惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
腾讯CDC
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
H
Help Net Security
J
Java Code Geeks
C
Check Point Blog
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக-வுக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழல்: காங்கிரஸ் எம்எல...
2026-05-06 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருந்த காங்​கிரஸ் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதில் மயி​லாடு​துறை, மேலூர், குளச்​சல், விளவங்​கோடு மற்​றும் கிளியூர் ஆகிய 5 இடங்​களில் மட்​டுமே அக்​கட்​சிக்கு வெற்றி கிடைத்​தது.

இந்​தச் சூழலில், வெற்றி பெற்ற எம்​எல்​ஏ-க்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மற்​றும் மாநில தேர்​தல் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில் எம்​எல்​ஏ-க்​கள் ஜமால் முகமது யூனூஸ், விஸ்​வ​நாதன், தாரகை கத்​பட், பிர​வீன் மற்​றும் ராஜேஷ்கு​மார் ஆகியோர் கலந்​து​கொண்​டனர். ஆலோ​சனை​யின்​போது, “தற்​போதுள்ள அரசி​யல் சூழலில் நாம் திமுக கூட்​ட​ணி​யிலேயே நீடிக்க வேண்​டும்; அவசரப்​பட்டு தவெக ஆதரவு போன்ற விவ​காரங்​களில் எந்த முடிவை​யும் எடுக்க வேண்​டாம்” என எம்​எல்​ஏ-க்​களுக்கு செல்​வப்​பெருந்​தகை அறி​வுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது.

ஆலோ​சனைக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்​தகை, “தவெக-வுக்கு ஆதரவு அளிப்​பது தொடர்​பாக அகில இந்​திய காங்​கிரஸ் தலைமை மட்​டுமே இறுதி முடிவு எடுக்​கும்” என்று தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, காங்​கிரஸ் எம்​எல்​ஏ-க்​கள் அண்ணா அறி​வால​யத்​தில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை நேரில் சந்​தித்​துப் பேசினர். அந்த சந்​திப்​புக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த தேர்​தல் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் கூறுகை​யில், “தமிழக மக்​கள் மாற்​றத்தை விரும்பி வாக்​களித்​துள்​ளனர்.

குறிப்​பாக இளைஞர்​களும், பெண்​களும் தவெக-வை நோக்​கித் திரும்​பியதே அந்த கட்​சி​யின் பிரம்​மாண்ட வெற்​றிக்கு முக்​கிய காரணம். தவெக தரப்​பிலிருந்து என்னை இது​வரை யாரும் அணுக​வில்​லை. கட்​சி​யின் பிற நிர்​வாகி​களை அவர்​கள் தொடர்பு கொண்​டார்​களா என்​பது எனக்​குத் தெரி​யாது.

இருப்​பினும், காங்​கிரஸின் பல நிர்​வாகி​கள் தவெக-வை ஆதரிக்க விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். தவெக தனது சட்​டப்​பேரவை குழுத் தலை​வரைத் தேர்வு செய்த பின் காங்​கிரஸைத் தொடர்பு கொள்​ளக்​கூடும்.

இதுகுறித்து காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராகுல்​காந்​தி, வேணுகோ​பால் ஆகியோ​ருக்கு அறிக்கை அனுப்​பப் ​பட்​டுள்​ளது. அவர்​கள் அனை​வரும் ஆலோ​சித்து இறுதி முடிவு எடுப்​பார்​கள்.

விஜய்யை சாதா​ரண​மாகக் கருத வேண்​டாம் எனத் தேர்​தலுக்கு முன்​ன​தாகவே நான் எச்​சரித்​திருந்​தேன்” என்று குறிப்​பிட்​டார். தவெக​வுக்கு பெரும்​பான்மை கிடைக்​காத​தால் அக்​கட்​சிக்கு காங்​கிரஸ் ஆதரவு அளிக்​கப்​போவ​தாக பேசப்​பட்டு வரும் சூழலில் இந்த ஆலோ​சனைக்​ கூட்​டம்​ முக்​கியத்துவம் பெறுகிறது.