惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
V
Visual Studio Blog
罗磊的独立博客
有赞技术团队
有赞技术团队
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Jina AI
Jina AI
量子位
云风的 BLOG
云风的 BLOG
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
P
Proofpoint News Feed
N
Netflix TechBlog - Medium
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கே.பாக்யராஜ்: குடும்பங்கள் ரசித்துக் கொண்டாடிய திரைக்கதை ...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

இயக்​குநர், நடிகர், சிறந்த திரைக்​கதை​யாசிரியர், இசை அமைப்பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகத் திறமை கொண்ட கே.பாக்​ய​ராஜின் எதிர்​பா​ராத மறைவு திரை​யுல​கில் பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது.

தமிழ் சினி​மா​வில், ஒரு படத்​துக்கு அழகான ஹீரோ, ஹீரோ​யின், அசத்​தலான இசை உள்பட அனைத்​தும் முக்​கி​யம் என்று கருதப்பட்ட காலத்​தில் திரைக்​கதை​தான் ஒரு படத்​தின் உயிர் என்று அழுத்​த​மாக​த் தனது படங்​களின் மூலம் நிரூபித்​து, சாதித்துக் காட்​டிய​வர் கே.​பாக்​ய​ராஜ்.

பார​தி​ராஜா​விடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய காலத்​தில் அவருடைய படங்​களில் சிறிய வேடங்​களில் தலை​காட்​டிய பாக்​ய​ராஜை, தனது ‘பு​திய வார்ப்​பு​கள்’ திரைப்​படத்​தில் ஹீரோ​வாக துணிச்​சலாக நடிக்க வைத்​தார் பார​தி​ராஜா.

ஹீரோ என்​றால் இப்படித்​தான் இருக்க வேண்​டும் என்று தமிழ் சினிமா போட்டு வைத்​திருந்த வரை​முறை​களைக் கடந்​து, மூக்​குக்​கண்​ணாடி, அப்​பா​வி​யான முகம் போன்ற தோரணை​யில் களமிறங்​கிய பாக்​ய​ராஜை, அந்​தக்​கால ரசிகர்​களுக்​கும் ரசிகைகளுக்​கும் பிடித்​துப் போன​தில் ஆச்​சரி​யம் ஏது​மில்​லை.

‘சுவரில்​லாத சித்​திரங்​கள்’ படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மான பாக்​ய​ராஜ், அந்​தப் படத்​தில் ஒரு தலைக்​காதல், தனது காதலி படும் துன்​பம், பொருளா​தா​ரச் சிக்​கல் என குடும்ப வறுமையை மிக இயல்​பாக​வும் எளிமை​யாக​வும் சொல்​லி​யிருப்​பார். இந்​தப் படம் வெற்றி பெற்று எல்​லோரை​யும் கவனிக்க வைத்​தது. அதைத் தொடர்ந்​து, ‘ஒரு கை ஓசை’ படத்​தில் வாய்​பேச முடி​யாத கதா​பாத்​திரத்​தில் தனது நடிப்பை திறமை​யாக வெளிப்​படுத்​தியி ருப்​பார்.

அடுத்​தடுத்து அவர் இயக்​கிய ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்​கள்’, ‘தூறல் நின்னு போச்​சு’ படங்​களில் அப்​பா​வி​யான கதா​பாத்​திரங்​களில் நடித்​தா​லும், அதை நகைச்​சுவையோடு, அழகான மெசேஜை​யும் கதை​யில் புகுத்தி விடு​வ​தில் வல்லவராக இருந்​தார். அதுவே அவருடைய டிரேட் மார்க்​காக​வும், தனக்​கான ரசிகர் பட்​டாளம் உரு​வாவதற்கு காரண​மாக​வும் இருந்​தது என்​றால் மிகையல்ல.

அவரின் ‘அந்த 7 நாட்​கள்’ படத்​தின் கிளை​மாக்​ஸில் அவர் பேசும், “எண்ட காதலி உங்​களுக்கு மனைவி ஆயிட்டு வரும் சாரே... ஆனா, உங்க மனைவி எனக்கு காதலி​யா​யிட்டு வராது சாரே” என்ற வசன​மும் கிளை​மாக்​ஸும் இன்​று​வரை பேசப்​படு​கின்​றன. ‘மெளன கீதங்​கள்’ படத்​தில் அவருக்​கும், மனை​வி​யாக நடித்​திருக்​கும் சரி​தாவுக்​கு​மான காட்​சிகளில் உணர்​வு​கள் பேசும் மவுனத்தை அட்​ட​காச​மாகப் படமாக்கி இருப்​பார் பாக்​ய​ராஜ். தனது குற்ற உணர்ச்​சி​யை​யும் மனித மன உளவியலை​யும் அழகாகச் சொன்ன படங்​களில் அது​வும் ஒன்​று.

