






























போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம், ‘கொம்பா’. ‘பக்கி பயலுக’ படத்தை இயக்கிய ராஜபாரதி எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ், கன்னட நடிகர் உக்ரம் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். கோல்டன் ஆரோ புரொடக் ஷன் என்ற நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ளார். சிவா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு புரூஸ் இசையமைத்துள்ளார்.
படம்பற்றி ராஜபாரதி கூறும்போது, “இது சென்டிமென்ட் கலந்த அக் ஷன் திரில்லர் படம். இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு வகையான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்தப் போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கி இருக்கிறேன். அப்பா - மகன் சென்டிமென்ட் கலந்து இன்றைய சமூகத்துக்குத் தேவையான கருத்தை சொல்லுகிற படமாக இது இருக்கும்” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。