惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
小众软件
小众软件
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
量子位
有赞技术团队
有赞技术团队
博客园 - Franky
V
Visual Studio Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் 3 சர்ச் தலைவர்கள் சுட்டுக்கொலை
2026-05-14 · via hindutamil

காங்போக்பியில் நடைபெற்ற தாக்குதலில், மூன்று தேவாலயத் தலைவர்கள் உயிரிழந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த உயிர் பிழைத்தவர்களைச் சந்தித்தார்.

Updated on

1 min read

இம்பால்: மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச் பாதிரியார்கள், சுராசந்த்பூர் மாவட்டம் லம்கா பகுதியில் ‘தடோவ் பேப்டிஸ்ட் அசோசியஷன்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் 2 வாகனங்களில் பாதிரியார்கள் மீண்டும் காங்போக்பிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 வாகனங்களையும் வழிமறித்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருடைய உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் பாதுகாப்புப் படையினர், தேசிய நெடுஞ்சாலை-2-ஐ மூடி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நெடுஞ்சாலைதான் மணிப்பூரையும் நாகாலாந்தையும் இணைக்கும் சாலையாகும். அத்துடன் நாட்டின் மற்ற பகுதிகளையும் இந்த தேசிய நெடுஞ்சாலைதான் இணைக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தடோவ் சங்கத் தலைவரும் பாஜக செய்தித் தொடர்பாளருமான மைக்கேல் லாம்ஜாதாங் தடோவ் கூறும்போது, "தடோவ் சமூகத்தினர் தனிப் பிரிவினர். குகி பழங்குடியினத்தவர்களுக்கும் தடோவ் சமூகத் தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில், தடோவ் சர்ச் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்து பெரும் வேதனை அளிக்கிறது.

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையில், தடோவ் சமூகத்தினரையும் குகி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் எங்கள் சமூகத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.