惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Google DeepMind News
Google DeepMind News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
L
LangChain Blog
IT之家
IT之家
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
MongoDB | Blog
MongoDB | Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
G
Google Developers Blog
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
宝玉的分享
宝玉的分享
博客园 - 三生石上(FineUI控件)
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உர்வில் படேல் 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசல்: 204 ரன்கள்...
2026-05-11 · via hindutamil

Updated on

5 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்​ற ஆட்டத்தில் சிஎஸ்கே-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பீல்​டிங்கை தேர்வு செய்தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய லக்னோ அணிக்கு ஜோஷ் இங்​லிஷ் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். அகீல் ஹோசைன் வீசிய முதல் ஓவரில் ஜோஷ் இங்​லிஷ் ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​கள் விரட்​டி​னார். முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரில் ஜோஷ் இங்​லிஷ், ரிவர்ஸ் ஸ்வீப்​பில் சிக்​ஸர் விளாசி​னார். அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 3-வது ஓவரில் மிட்​செல் மார்ஷ் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாச, ஜோஷ் இங்​லிஷ் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்​டில் தேர்டு மேன் திசையில் சிக்​ஸர் பறக்​க​விட்​டார்.

முகேஷ் சவுத்ரி வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசிய ஜோஷ் இங்​லிஷ், 3 பவுண்​டரி​களை​யும் விரட்டி மிரட்​டி​னார். இந்த ஓவரில் 18 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. மட்​டையை சுழற்​றிய ஜோஷ் இங்​லிஷ் 17 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் அரை சதம் விளாசி​னார். அகீல் ஹோசைன் வீசிய 5-வது ஓவரை​யும் ஜோஷ் இங்​லிஷ் பதம் பார்த்​தார். இந்த ஓவரில் 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் பறக்​க​விட்டு அசத்​தி​னார் ஜோஷ் இங்​லிஷ்.

மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய மிட்​செல் மார்ஷ் 10 பந்​துகளில், 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 6-வது ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே டெவால்ட் பிரே​விஸிடம் கேட்ச் ஆனது. முதல் விக்​கெட்​டுக்கு மிட்​செல் மார்​ஷ், ஜோஷ் ஜோடி 5.1 ஓவர்​களில் 77 ரன்​கள் சேர்த்​தது.

இதையடுத்து நிக்​கோலஸ் பூரன் களமிறங்க எஞ்​சிய பந்​துகளில் ஜோஷ் இங்​லிஷ் 2 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் விளாசி​னார். பவர்​பிளே​வில் லக்னோ அணி 91 ரன்​கள் குவித்​தது. நூர் அகமது வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை நிக்​கோலஸ் பூரன் டீப் மிட்விக்​கெட் திசை​யில் விளாசிய போது சர்ஃப​ராஸ் கானிடம் கேட்ச் ஆனது.

3 பந்​துகளை சந்​தித்த நிக்​கோலஸ் பூரன் 1 ரன் சேர்த்​தார். இதையடுத்து கேப்​டன் ரிஷப் பந்த் களமிறங்​கி​னார். ஜோஷ் இங்​லிஷின் அதிரடி​யால் லக்னோ அணி 7.4 ஓவர்​களில் 100 ரன்​களை கடந்​தது. 10-வது ஓவரை வீசிய ஜேமி ஓவர்​டன் திருப்பு முனையை ஏற்​படுத்​திக் கொடுத்​தார். இந்த ஓவரின் முதல் பந்தை ஜோஷ் இங்​லிஷ் ஸ்கூப் ஷாட் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து மட்​டை​யில் உரசி​யபடி விக்​கெட் கீப்​பர் சஞ்சு சாம்​சனிடம் கேட்ச் ஆனது.

33 பந்​துகளை சந்​தித்த ஜோஷ் இங்​லிஷ் 6 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​கள் விளாசி​னார். இதைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் போல்​டா​னார். அப்​போது ஸ்கோர் 9.4 ஓவர்​களில் 115 ஆக இருந்​தது. 5-வது விக்​கெட்​டுக்கு இணைந்த எய்​டன் மார்க்​ரம், அக் ஷத் ரகு​வன்ஷி ஜோடி நிதான​மாக விளை​யாடியது. எய்​டன் மார்க்​ரம் 7 பந்​துகளில், 6 ரன்​கள் எடுத்​திருந்த போது டெவால்ட் பிரே​விஸின் துல்​லிய​மான த்ரோ​வால் ரன் அவுட் ஆனார். இதையடுத்து ஷாபாஸ் அகமது களமிறங்​கி​னார்.

