惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Y
Y Combinator Blog
月光博客
月光博客
Blog — PlanetScale
Blog — PlanetScale
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
有赞技术团队
有赞技术团队
博客园 - 司徒正美
V
Visual Studio Blog
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘பான் வேர்ல்டு’ வெளியீட்டுக்கு தயாராகும் இந்திய படங்கள்
2026-04-25 · via hindutamil

Updated on

2 min read

இந்தி​யா​வில் பிராந்​திய மொழி திரைப்​படங்​கள் தங்​கள் எல்​லை​யில் கோலோச்​சிக் கொண்​டிருந்த நிலை மாறிவிட்டது. இப்​போது இந்​தியா முழு​வதற்​கு​மான ‘பான்​-இந்​தி​யா’ திரைப்​படங்​கள் உரு​வாகி முத்​திரை பதித்து வரு​கின்​றன. ‘பாகுபலி’ படங்​களுக்​குப் பிறகு இந்த முறையில் அதி​க​மான திரைப்​படங்​கள் உரு​வாகி வருகின்றன.

யாஷின் ‘கே.ஜி.எஃப்’, அல்லு அர்​ஜுனின் ‘புஷ்​பா’, ரிஷப் ஷெட்​டி​யின் ‘காந்​தா​ரா’, பிர​பாஸின் ‘கல்கி 2898 ஏடி’ உள்ளிட்ட திரைப்​படங்​கள் இந்​தியா முழு​வதும் வெளியாகி சூப்​பர் ஹிட் வெற்​றியைப் பெற்​றன.

இந்​நிலை​யில், இதன் அடுத்​தக்​கட்​ட​மாக உலகளா​விய கதைச் சொல்​லலுக்​கும் வெளி​யீட்​டுக்​கும் இந்​திய சினிமா தயா​ராகி இருக்​கிறது. ‘மிஷன் இம்​பாசிபிள்’, ‘அவ​தார்’ போன்ற, உலகில் உள்ள பார்​வை​யாளர்​களை இழுக்​கும் ‘பான் வேர்ல்​டு’ படைப்​பு​களுக்​கான முயற்​சிகளை இந்​திய சினிமா தொடங்கி இருக்​கிறது.

இந்​தி​யக் கலாச்​சா​ரத்தை மைய​மாகக் கொண்ட படைப்புகளை, உலகத்​தரம் வாய்ந்த பிரம்​மாண்​ட​மான காட்​சி​யமைப்​பு​களு​டன் சர்​வ​தேச ரசிகர்​களைக் கவரும் வகை​யிலும் சில திரைப்​படங்​கள் உரு​வாக்கி வரு​கின்​றன. ‘பான் வேர்ல்​டு’ படமாக உரு​வாகும் இவை, இந்​திய படைப்பாற்​றலை உலக அரங்​கில் வெளிப்​படுத்​தக் காத்திருப்பதாகக் கூறுகிறார்​கள்.

ராமாயணம்

அவற்​றில் ஒன்​று, ‘ரா​மாயணம்’. இந்​தி​யப் புராணக் கதையான ராமாயணத்தை இரண்டு பாக​மாகத் திரைப்பட​மாக்கி இருக்​கிறார், இயக்​குநர் நிதேஷ் திவாரி. இதில் ரன்​பீர் கபூர், யாஷ், சாய் பல்​லவி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட் பிளாக் பஸ்​டர் படங்​களில் பணியாற்​றிய தொழில் நுட்​பக் கலைஞர்​கள் சிலர் இதில் பணி​யாற்​றி​யுள்​ளனர். ஹான்ஸ் ஜிம்​மர் மற்​றும் ஏ.ஆர்.ரஹ்​மான் இணைந்து இசை அமைத்​துள்​ளனர். இந்தி​யப் புராணத்தை நவீன மற்​றும் பிரம்​மாண்​ட​மான காட்சி மொழி​யில் இப்​படம் உலகுக்கு எடுத்​துச் செல்​லும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ராக்கா

