惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
美团技术团队
博客园 - 叶小钗
V
V2EX
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மீண்டு...
வெற்றி மயிலோன் · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி மீண்டும் இணைந்து செயல்படும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சி.வி.சண்முகத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. அதைத்​ தொடர்ந்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் கருத்​து ​வேறு​பாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர். மேலும், தவெக அரசின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதரவாக​வும் வாக்​களித்​தனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டவர்கள் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.

அதன்பின்னர், ஒருகட்டத்தில் தனியாக செயல்பட்ட எம்எல்ஏக்கள் பழனிசாமியுடன் இணக்கமானார்கள். அதிலும், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, ஜெயக்குமார் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் மீண்டும் இணைந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்தச்சூழலில் அவர்களுக்கு கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இன்று அதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களாக நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நிலையச் செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, எம்எல்ஏ திருத்தணி கோ.அரி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக ஏடிசி பொன் தனபாலன், செயலாளராக பெல்.இரா.தமிழரசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்ட செயலாளர்களும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட பெரும்பாலானோருக்கு பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், சி.வி.சண்முகத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.