惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
博客园_首页
美团技术团队
M
MIT News - Artificial intelligence
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
爱范儿
爱范儿
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திரைப் பார்வை: சட்டென்று மாறுது வானிலை - ஜெய்யின் காப்பிய...
2026-05-16 · via hindutamil

Updated on

2 min read

திரைப் பாடலின் அழகிய வரியைத் தலைப்பாக்கி, பரிச்சயமான நட்சத்திரங்களுடன், படம் முழுவதும் ‘ரிச் லுக்’குடன் பிரேம்களை உருவாக்க வேண்டும் என்கிற தீர்மானத்துடன் ரிச்சர்ட் எம்.நாதனின் ஆடம்பரமான ஒளிப்பதிவு, அதற்கு அட்டகாசமான தயாரிப்பு வடிவமைப்பு, கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் வசீகரமான இசை எனக் களமிறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபு விஜய்.

ஆனால், காதல், தற்காலத்தின் டார்க்வெப் மாபியாவுக்கு தீனி போட்டு பணம் பண்ணும் தீயவர்கள், அரசியலில் பதவி ஆசை, சொத்துக்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்கள் எனப் பலவற்றை ஒரு களத்துக்குள் கொண்டு வந்து திரைக்கதையாகக் கோர்த்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று பார்ப்போம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ராமச்சந்திரன் (ஜெய்), 300 கோடி சொத்துக்கு அதிபதியான அமைச்சரின் மகள் என்று தெரியாமலேயே ஜானகியை (மீனாட்சி கோவிந்தராஜன்) பப் ஒன்றில் பார்த்ததுமே காதலிக்கத் தொடங்கி ‘சட்டென்று’ கல்யாணமும் செய்துகொண்டு ஹனிமூன் கிளம்பிவிடுகிறார். இவர்கள் தேன்நிலவுக்குப் போய் தங்கும் ரிசார்ட் அதிபர் ராஜுவுக்கு (கருடா ராம்) நட்சத்திர ஹோட்டல். அவருக்கு ஹோட்டல்கள், ரிசார்ட்கள் என்று ஏகப்பட்ட டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் சொத்துகள். இருப்பது போதாதென்று தன்னுடைய ரிசார்ட்களுக்கு இளம் ஜோடிகளை அதிரடி ‘வாடகை டிஸ்கவுண்ட்’ என்று கவர்ந்து இழுத்து, அவர்களின் படுக்கையறைக் காட்சிகளை டார்க் வெப் இணையதளங்களுக்கு விற்று மில்லியன் டாலர்களில் வருமானம் ஈட்டுகிறான். இது நம் நாயகனுக்குத் தெரிந்துவிட, இதிலிருந்து தன்னையும் தன்னை நம்பி வந்த பெண்ணையும் அவர் எப்படிக் காப்பாற்றினார் என்பது கதை.

முதல் பாதியில் ரிசார்ட் ராமு தவிர, இன்னும் இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர், ஜானகியின் ஆண் நண்பனாக இருந்தாலும் அவளது அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்துகளை, ஆட்டை போட, ஜானகியை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டுவருவது என்று முயலுகிறான். இன்னொரு வில்லன் ஜானகியின் அமைச்சர் அப்பா. அவர், தன்னுடைய அரசியல் பதவி சுகத்துக்காக மூத்த அமைச்சருக்குத் தன் மகளை இரண்டாம் மணம் செய்துகொடுக்க முயல்கிறார். இந்தச் சிக்கல் போதாது என்று புதுமணத் தம்பதிகளான நமது நாயகன் - நாயகி இடையே கருத்து வேறுபாடு வேறு ஊடாக வந்து பாடாகப் படுத்துகிறது.

கருடா ராம் செய்யும் தொழிலே கர்ணக் கொடூரமாக இருக்கும்போது பிறகு எதற்கு இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் வில்லன்கள் என்கிற கேள்வி எழுகிறது. அப்பாவை வெறுத்து வெளியே வந்து, நாயகனைத் திருமணம் செய்துகொள்ளத்தான் இந்த எக்ஸ்ட்ரா என்றால் இயக்குநருக்குத் திரைக்கதையோ, கதாபாத்திரமோ சரிவர எழுத வரவில்லை என்று பொருள். இதுபோல் திரைக்கதை சிக்கல், இரண்டாம் பாதியிலும் இருந்தாலும் தர்க்கங்களும் ஆங்காங்கே பல்லிளித்தாலும், கிளைமாக்ஸில் நாயகன் செய்யும் ஐடியா ரசிக்கும்படியாக நச்சென்று இருக்கிறது. ஆனால், அதை டீடெயில் செய்திருந்தால் ரசிகர்களுக்கும் இன்னும் பிடிக்கும்.

வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று கலவை சோறு போல மூன்று விதமான கேரக்டர்களை பிசைந்துகொண்டு வரும் யோகி பாபு தயவு செய்து நாம் என்ன மாதிரியான கதாபாத்திரங்களை நடிக்கிறோம், சம்பளம் கொடுத்தால் கேரக்டர் கேட்காமலேயே நடிக்கப் போகலாமா என்பதையெல்லாம் கொஞ்சம் யோசிப்பது நல்லது. இல்லையென்றால் போகி பாபு ஆகிவிட வேண்டியிருக்கும்.

படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் என்றால், இரண்டாவது பலம் இசையமைப்பாளர். மூன்றாவது இடத்துக்குத்தான் நடிகர் ஜெய் வந்து சேர்கிறார். ஜெய் பார்க்க அழகாகவும் ஒரு காதல் நாயகனுக்குரிய வசீகரத்தை அப்படியே சேதாரம் இல்லாமல் தக்க வைத்திருந்தாலும் அவர் இந்தப் படத்தில் ஆடியிருப்பது சரியான அழுகுணி ஆட்டம்! ஆமாம்!

விஜய் ஸ்டைலை அட்டைக் காப்பியடித்து நடித்திருக்கிறார். அதை ஒரு கட்டம் வரைதான் ரசிக்க முடிகிறது. தவிர அவருக்கென்று அமைந்துவிட்ட ஓர் இயல்பான உடல்மொழியைக் கைவிட்டது அவருக்கு இது சுத்தமாக செட்டாகவில்லை என்பது உறுதி. அவர் இதுபோன்ற விஷயப்பரிச்சையை இந்த ஒரு படத்துடன் நிறுத்திவிடுவார் என்று நம்புவோம்.

ஜானகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் ஜெய்யைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். கிளாமர் தொடங்கி. வளரும் நடிகைகள் நடிக்கத் தயங்கும் காட்சிகளில் எல்லாம் துணிந்து நடித்திருக்கிறார். ஜெய் ஆடியது காப்பி என்றால் மீனாட்சி ஆடியது ஒரிஜினல் ஆட்டம்!

நல்ல கதைக்களம் கிடைத்தும் அதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ்களை ஏற்றியதால் தடுமாறுகிறது இந்த ‘சட்டென்று மாறுது வானிலை’. மற்றபடி சுவாரசியமான காதல் காட்சிகள், அசத்தலான இசை, ஒளிப்பதிவு, கிளைமாக்ஸ் ஐடியாக ஆகியவற்றுக்காக ஒருமுறைப் பார்க்கலாம்.