‘டார்​லிங் டார்​லிங் டார்​லிங்’ படத்​தின் திரைக்​கதை​யும் அந்த காமெடி கிளை​மாக்​ஸும் தமிழ் சினிமா ரசிகர்​கள் மட்​டுமல்ல, அன்​றைய திரை​யுல​கினரையே ஆச்​சரியப்​படுத்​திய ஒன்​று. அப்​படியொரு துணிச்​சலான கிளை​மாக்ஸை யோசிக்க, குடும்​பங்​கள் கொண்​டாடிய திரைக்​கதை மன்​னன் பாக்​ய​ராஜால் மட்​டுமே முடி​யும். அதே​போல் ‘முந்​தானை முடிச்​சு’ திரைப்​படத்​தின் மூலம் தாய்க்​குலங்​களின் ஆதரவை முற்​றி​லும் தனதாக்​கிக் கொண்​டார்.

மனை​வியை இழந்த கணவன், கைக்​குழந்​தை​யுடன் படும் பாடு​களை​யும், இரண்​டாம் திரு​மணம் செய்து கொண்​டால், சித்​தி​யால் தன் குழந்​தைக்கு ஆபத்து நேருமோ என்ற அவருடைய மனப் போராட்​டத்​தை​யும் திரை​யில் காட்​டிய விதம், பெண் ரசிகர்​களை வெகு​வாக கட்​டிப் போட்​டு​விட்​டது.

அவருடைய படங்​களில் ‘இது நம்ம ஆளு’ முக்​கிய​மான ஒன்​று. சாதி பாகு​பாடு, சமூகத்​துக்கு எதி​ரான கருத்​துகளை கூர்​மை​யான வசனங்​கள் மூலம் விளாசி​யிருப்​பார். அந்​தப் படத்​தின் கிளை​மாக்ஸ் காட்​சி​யில் பாக்​ய​ராஜும், அவரது மாம​னா​ராக நடித்​திருக்​கும் சோம​யாஜுலும் பேசும் வசனங்​கள் சிந்​தனையைத் தூண்​டு​வ​தாக அமைந்​தன. நாயக​னாக மட்​டுமல்​லாமல், வில்​ல​னாக​வும் முத்​திரைப் பதித்​திருக்​கிறார் பாக்​ய​ராஜ்.

பி.​வி.​பால​குரு இயக்​கத்​தில் ராஜேஷ் நடிக​ராக அறி​முக​மான, ‘கன்னி பரு​வத்​திலே’ படத்​துக்​குத் திரைக்​கதை, வசனம் எழு​திய பாக்​ய​ராஜ்​தான், அந்​தப் படத்​தின் வில்​ல​னாக​வும் கலக்​கி​யிருப்​பார். ஸ்டைலாக புகைப்​பிடித்​த​படி, வடிவுக் கரசியை நெருங்​கும் காட்​சிகளில் முந்​தைய படங்​களில் பார்த்த அந்த அப்​பா​வியா இவர்? என ஆச்​சரியப்​படுத்​தி​யிருப்​பார் பாக்​ய​ராஜ்.

நடிப்​போடு இசை அமைத்​தும் அசத்​திய அவர், பாடல்​களின் இனிமை​யிலும் தன்னை நிரூபித்​துக் காட்​டி​னார். சினிமா மட்​டுமல்​லாமல், பத்​திரி​கை​யாள​ராக​வும் முத்​திரைப் பதித்​தவர் பாக்​ய​ராஜ். தான் நடத்​திய ‘பாக்​யா’ இதழின் கேள்வி - பதில் பகு​தி​யில் குட்​டிக் கதைகள் சொல்​லி, வியக்க வைத்​தவர்.

அந்​தக் குட்​டிக் கதைகளுக்​காகவே அந்த இதழை ஆர்​வ​மாக வாசித்​தவர்​கள் ஏராளம். இந்​திய சினி​மா​வின் திரைக்​கதை மன்​னன் என்று அழைக்​கப்​பட்ட கே.​பாக்​ய​ராஜ், சாதாரண கதையை​யும் சுவாரஸ்​ய​மான திரைக்​கதை மூலம் ரசிக்க வைத்​தவர். ஒரு கதையை எங்கு ஆரம்​பித்​து, எப்​படி சொல்​வது என்​ப​தில் கே.​பாக்​ய​ராஜ் அசாத்​திய திறமை கொண்​ட​வர். அவருடைய திரைக்​கதை உத்தி இளம் இயக்​குநர்​களுக்கு பாட​மாக இருக்​கின்​றன.

தென்​மாவட்​டத்​தில் இருந்து சினி​மாவுக்​காக சென்னை வந்​தவர்​களுக்கு பார​தி​ராஜா எந்த அளவுக்கு இன்​ஸ்​பிரேஷ​னாக இருந்​தா​ரோ, அதே​போல் கொங்கு பகுதியில் இருந்து சினி​மாவுக்கு வந்த பல இளைஞர்​களுக்​கு நம்​பிக்​கை நட்​சத்​திர​மாக தி​கழ்ந்​தவர்​ கே.​பாக்​ய​ராஜ்.

நம்​பிக்​கைகளும்​ நட்​சத்​திரங்​களும்​ ஒருபோதும் மறையாது சாரே!