





















Updated on:
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ...! சுகுமாரி’. இதில் வீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தைக் கங்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கிறார்.
இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. நாயகியைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பது போன்ற கதையைக் கொண்ட இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, “இத்திரைப்படம் தென்னிந்திய ரசிகர்கள் இதுவரை கண்டிராத புதிய பாணியிலான கதையைக் கொண்டது. நிச்சயமாக சிறந்த பொழுது போக்குத் திரைப்படமாக இருக்கும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。