
















நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
Updated on:
சென்னை: “தவெக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முதல்வர் விஜய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் விஜய் ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவார் என பார்த்தால், நிலைமை தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் 125 சதவீதம் பாலியல் குற்றங்கள் அதிகம்; ஆனால், தவெக ஆட்சியில் இப்போதே 100 சதவீதத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அனைவரது வீட்டிலும் பெண்பிள்ளைகள் இருக்கின்றனர். தவெக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இது சிறுபான்மையின அரசுதான் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் சொன்னபோது நன்றாகதான் இருந்தது. ப்ரோ, இந்த 3 வயது குழந்தையைப் பாருங்கள். நரம்பு புடைக்க பேசுனீர்களே ப்ரோ, இந்த குழந்தைகளுக்கு யார் பதில் சொல்வார்கள். எத்தனை நாட்கள் உங்கள் ஆட்சி தாங்கும்? சட்டம் - ஒழுங்கு சரியில்லை. ஜோசப் விஜய் ப்ரோ, உங்களுக்கு காது கேட்கிறதா?
தவெக ஆட்சி ஒரு விஷக்கிருமி. விஜய் முதுகெழும்பு இல்லாத முதல்வர். சட்டத்தை பாதுகாக்க தவறிய முதல்வர் விஜய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஓர் ஆட்சியைப் பற்றி, 6 மாதத்துக்கு குறை சொல்லக் கூடாது என்றுதான் இருந்தோம். ஆனால், நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。