惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
B
Blog
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
小众软件
小众软件
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
Engineering at Meta
Engineering at Meta
博客园 - Franky
V
V2EX
人人都是产品经理
人人都是产品经理
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
C
Check Point Blog
N
Netflix TechBlog - Medium
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“குதிரை பேரம் இல்லை என முதல்வர் விஜய் வெளிப்படையாக அறிவிக...
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

கடலூர்: “குதிரை பேரம் இல்லை என்றால், முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்? அதிமுகவின் ஓர் அணியை அவரே சந்திக்கிறார். குதிரை பேரம் இல்லை என முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் விருத்கிரிஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவேன். விருத்தாசலத்தை மாவட்டமாக மாற்றுவதே எனது முதல் கோரிக்கையாக, தேர்தல் வாக்குறுதியிலும் சொல்லி இருக்கிறேன்.

சட்டப்பேரவையில் பேசி முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வேன். வெற்றியை தந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் ரீல்ஸ் சோஷியல் மீடியா மோகத்தில் உள்ளனர். முதல்வர் அலுவலகத்திலேயே இதுபோல் நடக்கிறது. மக்கள் புரிந்துகொண்டால் சரி” என்றார்.

மருந்து வணிகர்கள் போராட்டம் பற்றி கேட்டதற்கு, “அவர்களின் வியாபாரம் பாதிப்பு அடைவது குறித்து, அதனை மேம்படுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடை அடைப்பு நடத்தி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கையை நியாயமாக இருப்பதால் அந்தப் பக்கம் தேமுதிக நிற்கும். அவர்களுடைய போராட்டம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற உறுப்பினர் கல்வி தகுதி பற்றி கேட்டதற்கு, “இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது. தமிழக வெற்றி கழகத்தையும், தமிழக அரசையும் தான் கேட்க வேண்டும். வேட்பாளரை யார் என்று தெரியாத நிலை தமிழகம் முழுவதும் உள்ளது. இதனை மக்கள் புரிந்துகொண்டால் போதும்” என்றார்.

ராதன் பண்டிட் குறித்து பேசியதும், “அவரை மாற்றியதற்கும் வாழ்த்துகள். அரசாங்கம் நல்ல விஷயத்தை முன்னெடுத்தால் வரவேற்கும் முதல் கட்சி தேமுதிகவாகத்தான் இருக்கும். 717 மதுக்கடைகள் மூடியதற்கு வாழ்த்துகள். சிங்கப்பெண் படை, மீனவர்கள் பிரச்சினைக்கு கடிதம் எழுதியதற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன்.

குதிரை பேரம் இல்லை என்றால் முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்? அதிமுகவின் ஓர் அணியை அவரே சந்திக்கிறார். குதிரை பேரம் இல்லை என முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிபந்தனையற்ற ஆதரவு போல அதிமுக அணியும் அறிவிக்க வேண்டும். திமுக கூட்டணி நிபந்தனையற்ற ஆதரவு போல, அதிமுக அணியும் அறிவிக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல், விலை உயர்வு ஆபத்து. மிகப் பெரிய பொருளாதார சீரழிவு. மீண்டும் ஒரு லாக்டவுன் வரும். சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வையும் கட்டுப்பாடுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 லட்சம் கோடி கடன் என்று முதல்வர் கூறுகிறார். அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். அவரை நம்பி வாக்களித்தவர்களுக்கு நல்ல ஆட்சியை தர வேண்டும்” என்றார்.