惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
J
Java Code Geeks
爱范儿
爱范儿
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog RSS Feed
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
月光博客
月光博客
博客园 - 聂微东
博客园 - Franky
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்க தேர்தல் பார்வையாளர்களில் 62% பேர் பாஜக ஆளும் ...
செய்திப்பிரிவு · 2026-04-16 · via hindutamil

திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சாகேத் கோகலே

Updated on: 

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் வரும் 23, 29-ம் தேதி​களில் சட்டப்பேர​வைத் தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு 2 கட்​ட​மாக நடைபெறவுள்​ளது. தேர்​தல் சுமூக​மாக​வும், நியாய​மாக​வும் நடைபெறு​வதை உறுதி செய்​வதற்​காக தேர்​தல் பார்வையாளர்களை தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

ஒவ்​வொரு தொகு​திக்​கும் ஒரு ஐஏஎஸ் அதி​காரி தலை​மை​யில் தேர்​தல் பார்​வை​யாளர்​கள் சிலர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு நியமிக்​கப்​பட்​டுள்ள தேர்​தல் பார்​வை​யாளர்​களில் 62% பேர் பாஜக ஆளும் மாநிலங்​களில் இருந்து வந்த அதி​காரி​கள் என்று தெரிய​வந்துள்​ளது.

புதுச்​சேரி யூனியன், 4 மாநில சட்​டப் பேர​வைத் தேர்​தலுக்​காக தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் 549 பொது தேர்​தல் பார்​வை​யாளர்​கள், 180 போலீஸ் பார்வையாளர்கள், 358 தேர்​தல் செல​வுக் கணக்கு பார்வையாளர்கள் என மொத்​தம் 1,097 தேர்​தல் பார்வையாளர்களை நியமித்​துள்​ளது. இந்த 1,097 பேரில் 54% பேர் மேற்கு வங்​கத்​துக்கு பார்​வை​யாளர்​களாக அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த மூத்த தலை​வர் சாகேத் கோகலே கூறும்​போது, “தேர்​தல் காலங்​களில் முன்​னெப்​போதும் இல்​லாத எண்​ணிக்​கை​யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதி​காரி​கள், தேர்​தல் நடை​பெறவுள்ள கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்​களுக்கு இடமாற்​றம் செய்யப்பட்​டுள்​ளனர். மறு​புறம், அம்​மாநிலங்​களைச் சேர்ந்த அதிகாரி​களை அனுப்​புவதற்​குப் பதிலாக, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அதி​காரி​களைத் பார்​வை​யாளர்​களாக அனுப்​பி​யுள்​ளது" என்​றார்

மேற்கு வங்​கத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்ள 294 பொது பார்வையாளர்களில் 62 % பேர் பாஜக ஆளும் மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​கள். 111 பேர் பாஜக அல்​லாத வேறு கட்​சிகள் ஆளும் மாநிலத்​தைச் சேர்ந்தவர்​கள்.

இது குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் கூறும்​போது, “அச்​சமற்ற, வன்​முறையற்ற, தூண்​டு​தல்​களற்ற தேர்தலை நடத்த வேண்​டும் என்​பதே தேர்​தல் ஆணை​யத்​தின் எண்​ணம். அதே​போல் வாக்​குச்​சாவடியை கைப்​பற்​று​தல் அல்​லது முறை​கேடு​களோ இன்றி தேர்​தல் நடை​பெற வேண்​டும். எங்களுடைய நோக்​கம் நடுநிலையை உறுதி செய்​வது​தான்" என்றார்.

ஆனால், தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை அப்​பட்​ட​மான அதி​கார துஷ்பிரயோகம் என எதிர்க்​கட்​சிகள் வர்​ணித்​துள்​ளன.