சீராக ரன்​கள் சேர்த்த அக் ஷத் ரகு​வன்ஷி 18 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேமி ஓவர்​டன் பந்​தில் மிட் ஆஃப் திசை​யில் நின்ற உர்​வில் படேலிடம் எளி​தாக கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஹிமத் சிங், ஜேமி ஓவர்​டன் வீசிய 15-வது ஓவரின் 4-வது பந்தை லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். முகேஷ் சவுத்ரி வீசிய 18-வது ஓவரில் ஷாபாஸ் அகமது ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். தொடர்ந்து ஜேமி ஓவர்​டன் வீசிய அடுத்த ஓவரில் ஷாபாஸ் அகமது 2 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் விளாசி​னார். அன்​ஷுல் கம்​போஜ் வீசிய கடைசி ஓவரில் 4-வது பந்​தில் ஹிமத் சிங் போல்​டா​னார்.

12 பந்​துகளை சந்​தித்த ஹிமத் சிங் ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 17 ரன்​கள் சேர்த்​தார். 7-வது விக்​கெட்​டுக்கு ஹிமத் சிங், ஷாபாஸ் அகமது ஜோடி 50 ரன்​கள் சேர்த்​தது. அடுத்த பந்​தில் முகமது ஷமி (0) ரன் அவுட் ஆனார். கடைசி பந்தை ஷாபாஸ் அகமது லாங் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட 20 ஓவர்​கள் முடி​வில் லக்னோ அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 203 ரன்​கள் குவித்​தது. ஷாபாஸ் அகமது 25 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் விளாசி​னார். பந்​து​வீச்​சில் சிஎஸ்கே அணி சார்​பில் ஜேமி ஓவர்​டன் 3, அன்​ஷுல் கம்​போஜ் 2, நூர் அகமது ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

204 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்​சனும், ருது​ராஜ் கெய்க்​வாட்​டும் தலா ஒரு பவுண்​டரி அடித்​தனர். பிரின்ஸ் யாதவ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை சஞ்சு சாம்​சன் ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார்.

இதே ஓவரின் 4-வது பந்தை ருது​ராஜ் கெய்க்​வாட் லெக் திசை​யில் சிக்​ஸருக்கு விளாசி​னார். முகமது ஷமி வீசிய 3-வது ஓவரில் 2 பவுண்​டரி​கள் விரட்​டப்​பட்​டது. 3 ஓவர்​களில் சிஎஸ்கே 35 ரன்​களை குவித்​தது. திக்​வேஷ் ராதி வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்​டரிக்​கும் 3-வது பந்தை சிக்​ஸருக்​கும் பறக்​க​விட்ட சஞ்சு சாம்​சன் 4-வது பந்​தில் போல்​டா​னார். 14 பந்​துகளை சந்​தித்த சஞ்சு சாம்​சன் 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் சேர்த்​தார். முதல் விக்​கெட்​டுக்கு சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி 3.4 ஓவர்​களில் 45 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து களமிறங்​கிய உர்​வில் படேல் மட்​டையை சுழற்​றி​னார்.

அவேஷ் கான் வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தை ருது​ராஜ் கெய்க்​வாட் சிக்​ஸருக்கு விளாச இதே ஓவரின் கடைசி 3 பந்​துகளை உர்​வில் பேடல் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 25ரன்​கள் விளாசப்​பட்​டது. திக்​வேஷ் ராதி வீசிய 6-வது ஓவரை​யும் உர்​வில் படேல் பதம் பார்த்​தார். இந்த ஓவரில் 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியை விளாசி​னார் உர்​வில் படேல். இந்த ஓவரிலும் 25 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. பவர்​பிளே​வில் சிஎஸ்கே அணி 97 ரன்​கள் குவித்​தது. முகமது ஷமி வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை உர்​வில் படேல் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார்.

அதிரடி​யாக விளை​யாடிய உர்​வில் படேல் 13 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் அரை சதம் விளாசி​னார். ஷாபாஸ் அகமது வீசிய 8-வது ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்​கும், 2-வது பந்தை சிக்​ஸருக்​கும் விளாசி மிரளச் செய்​தார் உர்​வில் படேல். அதிரடி​யாக விளை​யாடிய உர்​வில் படேல் 23 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஷாபாஸ் அகமது வீசிய பந்தை டீப் எக்​ஸ்​டிரா கவர் திசை​யில் விளாசிய போது அவேஷ் கானிடம் கேட்ச் ஆனது.

2-வது விக்​கெட்​டுக்கு உர்​வில் படேல், ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி 34 பந்​துகளில் 81 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து கார்த்​திக் சர்மா களமிறங்​கி​னார். 10 ஓவர்​களில் சிஎஸ்கே அணி 131 ரன்​கள் குவித்​தது. சீராக ரன்​கள் சேர்த்த ருது​ராஜ் கெய்க்​வாட் 28 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷாபாஸ் அகது பந்​தில் போல்​டா​னார். 3-வது விக்​கெட்​டுக்கு ருது​ராஜ் கெய்க்​வாட், கார்த்​திக் சர்மா ஜோடி 21 பந்​துகளில், 23 ரன்​கள் சேர்த்​தது.

