惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The Cloudflare Blog
宝玉的分享
宝玉的分享
I
InfoQ
博客园 - 聂微东
Jina AI
Jina AI
J
Java Code Geeks
V
V2EX
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இன்று மதிமுக பொதுக்குழு... நாளை அறிவாலயப் பிரவேசம்! - பதி...
குள.சண்முகசுந்தரம் · 2026-06-27 · via hindutamil

Updated on: 

கூட்​டணி குறித்து முடி​வெடுப்​ப​தற்​காக இன்று கூடு​கிறது மதி​முக பொதுக்​குழு. அதேசம​யம், தங்​களைத் தூற்​றி​விட்டு தவெக-வை தூக்​கி​வைத்​துக் கொண்​டாடும் வித​மாக இன்​றைய பொதுக்​குழுவில் முடி​வெடுக்​கப் ​போகிறது மதி​முக என்​பதை ஊகித்​து​விட்ட திமுக தலை​மை, மதி​முக-​வில் இருந்து ஓரங்​கட்​டப்​பட்ட ‘பொடா தியாகி​கள்’ உள்​ளிட்​டோரை​யும் நடப்பு நிர்​வாகி​கள் சிலரையும் நாளை காலை​யில் அறி​வாலயப் பிர​வேசத்​துக்கு அழைத்​திருக்​கிறது.

தவெக அரசுக்​கும் முதல்​வர் விஜய்க்​கும் ஆதர​வான கருத்​துகளை தொடர்ந்து பேசி வரும் வைகோ​வும் துரை வைகோ​வும், திமுக-வுக்கு எதி​ரான விமர்​சனங்​களை​யும் எடுத்து வீசி வரு​கிறார்​கள். இதை வைத்​து, அந்​தக் கட்சி பயணிக்​கப் போகும் திசையைக் கணித்​து​விட்ட திமுக-​வும் மதி​முக-வை​யும் வைகோவை​யும் மானாங்​கண்​ணி​யாய் விமர்​சித்து வரு​கிறது.

“ஒட்​டுமொத்த கட்​சி​யை​யும் ஒரு மண்​டபத்​துக்​குள் அடைத்​து​விடலாம்” என்று துணைப் பொதுச்​செய​லா​ளர் ஆ.ராசா ‘இறங்​கி’ அடிக்​குமளவுக்கு இருக்​கிறது மதி​முக மீதான திமுக-​வின் தாக்​குதல்​கள்.

இந்த நிலை​யில், உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெற்ற மதி​முக-வைச் சேர்ந்த எம்​எல்​ஏ-க்​களான சீர்​காழி செந்​தில் செல்​வனை​யும், கடையநல்​லூர் ராஜேந்​திரனை​யும் ராஜி​னாமா செய்​ய​வைத்து மீண்​டும் அவர்​களை தனி சின்​னத்​தில் போட்​டி​யிட வைக்க மதி​முக தலைமை மெனக்​கிட்டு வரு​கிறது. ஆனால், இவ்​விஷ​யத்​தில் எம்​எல்​ஏ-க்​கள் இரு​வருமே தயங்​கு​வ​தாகத் தெரி​கிறது.

பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக-​வில் இணைந்​திருக்​கும் அதி​முக எம்​எல்​ஏ-க்​களும் இனிமேல் இணை​ய​விருக்​கும் சி.​விஜய​பாஸ்​கர் போன்​றவர்​களும் மீண்​டும் போட்​டி​யிட்​டால் விசில் சின்​னத்​தில் தான் போட்​டி​யிடு​வார்​கள்.

அவர்​களின் வெற்​றி​யானது இலகு​வாகக்​கூட இருக்​கலாம். ஆனால், மதி​முக எம்​எல்​ஏ-க்​கள் ராஜி​னாமா செய்​தால் தனி சின்​னத்​தில் போட்​டி​யிட வேண்டி இருக்​கும். அப்​படி​யான சூழலில் மீண்​டும் வெற்​றி​பெறு​வது எந்​தளவுக்கு சாத்​தி​யம் என்று சொல்​வதற்​கில்​லை. இதையெல்​லாம் யோசித்​துப் பார்த்தே அவர்​கள் தயங்​கு​வ​தாகத் தெரி​கிறது.

இருப்​பினும் தலை​மை​யின் கட்​டளையை மீற​முடி​யாத அவர்​கள் இரு​வரும், விஜய் அரசு மீதான நம்​பிக்கை கோரும் தீர்​மானம் வாக்​கெடுப்​புக்கு வந்த நாளில் அவைக்கு வராமல் புறக்​கணித்​தார்​கள். அன்​றைய தினம் மதி​முக உயர்​நிலைக் குழு கூட்​டம் இருந்​த​தால் அவர்​கள் இரு​வரும் சட்​டமன்​றத்​துக்கு வரமுடிய​வில்லை என்று காரணம் சொன்​னார் வைகோ. அதே​போல், நேற்​றைய தின​மும் மதி​முக உயரிநிலைக் குழு கூட்​டம் கூடியது. இந்​தக் கூட்​டத்​தில், ராஜேந்​திரன் மட்​டும் கலந்து கொண்​டார். செந்​தில் செல்​வன் கலந்​து​கொள்​ள​வில்​லை.

