

























Updated on
:
1 min read
புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான யுடிஃஎப் கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஆக்ஸிஸ் மை இந்தியா (Axis My India) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், யுடிஎஃப் (UDF) 78 இடங்கள் முதல் 90 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் (LDF) 49 இடங்கள் முதல் 62 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 0-3 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீபிள்ஸ் பல்ஸ் (People’s Pulse) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், யுடிஎஃப் (UDF) 75 இடங்கள் முதல் 85 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் (LDF) 55 இடங்கள் முதல் 65 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 0-3 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்ரிஸ் (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், யுடிஎஃப் (UDF) 70 இடங்கள் முதல் 75 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் (LDF) 60 இடங்கள் முதல் 65 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 3-5 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் - ஜேவிசி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் யுடிஎஃப் (UDF) 72 இடங்கள் முதல் 84 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் (LDF) 52 இடங்கள் முதல் 61 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 3-7 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் என்றும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், சுமார் 78% வாக்குகள் பதிவாகின. மாநிலத்தில் ஆட்சியை அமைக்க குறைந்தது 71 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாக உள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。