惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
GbyAI
GbyAI
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
B
Blog
aimingoo的专栏
aimingoo的专栏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
H
Help Net Security
V
Visual Studio Blog
量子位
A
About on SuperTechFans
博客园 - Franky
人人都是产品经理
人人都是产品经理
N
Netflix TechBlog - Medium
云风的 BLOG
云风的 BLOG
雷峰网
雷峰网
Martin Fowler
Martin Fowler
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 叶小钗
P
Proofpoint News Feed
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பகல் மற்றும் இரவு நேர மின்தேவையை பகுப்பாய்வு செய்ய 10 ஆண்...
2026-04-28 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: பகல் மற்​றும் இரவு நேர மின்​தேவையை பகுப்​பாய்வு செய்து பத்து ஆண்​டு​ கால மின் திட்​டத்தை உரு​வாக்க மின் பகிர்​மான கழகம் திட்​ட​மிட்​டுள்​ளது.

தமிழகத்​தின் தினசரி மின்​சார தேவை சராசரி​யாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்​களில் 20 ஆயிரம் மெகா​வாட்​டை​யும் கடந்து மின் தேவை அதி​கரி​கரிக்​கும். தமிழகத்​தில் கடந்த 21-ம் தேதி அதி​கபட்ச மின் தேவை 21,060 மெகா​வாட் பதி​வானது.

தமிழக மின் வாரி​யம் தனக்கு சொந்​த​மான அனல், எரி​வாயு மின் நிலை​யங்​கள், சூரியசக்தி மற்​றும் காற்​றாலைகள் மூல​மாக மின் உற்​பத்தி செய்து தேவையை பூர்த்தி செய்​யும், இதைத் தவிர மத்​திய அரசின் மின் உற்​பத்தி நிலை​யங்​களில் இருந்து கிடைக்​கும் தமிழகத்​துக்​கான பங்​கில் இருந்​தும் தேவை பூர்த்தி செய்​யப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இந்த மின் தேவையை பகல் நேரம் மற்​றும் இரவு நேரம் என பிரித்து அதில் ஏற்​படும் இடைவெளியை பகுப்​பாய்வு செய்து 10 ஆண்​டு​ கால மின் திட்​டத்தை உரு​வாக்க மின் பகிர்​மான கழகம் திட்​ட​மிட்​டுள்​ளது. மின் வாரி​யத்தை பொறுத்​தவரை காலை 7 முதல் மாலை 6 மணி வரை உள்ள தேவையை பகல் நேர மின் தேவை​யாக​வும், மித​முள்ள நேரங்​களை இரவு நேர மின் தேவை​யாக​வும் கணக்​கிட்​டுள்​ளது.

இது குறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: மத்​திய மின்​சார ஆணை​யத்​தின் மின் தேவை மற்​றும் அதனை பூர்த்தி செய்​யும் திறன் தொடர்​பான 2026-27 முதல் 2035-36 ஆண்டு வரையி​லான தேசிய மின்​சார திட்ட அறிக்​கை​யில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பகல் நேரத்​தில் அதிக மின்​தேவை​யும், இரவு நேரத்​தில் அது 3ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகா​வாட் வரை குறை​யும் என தெரி​வித்​துள்​ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்​டு​களில் பகல் மற்​றும் இரவு நேர தேவை இடையி​லான வித்​தி​யாசத்தை ஆய்வு செய்​யும் போது இரவு நேரத்​தில் தேவை குறை​வாக இருந்​துள்​ளதை மத்​திய மின்​சார ஆணைய ஆய்​வு​கள் தெரிவிக்​கின்​றன.

அதாவது கடந்த 2 ஆண்​டு​களில் சராசரி மின் தேவை பகல் நேரங்​களில், ஏப்​ரல் மாதத்​தில் 20,081 மெகா​வாட்​டாக​வும், மே மாதத்​தில் 20,399 மெகா​வாட்​டாக​வும், ஜூன் மாதத்​தில் 21,183 மெகா​வாட்​டாக​வும் இருக்​கும் நிலை​யில், இரவு நேரங்​களில் ஏப்​ரல் மாதத்​தில் 20,116 மெகா​வாட்​டாக​வும், மே மாதத்​தில் 19,688 மெகா​வாட்​டாக​வும், ஜூன் மாதத்​தில் 20,209 மெகா​வாட்​டாக​வும் குறைந்​துள்​ளது.

கோடை காலங்​களில் பகல் மற்​றும் இரவு நேரங்​களுக்கு இடையி​லான இடைவெளி அதி​க​மாக இருக்​கும். பகல் நேர அதிக தேவை சூரிய மின் உற்​பத்​தி​யால் பூர்த்தி செய்​யப்​படு​கிறது.

இருப்​பினும், நவம்​பர் மற்​றும் டிசம்​பர் போன்ற பரு​வ​மழை மற்​றும் குளிர்​கால மாதங்​களில், குறைந்த சூரிய உற்​பத்தி மற்​றும் நுகர்வு முறை​கள் காரண​மாக இந்த இடைவெளி குறை​கிறது, சில நேரங்​களில் அப்​படியே தலைகீழாக மாறுகிறது. பரு​வ​மழை காலத்​தில் போதிய அளவு மழை பெய்​யாத​தா​ல் தேவை அதி​கரித்​தது. இந்த தேவை மரபு​சார் மின் உற்​பத்தி ஆதா​ரங்​கள் வாயி​லாகவே பூர்த்தி செய்​யப்​பட்​டது. ஆனால் இரவு நேர தேவை​யில் பெரிய மாற்​றம் ஏதும் ஏற்​பட​வில்​லை.

தற்​போது கார்​பன் உமிழ்வை குறைக்க புதுப்​பிக்​கத்​தக்க ஆதா​ரங்​கள் மூலம் பசுமை மின் உற்​பத்தி திறன் அதி​கரித்து வரும் நிலை​யில் பகல் மற்​றும்

இரவு நேர தேவையை பகுப்​பாய்வு செய்து 10 ஆண்​டு​கால மின் திட்​டத்தை உரு​வாக்க திட்​ட​மிட்​டுள்​ளோம். இதன்மூலம் மின்​சா​ரத் தேவையை பூர்த்தி செய்​வதற்கு அனல் மின் நிலை​யம், சூரிய சக்​தி, காற்றாலை போன்ற ஆதா​ரங்​கள் எவ்​வளவு பங்​களிப்​பு​களை வழங்க வேண்​டும்​ என்​பது மதிப்​பிடு செய்​யப்​படும்​. மேலும்​ எந்​த நேரத்​துக்​​காக எவ்​வளவு சேமிக்​க வேண்​டும்​ என்​ப​தை​யும்​ மதிப்​பிட உதவும்​.இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.