“நான் திமுக-​வில் சேர்ந்து திமுக எம்​எல்​ஏ-​வாக இருப்​ப​தால் மதி​முக உயர்​நிலைக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ள​வில்​லை” என்று அவர் காரணம் சொன்​னார். இப்​போது இப்​படிச் சொல்​பவர் முந்​தைய கூட்​டத்​தில் எப்​படி கலந்து கொண்​டார் என்​பதும் விவாதப் பொருளாகிறது. அதேசம​யம், ராஜேந்​திரன் துணைப் பொதுச் செய​லா​ளர் என்ற முறை​யில் நேற்​றைய கூட்​டத்​தில் கலந்து கொண்​ட​தாகச் சொல்​கிறது மதி​முக வட்​டாரம்.

கூட்​டணி விஷ​யத்​தில் மதி​முக கிட்​டத்​தட்ட ஒரு முடிவுக்கு வந்​து​விட்ட நிலை​யில், அதற்கு எதிர்​வினை​யாக முன்​னாள் மற்​றும் இந்​நாள் மதி​முக நிர்​வாகி​களை கட்​சி​யில் சேர்க்க திமுக தலைமை இசைவு கொடுத்​திருக்​கிறது. மதி​முக-​வில் இருந்து மல்லை சத்யா ஒதுக்​கப்​பட்ட போதே மதி​முக முன்​னாள், இந்​நாள் நிர்​வாகி​கள் சிலர் திமுக-​வில் இணைய விருப்​பம் தெரி​வித்​தார்​கள்.

அந்​தப் பட்​டியலில், வைகோவுடன் ‘பொ​டா’ சிறை​வாசிகளாக இருந்த மதுரை அழகுசுந்​தரம், திருப்​பத்​தூர் புல​வர் செவந்​தி​யப்​பன் ஆகியோ​ரும் டி.ஆர்​.ஆர்​.செங்​குட்​டு​வன், முன்​னாள் விருதுநகர் மாவட்​டச் செய​லா​ளர் சண்​முகசுந்​தரம், முன்​னாள் அமைச்​சர் புதுக்​கோட்டை சந்​திரசேகரன், வழக்​கறிஞர் வீர​பாண்​டியன் உள்​ளிட்ட 13 முக்​கிய தளப​தி​கள் இருந்​தார்​கள். ஆனால், இவர்​களை கட்​சிக்​குள் சேர்த்​தால் கூட்​ட​ணிக்​குள் குழப்​பம் வரும் என்​ப​தால் அப்​போது இதற்கு ஸ்டா​லின் சம்​ம​திக்​க​வில்​லை.

இந்த நிலை​யில், மதி​முக தற்​போது எடுக்​கும் அரசி​யல் நகர்​வு​களுக்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக​வும் வைகோ​வும் துரை வைகோ​வும் எடுத்து வைக்​கும் விமர்​சனங்​களை நீர்த்​துப் போகச் செய்​ய​வும், தேர்​தலுக்கு முன்பு வரு​வ​தாகச் சொன்ன முன்​னாள் மதி​முக நிர்​வாகி​களை இப்​போது கட்​சி​யில் இணைத்​துக் கொள்ள இசைவு தெரி​வித்​திருக்​கிறார் ஸ்டா​லின்.

அதன்​படி அழகுசுந்​தரம், புல​வர் செவந்​தி​யப்​பன் உள்​ளிட்ட மதி​முக முன்​னாள் நிர்​வாகி​கள் 12 பேர் கொண்ட பட்​டியல் திமுக தலை​மை​யிடம் தரப்​பட்​டிருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இவர்​களோடு சேர்த்து தற்​போது மதி​முக பொறுப்​பு​களில் இருக்​கும் நாற்​பதுக்​கும் மேற்​பட்​ட​வர்​களை​யும் அறி​வால​யத்​துக்கு அழைத்து வரு​வ​தாக உத்​தர​வாதம் கொடுத்​திருக்​கிறார்​களாம். இவர்​கள் அனை​வரும் நாளை காலை 11 மணி​யள​வில் ஸ்டா​லின் முன்​னிலை​யில் திமுக-​வில் தங்​களை இணைத்​துக் கொண்​டிருப்​பார்​கள் என்​கிறார்​கள்.

இந்த இணைப்​புப் பட்​டியலில் சீர்​காழி எம்​எல்​ஏ-​வான செந்​தில் செல்​வனின் பெயரும் இருந்​தா​லும் ஆச்​சரியமில்லை என்று சொல்​லும் மதி​முக முன்​னாள் நிர்​வாகி​கள், “அதற்கு முன்​னோட்​ட​மாக இன்றே அவர் ஸ்டா​லினைச் சந்​தித்​துப் பேசி தனது நிலைப்​பாட்டை விளக்​கக்​கூடும். மதி​முக மற்​றும் வைகோவுக்கு நெருக்​க​மானவர்​கள் இருக்​கும் வட்​டாரத்​தில் இருப்​ப​தால் கடையநல்​லூர் ராஜேந்​திரனுக்கு அந்த வளை​யத்தை விட்டு வரு​வ​தில் கொஞ்​சம் தயக்​கம் இருக்​கலாம். ஆனால், செந்​தில் செல்​வனுக்கு அப்​படி​யான சங்​கடம் ஏதும் இல்​லை” என்​றும் சொல்​கிறார்​கள். இன்​றைய மதி​முக பொதுக்​குழு​வில் தி​முக-வுக்கு எதி​ராக எடுத்​து​வைக்​கப்​படும் விமர்​சனங்​களுக்​கு வைகோவுடன்​ நீண்​ட காலம்​ பயணித்​த அந்​தக்​ கட்​சி​யின்​ முன்​னாள்​ நிர்​வாகி​களை வைத்​தே ​நாளை பதில்​ கொடுக்​கப்​ போகிறது திமுக.