惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
B
Blog
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
量子位
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
雷峰网
雷峰网
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
V
V2EX
博客园_首页
I
InfoQ
B
Blog RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்க திட்டம்?
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

ஊட்டி: பிரசித்​திபெற்ற ஊட்டி மலர் கண்​காட்​சியை முதல்​வர் விஜய் தொடங்கி வைப்​பார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. மலர் கண்​காட்​சிக்​கான ஆயத்​தப் பணி​கள் வேக​மாக நடந்து வருகின்​றன.

நீல​கிரி மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் மே மாதம் கோடை​விழா​வின்​போது, காய்​கறி கண்​காட்​சி, வாசனை திர​விய கண்​காட்​சி, ரோஜா காட்​சி, மலர் கண்​காட்​சி, பழக்​காட்சி ஆகியவை நடை​பெறும். இந்​தாண்டு 128-வது மலர் கண்​காட்​சிக்​காக சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 275 வகை​யான மலர் விதைகள் மற்​றும் செடிகள் ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி மற்​றும் நெதர்​லாந்து ஆகிய நாடு​களி​லிருந்​தும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும் பெறப்​பட்​டன. இதன்​மூலம் மலர் செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்டு, பூங்​கா​வில் பல்​வேறு பகு​தி​களில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டுள்​ளன. தற்​போது, மலர் செடிகளில் மலர்​கள் பூத்து குலுங்​கு​கின்​றன.

மலர் கண்​காட்​சிக்​கான தேதி இன்​னும் அறிவிக்​கப்​பட​வில்​லை. கடந்த காலங்​களில் மலர் கண்​காட்​சியை முதல்​வர்​களாக இருந்த ஜெயலலி​தா, பழனி​சாமி, மு.க.ஸ்​டா​லின் ஆகியோர் தொடங்​கி​ வைத்​துள்​ளனர்.

இந்​தாண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் கோடை விழா குறித்த அறி​விப்பு எது​வும் வெளி​யிடப்​பட​வில்​லை. அதே​நேரம், ஊட்​டி​யில் மலர் கண்​காட்​சி, குன்​னூரில் பழக்​காட்சி மட்​டும் நடத்த தோட்​டக்​கலைத்​துறை முடிவு செய்​துள்​ளது.

தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்று நடக்​கும் முதல் அரசு நிகழ்ச்சி என்​ப​தால், ஊட்டி மலர் கண்​காட்​சியை தொடங்​கி வைப்​ப​தற்​காக, முதல்​வர் விஜய்யை அழைக்க தோட்​டக்​கலைத் துறை​யினர் முடிவு செய்​துள்​ளனர். ஆனால், அதி​காரப்​பூர்​வ​மாக இது வரை எவ்​வித அறி​விப்​பும் வரவில்​லை.

முதல்​வர் ஊட்டி மலர் கண்​காட்​சி​யில் பங்​கேற்க சம்​மதம் தெரிவிக்​கும் பட்​சத்​தில், அவசரக​தி​யில் ஏற்​பாடு​களை செய்ய முடி​யாது என்​ப​தால், அதற்​கான ஆயத்​தப் பணி​கள் ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் தற்​போதே தொடங்​கப்​பட்​டுள்​ளன. மேடை, அரங்​கு​கள் மற்​றும் சிறப்பு அலங்​காரங்​கள் அமைக்​கும் பணி​கள் தீவிரமாக நடந்து வரு​கின்​றன.

இந்​தாண்டு சிறப்​பம்​ச​மாக மகாபலிபுரம் கடற்​கரை கோயில், இருவாச்சி பறவை, படகு உள்​ளிட்ட அலங்​காரங்​கள் மேற்​கொள்ளப்பட உள்​ளன.