அப்​போது சிஎஸ்கே அணி​யின் வெற்​றிக்கு 43 பந்​துகளில் 55 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. இதையடுத்து களமிறங்​கிய டெவால்ட் பிரே​விஸ் 12 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் திக்​வேஷ் ராதி பந்​தில் போல்​டா​னார். இதைத் தொடர்ந்து கார்த்​திக் சர்மா 20 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 20 ரன்​கள் எடுத்த நிலை​யில் அவேஷ் கான் பந்​தில் வெளி​யேறி​னார்.

அடுத்​தடுத்து சரிந்த இந்த 2 விக்​கெட்​களால் சிஎஸ்கே அணிக்கு நெருக்​கடி உரு​வானது. ஷிவம் துபே, பிர​சாந்த் வீர் களத்​தில் இருக்க கடைசி 3 ஓவர்​களில் சிஎஸ்கே அணி​யின் வெற்​றிக்கு 30 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. பிரின்ஸ் யாதவ் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தை பிர​சாந்த் வீர், டீப் பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். இந்த ஓவரில் 9 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. அவேஷ் கான் வீசிய 19-வது ஓவரின் முதல் 2 பந்​துகளி​லும் பிர​சாந்த் வீர் கொடுத்த கேட்ச்சை முறையே திக்​வேஷ் ராதி, நிக்​கோலஸ் பூரன் ஆகியோர் தவற​விட்​டனர்.

இதே ஓவரின் 4-வது பந்தை பிர​சாந்த் வீர் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இந்த ஓவரில் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி​யின் வெற்​றிக்கு 10 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. இந்த ஓவரை வீசிய எய்​டன் மார்க்​ரம் முதல் 2 பந்​துகளை வைடாக வீசி​னார். இதையடுத்து வீசப்​பட்ட அடுத்த 2 பந்​துகளை​யும் ஷிவம் துபே சிக்​ஸருக்கு விளாச சிஎஸ்கே அணி 19.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 208 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ஷிவம் துபே 7 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 15 ரன்​களும், பிர​சாந்த் வீர் 12 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 17 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். லக்னோ அணி தரப்​பில் திக்​வேஷ் ராதி, ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு இது 6-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் 12 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 5-வது இடத்​துக்கு முன்​னேறியது. இது​வரை 11 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள சிஎஸ்கே 6 வெற்​றி, 5 தோல்வி​களை பதிவு செய்துள்​ளது. லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இது 8-வது தோல்​வி​யாக அமைந்​தது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை முதல் அணி​யாக லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் இழந்​தது. அந்த அணி 11 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களை பெற்று 10-வது இடத்​தில் உள்​ளது.

அந்த அணிக்கு இன்​னும் 3 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்​ளது. இதில் அனைத்​தி​லும் அந்த அணி வெற்றி பெற்​றாலும் அதி​கபட்​ச​மாக 12 புள்​ளி​களை மட்​டுமே பெற முடி​யும். ஆனால் டாப் 3-ல் உள்ள சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 14 புள்​ளி​களை​யும், குஜ​ராத் டைட்​டன்ஸ் 14 புள்​ளி​களை​யும், பஞ்​சாப் கிங்​ஸ் 13 புள்​ளி​களை​யும் இப்​போதே குவித்​துள்​ளன. இதற்கு அடுத்​த​படி​யாக ஆர்​சிபி, ராஜஸ்​தான்​ ராயல்​ஸ்​, சிஎஸ்​கே 12 புள்​ளி​களை பெற்​றுள்​ளன.

13 பந்தில் அரை சதம் அடித்து சாதனை

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் உர்வில் படேல் 13 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் பகிர்ந்து கொண்டர் உர்வில் படேல். ஜெய்ஸ்வால் கடந்த 2023-ம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 13 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

32 ஆயிரம் ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியை காண மைதானத்தில் 32,825 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

பவர்பிளேவில் அதிகம்

ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் பவர்பிளேவில் அதிக ரன்கள் விளாசப்பட்டது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி பவர்பிளேவில் 91 ரன்கள் குவித்து இருந்தது.

தப்பித்த உர்வில் படேல்

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் உர்வில் படேல் 19 பந்துகளில் 62 ரன்கள் விளாசியிருந்த போது கொடுத்த பிரின்ஸ் யாதவ் பந்தில் பேக்வேர்டு பாயின்ட் திசையில் கொடுத்த கேட்ச்சை திக்வேஷ் ராதி தவறவிட்டார். 2019-க்கு பிறகு முதல் வெற்றி ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 204 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது. ஐபிஎல் தொடரில் 180 ரன்களுக்கு மேலான இலக்கை சிஎஸ்கே அணி 2019-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் துரத்தி வெற்றி கண்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சிஎஸ்கே அணி 180+ ரன்களை இலக்கை துரத்திய 14 ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்தது.

இன்​றைய ஆட்​டம் ​

பஞ்​சாப்​ - டெல்​லி

இடம்​: தரம்​சாலா

நேரம்​: இர​வு 7.30

நேரலை: ஸ்​டார்​ ஸ்​போர்​ட்ஸ், ஜியோஹாட் ஸ்டார்