惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
Y
Y Combinator Blog
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
博客园 - Franky
F
Fortinet All Blogs
D
Docker
博客园 - 司徒正美
腾讯CDC
Recent Announcements
Recent Announcements
The Cloudflare Blog
B
Blog RSS Feed
GbyAI
GbyAI
T
Tailwind CSS Blog
雷峰网
雷峰网
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவில் கையெழுத்து வேட்டை: பொதுச் செயலாளர் பழனிசாமிக்க...
செய்திப்பிரிவு · 2026-05-11 · via hindutamil

Updated on: 

சென்னை: அதி​முக​வில் பொதுச் செய​லா​ளர் பழனிசாமிக்கு எதிர்ப்பு வலுத்​துள்​ளது. முன்​னாள் அமைச்சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் அதி​முக எம்​எல்ஏக்​கள் 34 பேர் தவெக​வுக்கு ஆதர​வு அளிக்க முடிவெடுத்​துள்​ளனர். அவர்​களது ஆதர​வுக் கடிதத்​துடன் முதல்​வர் ஜோசப் விஜய்யை சந்​திக்க சி.​வி.சண்​முகம் முயற்சி மேற்​கொண்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளது. ஆனால், எதிர்க்​கட்சி அந்​தஸ்​து ​கூட கிடைக்​காத அளவுக்கு தோல்​வியை சந்​தித்​துள்​ளது. பல தொகு​தி​களில் 3-ம் இடத்​துக்கு சென்​றதுடன், பலர் டெபாசிட்​டை​யும் இழந்துள்​ளனர்.

இதனால், வெற்றி பெற்ற எம்​எல்​ஏக்​கள் பொதுச் செயலாளர் பழனி​சாமிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்கியுள்​ளனர். தோல்விக்குப் பொறுப்​பேற்று பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து அவர் விலக வேண்​டும் என வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

அடுத்​தகட்ட நடவடிக்கை தொடர்​பாக முன்​னாள் அமைச்சர்​கள் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்​றும் இதர எம்எல்ஏக்​கள் கடந்த 3 நாட்​களாக சென்னை எம்ஆர்சிநகரில் உள்ள சி.​வி.சண்​முகம் இல்​லத்​தில் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில், அதிமுக எம்​எல்​ஏக்​கள் 34 பேர் சி.​வி.சண்​முகம் தலைமையில் தவெக​வுக்கு ஆதர​வளிக்க முடிவெடுத்துள்ளனர்.

முன்​ன​தாக, நேற்று காலை பழனி​சாமி தலை​மை​யில், சென்னை பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்லத்தில், சி.​வி.சண்​முகத்​தின் நடவடிக்கை தொடர்​பாக மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் ஆலோ​சனை நடத்தப்பட்டுள்​ளது. அதில், சி.​வி.சண்​முத்​துடன் சமாதானப் பேச்சு நடத்த முடிவு செய்​யப்​பட்​டது.

அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி தரப்​பில், சி.வி.சண்முகத்தை சந்​தித்து பேசி​ய​தில், ‘‘பழனி​சாமி சரியான கூட்டணி அமைக்​க​வில்​லை. வேட்​பாளர்​களுக்கு கட்சி நிதி​யும் போதிய அளவு வழங்​க​வில்​லை. கட்​சி​யின் தோல்விக்கு அவர்​தான் காரணம். அதனால், அவர் பதவி விலக வேண்​டும். தவெக​வுக்கு அதி​முக எம்​எல்​ஏக்​கள் ஆதரவு அளிப்​பது உறு​தி. அதில் எந்த மாற்​ற​மும் இல்​லை’’ என்று சி.​வி.சண்​முகம் திட்​ட​வட்​ட​மாக கூறி​யதாக தெரிகிறது.

அதி​முக எம்​எல்​ஏக்​கள் 34 பேரின் ஆதர​வுக் கடித​மும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. மூன்​றில் 2 பங்​கு, அதாவது 32 எம்​எல்​ஏக்​களுக்கு மேல் தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்​தால் கட்​சித் தாவல் சட்​டம் பாயாது என சட்ட ஆலோ​சனை​யும் பெறப்​பட்​டுள்​ளது.

34 பேரின் ஆதரவுக் கடிதத்​துடன், முதல்வர் ஜோசப் விஜய்யை சந்​திக்க சி.​வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ள​தாக கூறப்படுகிறது. அதிமுக சட்டப்பேரவைக் குழுத்தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்வதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.