惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
The Cloudflare Blog
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
M
MIT News - Artificial intelligence
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
V
V2EX
Hugging Face - Blog
Hugging Face - Blog
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
腾讯CDC
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான ந...
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ஆப்​பிரிக்க நாடு​களில் எபோலோ வைரஸ் பாதிப்பு இருப்​ப​தால், சென்னை விமான நிலை​யத்​தில் சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் தீவிர சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

ஆப்​பிரிக்கா நாடு​களான உகாண்​டா, காங்​கோ, சூடான் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில், எபோலோ வைரஸ் பரவி வரு​கிறது. அந்த வைரஸ் மற்ற நாடு​களுக்​குப் பரவாமல் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும்​படி உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்​து, மத்​திய சுகா​தா​ரத்​துறை, அனைத்து விமான நிலை​யங்​களி​லும் தீவிர கண்​காணிப்​பு​களை மேற்​கொள்​ளும்​படி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

ஆலோ​சனைக் கூட்​டம்: அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் எபோலோ தடுப்பு நடவடிக்​கைகள் குறித்து சுகா​தா​ரத் துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது எபோலோ பாதிப்பு அதி​க​முள்ள ஆப்​பிரிக்க நாடு​களாக காங்​கோ, உகாண்​டா, தெற்கு சூடான் நாடு​களில் இருந்து சென்​னைக்கு நேரடி விமான சேவை​கள் இல்​லா​விட்​டாலும், இணைப்பு விமானங்​களில் வரும் பயணி​களை தீவிர​மாகக் கண்​காணித்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​டது.

அத்​தகைய நாடு​களில் இருந்து வரும் பயணி​களுக்கு விமானத்​தில் சுய அறி​விப்பு படிவங்​களை வழங்க வேண்​டும். சென்னை விமான நிலை​யத்​தில் இறங்​கு​வதற்கு முன்​பாக அந்​தப் படிவங்​களை முழு​மை​யாக நிரப்​பி, விமான பணிப்​பெண்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும். அதே​போல், எபோலோ நோய் அறிகுறிகள், தடுக்க வேண்​டிய அவசி​யம் குறித்து பயணி​களுக்கு விமானங்​களில் அறி​விப்​பு​களை தொடர்ந்து செய்ய வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

விமானப் பயணி​கள் யாருக்​காவது காய்ச்​சல், தலை​வலி, வாந்​தி, வயிற்​றுப்​போக்​கு, உடல் சோர்வு இருந்​தால், அதை உடனடி​யாக விமான ஊழியர்​களிடம் தெரிவிக்க வேண்​டும். விமானங்​களில் இருந்து இறங்கி குடி​யுரிமை சோதனை பிரிவு​களுக்கு செல்​லும் வழிகளில், பயணி​களின் உடல் வெப்​பநிலை, உடல் நிலை​யைக் கண்​காணிப்​ப​தற்கு ஏற்​கெனவே கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு பொருத்​தப்​பட்​டுள்ள அனைத்து கண்​காணிப்பு கேம​ராக்​களும் மீண்​டும் புதுப்​பிக்​கப்​பட்டு பொருத்​தப்பட வேண்​டும்.

அந்​தக் கண்​காணிப்பு கேம​ராக்​கள் மூலம், பயணி​களின் உடல் நிலை, வெப்​பநிலை போன்​றவற்​றைக் கண்​காணித்​து, உடல்​நலம் பாதிப்பு சோர்​வுடன் வரும் பயணி​களை நிறுத்​தி, தனிமைப்​படுத்​தி, அவர்​களை விசா​ரிக்க வேண்​டும். அவர்​கள் ஆப்​பிரிக்க நாடு​களோடு தொடர்​புடைய நாடு​களுக்கு சென்று வரு​கிறார்​களா என்​ப​தை​யும் கண்​டறிய வேண்​டும்.

அதில் சந்​தேகத்​துக்கு இடமான பயணி​களை உடனடி​யாகத் தனிமைப்​படுத்​தி, அதற்​கென ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள ஆம்​புலன்​ஸ்​கள் மூலம் அவர்​களை அரசு மருத்​து​வ​மனை​களுக்கு கொண்டு சென்​று, தனி வார்​டு​களில் 21 நாட்​கள் தீவிர கண்​காணிப்​பு​களில் வைக்க வேண்​டும். மேலும், விமான நிலை​யங்​கள், விமானங்​களில் போதிய அளவில் முகக்​கவசங்​கள், கையுறை​கள், பாது​காப்பு உபகரணங்​கள், சானிடைசர்​களை வைத்​திருக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இரு​மல், சளி, காய்ச்​சல் இருக்​கும் வி​மான பயணி​கள், வி​மான நிலை​யத்​தில் உள்ள பணி​யாளர்​கள்​ முகக்​கவசம்​ அணிந்​து கொள்​ள வேண்​டும்​ என்​றும்​ அறி​வுறுத்​த​ப்​பட்​டுள்​ளது.