ராமாயணம் இந்திய படம் என்ற வகைமைக்​குள் வந்தாலும் அல்லு அர்​ஜுன் நடிக்​கும் ‘ராக்​கா’ திரைப்​படம் ‘பான் வேர்ல்​டு’ தீமை கொண்​டுள்ள கதை என்​கிறார்​கள். அட்லி இயக்​கும் சயின்ஸ் பிக் ஷன் படமான இதில் தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார். ராஷ்மிகா மந்​த​னா, மிருணாள் தாக்​குர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்க இருப்ப​தாகக் கூறப்​படு​கிறது. இது பான் வேர்ல்டு படம் என்று இப்​படத்தை தயாரிக்​கும் சன் பிக்​சர்ஸ் ஏற்​கெனவே தெரி​வித்​துள்​ளது. அதனால் இப்​படத்​துக்​கும் எதிர்​பார்ப்பு இருக்​கிறது. இதி​லும் ஹாலிவுட் தொழில்​நுட்ப கலைஞர்கள் பணி​யாற்​றி​யுள்​ளனர்.

வாரணாசி

ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ் பாபு, பிரி​யங்கா சோப்​ரா, பிருத்​வி​ராஜ் நடித்​துள்ள படம், ‘வாரணாசி’. சாகசப் படமான இதன் கதை, அண்​டார்​டி​கா, ஆப்​ரிக்​கா, இலங்கை எனப் பல்​வேறு இடங்​களி​லும் காலக்கட்டங்களிலும் பயணிக்​கிறது. ராஜமவுலி​யின் ‘ஆர்​ஆர்​ஆர்’, ஆஸ்​கர் வரை சென்​றிருப்​ப​தால் இப்​படத்​தைச் சர்​வ​தேச பார்​வை​யாளர்​களிடம் கொண்டு செல்வதற்கான முயற்​சி​யில் படக்​குழு இறங்கி இருக்கிறது. இப்​படத்​தின் விஎஃப்​எக்ஸ் காட்​சிகள் ஏற்கெனவே சர்​வ​தேச அளவில் பேசப்​பட்டு வரு​கின்​றன.

டாக்​ஸிக்

யாஷ் நாயக​னாக நடித்​துள்ள, ‘டாக்​ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்​-அப்​ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்​தாஸ் இயக்​கி​யுள்​ளார். இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, ருக்​மணி வசந்த் என பலர் நடித்​துள்​ளனர். கன்​னடம், ஆங்​கிலத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் சில ஹாலிவுட் நடிகர்​களும் நடித்​துள்​ளனர். இப்​படத்​தைச் சர்வதேச அளவில் வெளி​யிட உள்​ளனர்.

ஸ்பிரிட்

சந்​தீப் ரெட்டி வங்கா இயக்​கத்​தில் பிர​பாஸ் நடிக்​கும் ‘ஸ்பிரிட்’ திரைப்​பட​மும் சர்​வ​தேச ரசிகர்​களைக் குறி​வைத்து உரு​வாக்​கப்​படு​கிறது. இதில் கொரிய சூப்​பர் ஸ்டார், டான் லீ வில்​ல​னாக அறி​முக​மாகிறார். டான் லீயின் உலகளா​விய ரசிகர் பட்​டாள​மும், அதிரடி ஆக் ஷன் காட்​சிகளும் இத்​திரைப்​படத்​தைப் பல நாடு​களுக்​குக் கொண்டு செல்​லும் என்​கிறார்​கள்.

இவை தவிர பிர​சாந்த் நீல் இயக்​கத்​தில் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ‘டி​ராகன்​’ உள்​பட மேலும்​ சில திரைப்​படங்​கள்​ பான்​ வேர்ல்​டை குறிவைத்​து உருவாக்கப்பட்டுவருகின்​றன.