惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
B
Blog RSS Feed
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
IT之家
IT之家
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
D
Docker
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நான் யார்? - கதை
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

மகரந்தபுரத்தின் மன்னர் புலேந்திரன் வேட்டைக்குப் புறப்பட்டார். நீண்ட பயணத்தில் மன்னருக்குத் தாகம் வந்தது. தண்ணீர் கேட்டார். அமைச்சர் திசைக்கு ஒரு காவலரை அனுப்பி தண்ணீர் எடுத்துவரச் சொன்னார்.

நீண்ட நேரம் ஆகியும் காவலர்கள் வரவில்லை. அதனால் அமைச்சரே தண்ணீர் தேடிச் சென்றார். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தூரத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். “அமைச்சரே, அவரிடம் சென்று தண்ணீர் இருக்கும் இடத்தை அறிந்து வாருங்கள்” என்றார் மன்னர். சென்ற வேகத்தில் திரும்பி வந்தார் அமைச்சர்.

“மன்னா, அவர் பார்வையற்றவர். அவரால் நமக்கு உதவ முடியாது.” “பார்வையற்றவருக்குத் தெரிந்திருக்காது என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? இதோ அவரிடம் நானே கேட்கிறேன். தம்பி, தண்ணீர் இங்கு எங்கே கிடைக்கும்?” பார்வையற்றவர் நான்கு திசையிலும் மூக்கால் வாசனையை முகர்ந்தார். மெல்லிய ஓசைகளை உற்றுக் கவனித்தார்.

“மன்னா, இடது பக்கம் திரும்பி இரண்டு நிமிடங்கள் நடந்தால் வலது பக்கம் ஒரு பாதைத் தெரியும். அதற்குள் மூன்று நிமிடங்கள் சென்றால் ஒரு தடாகத்தில் சுவையான நீர் கிடைக்கும்” என்றார். “ஆஹா! நன்றி தம்பி. பார்வை இல்லாமல் எப்படித் தண்ணீர் இருக்கும் இடத்தைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் மன்னர்.

“நான் இந்தப் பக்கம் ஏற்கெனவே வந்திருக்கிறேன். தடாகத்திலிருந்து சில்லென்ற காற்று வருகிறது. எனக்குக் கேட்கும் சக்தி அதிகம். நீரின் சலசலப்பு கேட்டது. அதனால்தான் உங்களுக்கு என்னால் சரியாக அடையாளம் சொல்ல முடிந்தது.” “ஓ, உங்கள் பெயர் என்ன தம்பி? எங்கே வசிக்கிறீர்கள்?” “நெடுமாறன். நான் தாங்கள் ஆட்சி செய்யும் நாட்டில்தான் வசிக்கிறேன். குயில்தோப்பு கிராமம்.”

“ஓ, அமைச்சரே இவருக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு மன்னர் தடாகத்தை நோக்கி நடந்தார். தடாகத்தின் தண்ணீர் சுவையாக இருந்தது. “அமைச்சரே, நம்மால் இந்தத் தடாகத்தைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், நெடுமாறன் எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார்! அறிவாளியாக இருக்கிறார்” என்றார் மன்னர்.

“ஆமாம் மன்னா.” சில மாதங்களுக்குப் பிறகு சில முத்து வியாபாரிகள் மன்னரிடம் முத்து விற்பனை செய்ய வந்தார்கள். “மன்னா, இவை மூன்றும் அரிய வகை முத்துகள். தங்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறோம். இதைப் பரிசோதித்துவிட்டு, வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் ஒரு முத்து வியாபாரி.

மன்னர் அரசவையில் இருந்த வல்லுநர்களிடம் கொடுத்தார். அவர்கள் நல்ல முத்துகள் என்று சொன்னார்கள். ஆனாலும் மன்னருக்கு ஏனோ திருப்தி இல்லை. “அமைச்சரே, குயில்தோப்புக்கு ஆள் அனுப்பி நெடுமாறனை அழைத்து வரச் சொல்லுங்கள்.” “மன்னா, அவர் அறிவாளியாக இருந்தாலும் முத்தை எப்படிப் பரிசோதிக்க முடியும்?” “அதையும் பார்த்துவிடலாம்.”

