























Updated on
:
1 min read
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியில் நேற்று வெற்றிச் சான்றிதழை தேர்தல் அலுவலர் விஷ்ணு பிரியாவிடம் பெற்றார்.
அதைத்தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறோம். விஜய்க்கு வாழ்த்துகள். அவர், எப்போதும் எங்கள் வீட்டுப் பிள்ளை. கேப்டனால் வளர்ந்தவர்.நாங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைத் தொடர்கிறோம்” என்றார்.
இதனிடையே அவர் வெளியிட்ட அறிக்கையில், வெற்றிபெற்றோருக்கு வாழ்த்துகள். தோல்விக்காக யாரும் மனம் தளர வேண்டாம். ஒரு மாயை போன்றது 2026 தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி தோல்வி கணிக்க முடியாத வகையில் அமைந்துள்ளது.
இது நிரந்தரமானது கிடையாது. மாற்றம் மட்டுமே மாறாதது. இதனை உணர்ந்து சவால்களை தைரியமாக சந்திப்போம். அதோடு தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。