惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
L
LangChain Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Recent Announcements
Recent Announcements
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
I
InfoQ
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
月光博客
月光博客
Vercel News
Vercel News
B
Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்தது சிறந்த தருணம்: குடியர...
செய்திப்பிரிவு · 2026-06-14 · via hindutamil

Updated on: 

டேராடூன்: இந்திய ராணுவ அகாடமியில் 9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்து நீண்ட கால பணியில் சேர்வது ராணுவ வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் கடந்த 1992-ம் ஆண்டில் பெண்கள் சிறப்பு சேர்க்கைத் திட்டத்தின் கீழ் அதிகாரிகளாக குறுகிய காலப் பணியில் சேர்க்கப்பட்டனர். இதனால் அவர்களால் உயர்பதவிக்கு வரமுடியவில்லை. அதன்பின் பெண்கள் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று நீண்ட காலப் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வெழுத பெண்களுக்கு உச்ச நீதிமன்றம் 2021-ல் அனுமதி அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தரவால் கடந்த 2025-ம் ஆண்டில், 17 பெண் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்தனர்.

தற்போது இந்திய ராணுவ அகாடமியில் முதல் முறையாக 9 பெண் அதிகாரிகள் உட்பட ராணுவ அதிகாரிகள் பலர் பயிற்சியை முடித்தனர். இவர்களின் பயிற்சி நிறைவு விழா உத்தராகண்ட் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது:

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் 9 பெண் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறுவது ராணுவ அகாடமியின் வரலாற்றில் சிறப்புமிக்க தருணம். இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாடு செல்வதை காட்டுகிறது.

இங்கு மேலும் பல பெண் அதிகாரிகள் வரும் காலங்களில் இணைவார்கள் என நம்புகிறேன். இந்த அகாடமி தேசத்துக்கான கவுரவம், தைரியம் மற்றும் சுயநலமற்ற சேவையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்திய ராணுவ அகாடமியில் உங்களது பயணம் ஒழுக்கம், தியாகம் மற்றும் விடாமுயற்சி கொண்டதாக இருந்தது. ராணுவத் தலைமை என்பது கட்டளையிடுவது மட்டுமல்ல, அது குணநலன், இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றியது என்பதையும் நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்.

நீங்கள் நமது தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பாதுகாவலர்கள். 140 கோடிக்கும் அதிகமான குடிமக்களின் புனிதமான நம்பிக்கையை நீங்கள் சுமக்கிறீர்கள். சேவையே மிக உயர்ந்த கடமை என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மிகவும் சவாலான சூழ்நிலைகளில் நமது எல்லைகளைப் பாதுகாத்து, நாட்டின் கண்ணியத்தை நிலைநிறுத்திய பல ராணுவத் தலைவர்கள் இந்த அகாடமியில் இருந்துதான் பயிற்சியை முடித்து வெளியேறியுள்ளனர். பயிற்சி அதிகாரிகளை வழிநடத்துவதில் அயராத முயற்சிகளை மேற்கொண்ட இந்த அகாடமியின் அதிகாரிகள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.