அன்று மாலை நெடுமாறன் அழைத்துவரப்பட்டார். மன்னர் முத்துகளை அவரிடம் கொடுத்து, பரிசோதிக்கச் சொன்னார். முத்துகளை வாங்கிப் பார்த்த நெடுமாறன், மூன்றே நிமிடங்களில் ஒரு முத்து சரியில்லை என்று சொல்லி விட்டார்! “எப்படிக் கண்டறிந்தீர்கள் நெடுமாறன்?” என்று மன்னர் வியப்புடன் கேட்டார்.

“முத்துகளை என் உள்ளங்கையில் வைத்துச் சுற்றினேன். இரண்டு முத்துகள் நன்றாகச் சுற்றின. இந்த முத்து மட்டும் சற்று வளைந்து நெளிந்து சுற்றியது. அதனால் அது விரிசல் விட்ட முத்தாக இருக்கக் கூடும் என்று நினைத்தேன். யாராவது மீண்டும் பரிசோதியுங்கள்” என்றார் நெடுமாறன்.

மன்னரே முத்துகளை வாங்கிப் பரிசோதித்தார். ஒரு முத்து விரிசல் விட்டிருந்தது. “இந்த முறையும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்! என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் கேட்போம்.” “ஐயோ, மன்னா அதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று பதறினார் நெடுமாறன்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் கோபப்படவே மாட்டேன். ஆனால், உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்” என்றார் மன்னர். “மன்னா, தாங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.”

“ஆ... என்ன துணிச்சல் உங்களுக்கு? என் பரம்பரை பற்றித் தங்களுக்கு என்ன தெரியும்?” “மன்னா, கோபப்பட மாட்டேன் என்று உறுதி அளித்ததால் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் வருகிறேன்” என்று நெடுமாறன் புறப்பட்டார்.

மன்னருக்கு மனமே சரியில்லை. தன் தாயிடம் சென்று நடந்ததைக் கூறினார். “புலேந்திரா, நெடுமாறன் சொன்னது உண்மைதான். நான் பெற்றெடுத்த மகனுக்குப் பார்க்கும் திறன் இல்லை என்பதை அறிந்த சிலர், எனக்கும் உன் அப்பாவுக்கும் தெரியாமல் ஒரு குழந்தையை மாற்றிவிட்டார்கள். இந்த விஷயம் எனக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்தது” என்றார்.

“ஐயோ, நெடுமாறன்தான் தாங்கள் பெற்ற மகனா?” “இருக்கலாம்.” மீண்டும் நெடுமாறன் அழைத்துவரப் பட்டார். “நான் ஓர் ஏழையின் மகன் என்பதை எப்படிக் கண்டறிந்தீர்கள் நெடுமாறன்?” “நான் தடாகத்துக்கு வழி சொன்னபோது, பிற மன்னர்கள் தங்களிடம் இருக்கும் பொற்காசுகளையோ முத்துமாலையையோ கொடுத்திருப்பார்கள்.

நீங்கள் பசிக்குச் சோறு கொடுக்கச் சொன்னீர்கள். தாங்கள் யார் என்பதைத் தாங்களே கேட்டாலும் உண்மையைச் சொன்னதற்கு மற்ற மன்னர்கள் என்னைச் சிறையில் தள்ளியிருப்பார்கள்.

நீங்களோ என்னை ஒன்றுமே சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதரிடமும் மரியாதையாகப் பேசுகிறீர்கள். எளிய மனிதர்களால்தான் இவ்வளவு நல்ல குணத்தோடு இருக்க முடியும் என்று நினைத்தேன் மன்னா.”

“உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள்தான் இந்த நாட்டின் மன்னர். பார்க்கும் திறன் இல்லாததால் உங்களைச் சிலர் மாற்றிவிட்டனர். இனி நீங்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.”

“எனக்கு நாடு ஆளும் ஆசையோ அரண்மனையில் வசிக்கும் ஆசையோ இல்லை மன்னா. எனக்கு எளிய வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. நீங்களே நாட்டை ஆள வேண்டும்.

உங்கள் கருணையையும் அன்பையும் இன்னும் அதிகமாக ஏழைகளிடம் காட்ட வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தக் கோரிக்கையும் இல்லை மன்னா. நான் வருகிறேன்” என்று புறப்பட்டார் நெடுமாறன். மீண்டும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் மன்னர் புலேந்திரன்.

- ஜி.சுரேஷ்