惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
G
Google Developers Blog
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
IT之家
IT之家
N
Netflix TechBlog - Medium
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி: நயினார் நாகேந்திரன்...
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக படு​தோல்​வியைச் சந்​தித்​துள்ள நிலை​யில், பாஜக மாநிலத் தலை​வ​ரான நயி​னார் நாகேந்​திரனின் பதவிக்கு சிக்​கல் ஏற்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் களம் கண்ட பாஜக, பெரும் பின்​னடைவைச் சந்​தித்​துள்​ளது.

இந்​தத் தேர்​தலில் 27 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட்​டது. மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் தமிழிசை சவுந்​தர​ராஜன், எல்​.​முரு​கன் மற்​றும் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனி​வாசன் போன்ற நட்​சத்​திர வேட்பாளர்​கள் களமிறக்​கப்​பட்​டனர்.

அதே​நேரம், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை இத்​தேர்​தலில் போட்​டி​யி​டா​மல் பிரச்​சா​ரப் பணி​களில் கவனம் செலுத்​தி​னார். பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மற்​றும் ஜே.பி.நட்டா உள்​ளிட்ட தேசி​யத் தலை​வர்​கள், பல்​வேறு மாநில முதல்​வர்​கள் தமிழகத்​தில் முகாமிட்டு தீவிரப் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர்.

இருப்​பினும், போட்​டி​யிட்ட 27 இடங்​களில் ஒரேயொரு இடத்​தில் மட்​டுமே பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. 26 தொகு​தி​களில் அக்​கட்சி படு​தோல்​வியைத் தழு​வி​யிருப்​பது டெல்லி மேலிடத்தை கடும் அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. குறைந்​தது 10 தொகு​தி​களிலா​வது வெற்றி கிட்​டும் என நம்​பி​யிருந்த பாஜக தலை​மைக்​கு, இந்த முடிவு பெரும் ஏமாற்​றத்​தைத் தந்​துள்​ள​தால், தோல்விக்​கான காரணங்​களை ஆராய ‘உண்மை கண்​டறி​யும் குழு’ ஒன்றை அமைக்க மேலிடம் உத்​தர​விட்​டுள்​ளது.

தேசிய அளவி​லான முக்​கிய நிர்​வாகி​கள் மற்​றும் தமிழக பாஜக​வின் மூத்த நிர்​வாகி​கள் இந்​தக் குழு​வில் இடம்​பெறவுள்​ளனர். இக்​குழு அளிக்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில், மாநிலத் தலை​மைப் பொறுப்​பில் மாற்​றம் இருக்​கும் என கூறப்​படு​கிறது. கடந்த நாடாளு​மன்​றத் தேர்​தலில் அண்​ணா​மலை​யின் தலை​மை​யில் பாஜக 24 இடங்​களில் களம் கண்​ட​போது, ஓரிடத்​தில்​கூட வெற்​றி​பெற​வில்லை என்​றாலும், வாக்கு சதவீதம் 11.24 ஆக உயர்ந்​தது. 12 தொகு​தி​களில் பாஜக இரண்​டாம் இடத்​தைப் பிடித்து அதி​முகவையே பின்​னுக்​குத் தள்​ளியது.

ஆனால், அண்​ணா​மலைக்கு மாற்​றாக நயி​னார் நாகேந்​திரன் மாநிலத் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற பிறகு, கட்​சி​யின் அதிரடி செயல்​பாடு​கள் குறைந்​து, மந்​தநிலை ஏற்​பட்​டதே தேர்​தல் தோல்விக்கு முக்​கியக் காரணம் என கட்சி நிர்​வாகி​கள் கருதுகின்​றனர்.

டெல்லி மேலிடம் கவனிக்கும்: இதுகுறித்​துப் பேசிய பாஜக மூத்த நிர்​வாகி ஒரு​வர், "அண்​ணா​மலை தலை​மை​யில் இருந்த அந்த எழுச்​சி, இப்​போது காணா​மல் போய்​விட்​டது. கட்​சி​யின் வாக்கு வங்கி பெரு​மளவு சரிந்​துள்​ளது. தற்​போது தமிழகத்​தில் அமைந்​துள்ள தவெக அரசின் செயல்​பாடு​களை அடுத்த 6 மாதங்​களுக்கு டெல்லி மேலிடம் உன்​னிப்​பாகக் கவனிக்​கும்.

அதன் பிறகே புதிய மாநிலத் தலை​வர் குறித்த அறி​விப்பு வெளி​யாகும். பெரும்​பாலான நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் அண்​ணா​மலை மீண்​டும் தலைமை ஏற்க வேண்​டும் என விரும்​பு​கின்​றனர். எது​வாக இருந்​தா​லும்​ டெல்​லி தலை​மையே இறுதி முடிவு எடு​க்​கும்​" என்​றார்​.