惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
D
DataBreaches.Net
B
Blog
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
T
The Blog of Author Tim Ferriss
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
P
Proofpoint News Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆளுநர் உரையின்போது தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன்? - ...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேசியதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலமாக பின்பற்றப்படும் மரபு. ஆனால் ஆளுநர் உரையின்போது, நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் என 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது.

இதற்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். பேரவைத் தலைவரும் நன்றி தெரிவித்தார். ஆளுநருடனான உங்களின் இணக்கம் எதுவரை செல்லப் போகிறது என்பதை உங்கள் கூட்டணிக் கட்சியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் குறுக்கிட்டு, ‘‘ஆளுநர் உரையை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதில் உங்களைப் போலவே நாங்களும் உறுதியாக இருக்கிறோம். எந்த மாநில அரசாக இருந்தாலும் ஆளுநரோடு இணக்காக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக கடைபிடித்து வருகின்றன.

இருப்பினும் தமிழக மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல், பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. சரியான முறையில்தான் இந்த அரசு முடிவெடுத்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்" என்றார்.

அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:

அவை முன்னவர் செங்கோட்டையன்: 140 கோடி மக்கள் ஏற்று கொண்ட தேசிய கீதத்தை 2 முறைபாடியது வரவேற்கத்தக்கது.

எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு: மாநில உரிமைகளை பறிக்கும் அளவுக்கு பல்வேறு குளறுபடிகளை முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த அவையில் செய்தார். ஒரு முறை தேசிய கீதம் பாடப்பட வேண்டிய இந்த பேரவையில் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. நீங்கள் நேற்று அளித்த புத்தகத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில்தான் தேசிய கீதம் என்று உள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஆளுநர் கட்டுப்பாட்டில் 2 முறை பதவியேற்பு விழாக்கள் நடந்தபோது, மாநில அரசால் எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது, அண்ணா உருவாக்கிய மாநிலக் கொள்கையில் உறுதியாக இருந்து, ஆளுநரிடம் அதுகுறித்து விளக்கம் அளித்து, எந்த ஆளுநர் புறக்கணித்தாரோ, அவர் முன்பே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

திமுக எம்எல்ஏ ஆஸ்டின்: தமிழக சட்டப்பேரவையில் கடைபிடிக் கப்படும் சில மரபுகளை மாற்ற முன்னாள் ஆளுநர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவை முறியடிக்கப்பட்டன. ஆனால், இப்போது புதிய ஆளுநர் மரபை மாற்றி, வெற்றிபெற்றுவிட்டார். ஆளுநர் அழுத்தத்துக்கு இந்த அரசு பணிந்துவிட்டது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எந்த மரபும் மீறப்படவில்லை. எந்த அழுத்தத்துக்கும் பணியவில்லை. தமிழக மக்கள் தேசிய கீதத்தை மதிப்பவர்கள். அந்த வகையில் தேசிய கீதத்துக்கு நாம் மரியாதை கொடுத்துள்ளோம்.

இந்த விவகாரத்தை மடைமாற்றம் செய்யாதீர்கள். திமுக மற்றும் அண்ணாவின் கொள்கை களைத்தான் நாங்கள் உறுதியாகப் பின்பற்றுகிறோம். நாங்கள் மாநில சுயாட்சியில் உறுதியாக இருக் கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.