惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
Y
Y Combinator Blog
M
MIT News - Artificial intelligence
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 司徒正美
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
C
Check Point Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
F
Fortinet All Blogs
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கேஜிஎஃப்’ முடிந்து ‘ஜேஜிஎஃப்’ உதயம்: ஜொன்னகிரி தங்கச் சு...
போத்தி ராஜ்.க · 2026-06-22 · via hindutamil

Updated on: 

இந்தியாவின் ‘கேஜிஎஃப்’ எனச் சொல்லப்படும் கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டபின், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திராவில் டன் கணக்கில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எங்கே இருக்கிறது சுரங்கம்?

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் சார்பில் தங்கம் வெட்டி எடுக்கப்படும் சுரங்கம் ஆந்திரா மாநிலம், குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் பூமிக்குள் புதைந்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆண்டுக்கு 1000 கிலோ சுத்தமான தங்கத்தை இங்கிருந்து உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

எவ்வளவு டன் தங்கம் இருக்கிறது?

குர்னூல் மாவட்டம் ஜொன்னகிரி கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர், அப்பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தை தோண்ட உள்ளனர். கூடுதலாகவும் நிலங்களையும் கொள்முதல் செய்ய உள்ளனர். இந்த தங்கச் சுரஙத்தின் மதிப்பு ரூ.7,500 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தின் உரிமையாளர் யார்?

ஜொன்னகிரி தங்கச் சுரங்கம் ‘ஜேஜிஎஃப்’ (JGF) எனப்படுகிறது. இதை ஜியோமைசூர் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் ரூ.400 கோடி முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின், தனியார் சார்பில் தோண்டப்படும் முதல் தங்கச் சுரங்கமாகும். 1500 ஏக்கரில் அமைய உள்ள இந்த சுரங்கத்தில் இருந்து ஆண்டுதோறும் 1,000 கிலோ தூய தங்கம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்ய இயலும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீசஸ் பிரைவேட் லிமிட் மற்றும் திரிவேணி எர்த்மூவர்ஸ், டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகிறார்கள். இந்த சுரங்கப் பணிகள் வேகமெடுக்கும் பட்சத்தில் குர்னூல் மாவட்டம் அமைந்திருக்கும் ராயலசீமா பகுதி பெரு வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கச் சுரங்கம் 2000-ம் ஆண்டில் மூடப்பட்டபின் நாட்டில் ஹட்டி தங்கச் சுரங்கம் மட்டும் ஆண்டுக்கு 1.50 டன் தங்கம் உற்பத்தி செய்து வருகிறது. இப்போது ஜொன்னகிரியில் தங்கம் கிடைக்கும் பட்சத்தில் தங்கம் உற்பத்தி அதிகரிக்கும், நாட்டின் அந்நியச் செலாவணி சுமை குறையும்.

அடுத்த இலக்கு...

ஜொன்னகிரி கிராமம் தவிர்த்து, ராமகிரி, ஜவாகுலா, சிக்குருகுந்தா, பிஸ்னாடம் ஆகிய கிராமங்களுக்கும் சுரங்கத்தை விரிவுபடுத்தப்பட உள்ளது. தினசரி அதிகபட்சமாக 2,500 டன் தாதுக்கள் வரை வெட்டி எடுக்க இயலும். முதல் ஆண்டான 2026-27-ம் ஆண்டில் 800 கிலோ தூய தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 2-வது ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 1000 முதல் 1500 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு வேலைவாய்ப்பு?

திரிவேணி எர்த்மூவர்ஸ் மேலாண் இயக்குநர் பி.கார்த்திகேயன் கூறுகையில் “சுரங்கப் பணியில் 90% பணியாளர்கள் குர்னூல் மாவட்டத்தில் இருந்துதான் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை அமைத்துத் தரவும், குடும்பங்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஜொன்னகிரி மட்டுமல்லாது ராமகிரி, ஜவாகுலா, சிகுருகுந்தா, பிஸ்நாதா பகுதியிலும் சுரங்கம் அமைக்க அரசு அனுமதித்துள்ளது. சுரங்கம் தோண்டுவதற்கு உலகிலேயே அதிநவீன எந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த இருக்கிறோம்.

கோலாருக்கு அடுத்தார்போல் ஜொன்னகிரி மிகப் பெரிய தங்கச் சுரங்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய நிலவியல் துறையினர் முதலில் ஆய்வு செய்து அளித்த மதிப்பீட்டை விட தங்கம் வளம் இங்கு அதிகமாக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

15 முதல் 20 ஆண்டுகள் வரை இங்கு தங்கம் வெட்டி எடுக்க முடியும், நிலத்தை துளையிடுதல், தோண்டுதல், பாறைகளை அரைத்தல் போன்றவை கார்பன் இன் லீச் (சிஐஎல்) தொழில்நுட்பம் மூலம் செய்யப்பட்டு தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில் “ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தில் இருந்து இந்தியாவின் தங்க உற்பத்தியில் 60% அளவுக்கு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

அந்நிய செலாவணி நெருக்கடி குறையுமா?

இந்தியாவின் தங்கம் இறக்குமதி ஆண்டுக்கு 800 முதல் 1000 டன்னாக இருக்கும்போது, ஜொன்னகிரியில் ஆண்டுக்கு ஒன்று முதல் 1.3 டன் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்படஉள்ளது. இது நாட்டின் தேவையில் 0.1 சதவீதம் மட்டும்தான். இறக்குமதி தேவையையும் பெரிதாக நிறைவு செய்துவிடாது.

2025-26ம் ஆண்டில் மட்டும் ரூ.6.90 லட்சம் கோடிக்கு தங்கத்தை மத்திய அரசு இறக்குமதி செய்திருக்கிறது. இது 2020-21-ம் ஆண்டில் இறக்குமதி அளவைவிட 2 மடங்காகும். இதனால்தான் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்து மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கிறது.

தேசிய வளங்கள் கணக்கெடுப்பு பிரிவின் அறிக்கையின்படி, இந்தியாவில் 502 மில்லிடன் டன் தங்கம் தாது இருப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் பிஹாரில் 44%, ராஜஸ்தானில் 25%, கர்நாடகாவில் 21%, மேற்கு வங்கம், ஆந்திராவில் 3 % தங்கத் தாதுக்கள் இருப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.