி நேரம் செலவழித்தால் போதும் மறக்க முடியாத அழகை மனசுக்குள் கொண்டு வந்து சேர்கிறது இந்த இரண்டும்.

அடுத்ததாக பொராக்காயின் ஹெல்மெட் டைவிங். நீச்சல் தெரியாதவர்களும், குறிப்பிட்ட வயது குழந்தைகளும் கூட இதில் புகுந்து விளையாடலாம். கடலின் ஆழமான மற்றும் கடல் தெளிவாக இருக்கும் பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும் படகோட்டிகள், நம் தலையில் ஆக்சிஜன் தரும் ஹெல்மெட் ஒன்றை அணிவித்து கடலுக்குள் இறக்கி விடுகிறார்கள்.

தலைமுடி நனையாது, எளிதாகச் சுவாசிக்கலாம், சுமார் 10 அடி ஆழத்தில் நாம் நடந்து செல்லும் போது, நம்மைச் சுற்றி வரும் கடல் வாழ் உயிரின கூட்டமும், பெருமூச்சு விடும் பவழப்பாறைகளும் அப்படியே அள்ளி எடுத்துக் கொள்ளலாம் போல ஆசை தருகின்றன.

அனுபவமும் பாதுகாப்பும் அறிந்த கைடுகள், நம் கூடவே வருவது மட்டுமின்றி வீடியோ, புகைப்படம் போன்றவற்றையும் எடுத்துத் தருகிறார்கள். சுமார் 15-லிருந்து 20 நிமிடங்கள் நீங்கள் வேற்றுக் கிரகவாசியாக உணர்வீர்கள்.

அரை நாள் சுற்றுலா

அடுத்ததாக இந்தப் பகுதியின் பிரபலம் ஐலேண்ட் hoping என அழைக்கப்படும் அருகில் உள்ள தீவுகளைச் சுற்றி பார்த்தல். புக்கா ஷெல் பீச், முதலைத்தீவு, பலிங்ஹாய் போன்றவை இச்சுற்றுலாவுக்குள் வருகிறது. இது ஒரு அரை நாள் சுற்றுலா. ஆனாலும் அனுபவிக்க நிறையவே இருக்கிறது.

க்ரோக்கடைல் தீவு, அதாவது முதலை தீவு என்றவுடன் இங்கு ஏராளமான முதலைகள் இருக்குமோ என்று பயப்படாதீர்கள், சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு பெரிய முதலை படுத்திருப்பது போன்று நம் பார்வைக்குத் தெரிவதால் இதற்குப் பெயர் குரோகடைல் தீவு.

ஸ்கூபா டைவிங்

நீங்கள் ஸ்நோக்கிளிங் மற்றும் ஸ்கூபா டைவிங் பிரியரா? அப்படியானால் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கே வர விரும்புவீர்கள். இங்குள்ள, கண்ணாடி போல் தெளிந்த நீர், வண்ண வண்ண கடல் மீன்கள், பவழப்பாறைகள் இவற்றை அருகே சென்று பார்ப்பது வேற லெவல் அனுபவம்.

அடுத்ததாக கிரிஸ்டல் கோவ் தீவு. மிக சிறிய அழகான தீவு. மிஸ் பண்ணக் கூடாத இடம். இயற்கை அமைத்த கடல் குகைகள், விதவிதமான தோற்றங்களில் பாறைகள், படர்ந்த நீல நிறக் கடல் என்று உங்கள் கேமராவுக்கு நிறையவே வேலை வைக்கும் இந்த குட்டி தீவு.

புக்கா ஷெல் பீச்

சரி, இப்போது பொராக்காய் தீவின் மற்றொரு அசத்தலான இடமான புக்கா ஷெல் பீச். பிலிப்பைன்ஸின் பல தீவுகள் நெருக்கம் நிறைந்தவையாகக் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த ஷெல் பீச் அதற்கு விதிவிலக்கு. அமைதி, அழகு, ரம்மியம் என்று ரசனைகளின் குழைவாக இருக்கிறது இந்த இடம்.

இந்தப் பகுதியின் கடற்கரை மணலில் கொட்டிக் கிடக்கும் புக்கா சிப்பிகளே இந்தப் பகுதியின் பெயர் காரணமாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸின் புகழ்பெற்ற சிப்பி நகைகளை உருவாக்க இந்த புக்கா சிப்பிகளே பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

பசுமை போர்த்திய மலைகள், மற்றும் செங்குத்து பாறைகள்,திரும்பிய பக்கமெல்லாம் கண்களில் படுகின்றன இங்கே. பிலிப்பைன்ஸை பொறுத்தவரை எழுதுவதற்கு இன்னும் நிறையவே இருக்கின்றன. இருந்தாலும் மஸ்ட் விசிட் என்பவற்றை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

ஆனால் சொல்லாதவையும், அனுபவிக்கவும் இங்கே இன்னும் நிறையவே இருக்கின்றன. வேறென்ன? புகையும் எரிமலையும், புக்கா பீச்சும் உங்களை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. புறப்படுங்கள்!

- malaipa@yahoo.in