惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
IT之家
IT之家
博客园_首页
博客园 - 【当耐特】
V
V2EX
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
GbyAI
GbyAI
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Help Net Security
T
Tailwind CSS Blog
B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
博客园 - 叶小钗
雷峰网
雷峰网
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டப்பேரவையை ‘ஷூட்டிங் ஸ்பாட்’ ஆக மாற்றிய முதல்வர்: உதயந...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘சட்​டப்​பேர​வையை ‘ஷூட்​டிங் ஸ்பாட்’ ஆக முதல்​வர் விஜய் மாற்​றி​யிருக்​கிறார், பேர​வைத் தலை​வர் இயக்​குந​ராக​வும், அமைச்​சர்​கள் உதவி இயக்​குநர் ​களாக​வும் செயல்​படு​கிறார்​கள்’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்​த​பின், தலைமை செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் உதயநிதி ஸ்டா​லின் கூறிய​தாவது: சினிமா பாணி​யில், தயார் செய்து வைக்​கப்​பட்​டிருந்த, வசனத்​தைத்​தான் முதல்வர் பதி​லுரை​யில் பேசி​யிருக்​கிறார்.

அப்​போது, சில உண்​மைக்கு மாறான தகவல்​களை அவை​யில் பதிவு செய்​தார். அதனால் நாங்​கள் குறுக்​கிட்​டோம். கொண்டு வந்​திருந்த ஸ்கிரிப்ட்டை பேசி முடிக்​கும் ​வரை எதற்​கும் பதில் சொல்லமாட்​டேன் என்ற தொனி​யில்​தான் முதல்​வர் பேசி​னார்.

பத்​திரிக்​கை​யாளர்​களுக்​கும் அவர் பதில் சொல்​வ​தில்​லை. சட்​டப்​பேர​வை​யில் எங்​களுக்​கும் அவர் பதில் சொல்​வ​தில்​லை. திமுக மீது பழி போடு​வதையே இந்த அரசு பழக்​க​மாகக் கொண்​டிருக்​கிறது. கருணாநிதி படத்​திறப்பு விழா​வில் இரு​முறை தேசிய கீதம் பாடப்​பட்​ட​தாக முதல்​வர் கூறுகிறார்.

குடியரசு தலை​வருக்கு தனி புரோட்​ட​கால் உள்​ளது என்​பதும், ஆளுநருக்கு கிடை​யாது என்​பதும்​கூட முதல்​வருக்கு தெரி​யாதது வருத்​தம் அளிக்​கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ‘நான் முதல்​வன்’ திட்​டம், மின்​வெட்டு பிரச்​சினை, விவ​சா​யிகள் பிரச்​சினை என எந்​த​வித கேள்விக்​கும் தெளி​வான பதிலை அவர் அளிக்​க​வில்​லை.

சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையை பற்றி கேட்​டதற்கு கடந்த ஆட்​சி​யில் டிஜிபி-யை நியமிக்​க​வில்லை என்​கிறார். சரி, நாங்​கள்​தான் நியமிக்​க​வில்​லை. நீங்​கள் மாற்​றம் என சொல்லி தானே ஆட்​சிக்கு வந்​தீர்​கள். ஒரே நாளில் எல்​லா​வற்​றை​யும் கிழித்து எறிந்​து​விடு​வோம் என்​றீர்​களே, இப்​போது, இந்த 40 நாட்​களில் உங்​கள் காவல்​துறை என்ன செய்து கொண்​டிருக்​கிறது? சட்​டப்​பேர​வையை சினிமா தியேட்​டர்​போல மாற்​றி​விட்​டார்​கள். விசில் அடிக்​கிறார்​கள்.

இனி அமைச்​சர்​கள் பலர் கவர்ச்சி பாடலுக்​கும் டான்ஸ் ஆடவும் ஆரம்​பித்​து​விடு​வார்​கள். முதல்வர் செயற்​கைத்​தன​மாக பேசுகிறார். இங்​கே​யும் நடிக்க ஆரம்​பித்​து​விட்​டார். சட்​டப்​பேரவை தலை​வர் இனி, ‘ஆக் ஷன், கட், ஒன்​ஸ்​மோர்’ என சொல்​ல​வும் ஆரம்​பித்​து​விடு​வார்.

அதே​போல், தலைமை செயல​கத்​துக்​குள், கேர​வன், மேக்​கப்​மேன், சண்​டை பயிற்​சி​யாளர்​கள் என அனை​வரும் வந்​து​விடுவார்​கள். சட்​டப்​பேர​வையை கிட்​டத்​தட்ட, ‘ஷூட்​டிங் ஸ்பாட்’ ஆக மாற்றி வரு​கிறார். இயக்​குந​ராக சட்​டப்​பேரவை தலை​வரும், உதவி இயக்குநர்களாக அமைச்சர்களும் செயல்படுகின்றனர்.

நாங்​கள் ஊழல் செய்​திருக்​கிறோம் என்​கிறார்​களே, ஆதா​ரம் இருந்​தால் நீதி​மன்​றத்தை நாடுங்​கள். அதை சந்​திக்க தயா​ராக நாங்​கள் இருக்​கிறோம். அதை​விட்​டு, பொத்​தாம் பொது​வாக பொதுக்​கூட்​டத்​தில், பிரச்​சார கூட்​டங்​களில் பேசுவதைப்​போல, சட்​டப்​பேர​வை​யில் பேசக்​கூ​டாது.

தேர்​தல் வாக்​குறுதி எதைப்​பற்​றி​யும் முதல்​வர் வாய் திறக்​க​வில்​லை. இந்த ஆட்சி ஒருகேலிக்​கூத்து ஆட்​சி​யாகத்​தான் இருக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார் குட்​டிக்​கதைக்கு பதிலடி உதயநிதி ஸ்டா​லின் தனது எக்ஸ் தளப் பதி​வில், “சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு பதி​லுரை என்ற பெயரில் ‘ஸ்​கிரிப்ட்​’ ட​டாக அவதூறுகளை அள்​ளி வீசி நடிப்​புத் திறனை காட்டி இருக்​கிறார் முதல்​வர்.

பேர​வை​யின் ‘லைவ் கேம​ரா’-வை, சினிமா கேமரா என்று நினைத்​துக்​ கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்​கட்​சிகளின் குறுக்​கீடு​கள் இன்றி ‘சிங்​கிள் டேக்​’-ல் ஷூட் செய்ய வேண்​டும் என்று பேர​வைத்​தலை​வர் மெனக்​கெட்​டது ஏற்​புடையது அல்ல.

எதிர்க்​கட்​சிகள் தூண்​டு​தலில் விவ​சா​யிகள் போராடு​வ​தாக விவ​சா​யிகளைக் கொச்​சைப்​படுத்​து​வது கண்​டிக்​கத்​தக்​கது. குட்​டிக்​கதை சொல்​கிறேன் என்ற அவரது உளறல், அவை மாண்​புக்கு முற்​றி​லும் எதி​ரானது.

செங்​கல்​பட்டு கோர்ட்​டில் ‘கணவனை தேடும் மனைவி கதை’ எல்​லாம் தமிழகத்​துக்கே தெரி​யும். ஆகவே, நடிகர் என்​பதை மறந்​து, இனி​யா​வது தமிழக முதல்​வ​ராக அவர்​ நடந்​து கொள்​ள வேண்​டும்​” என குறிப்​பிட்​டுள்​ளார்.